654 உலர் வரையியல்
654 உலர் வரையியல் கோலில் புரோட்டீன் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் அது சிறந்த தீவனம் ஆகாது. உலர்புல்லைக் கொண்டு குழிப்பசுந்தீவனம் (silage) தயாரிக்கலாம். இம்முறையால் தீவனத்தின் ஊட்டசத்துக் குறையாமலும், அசெட்டிக் லாக்ட்டிக் அமிலங்களின் அளவு மாறாமலும், பூஞ்சைகளின் பாதிப்பு ஏற்படாமலும் இருக்கும். குழி தோண்டி உலர்புல்லை அதில் போட்டு மூடி விடுவர். இவ்வாறு செய்வதால் குழியினுள் வெப்பம் கூட, பாக்ட்டீரியா, பூஞ்சை முதலியவை கொல்லப் படும். இதனால் அமிலங்களின் அளவு மாறுபடாது. அயல் நாடுகளில் குழிப்பசுந்தீவனம் தயாரிக்கத் தகுந்த கட்டடங்களையே அமைத்துள்ளனர். பெரிய பண்ணைகளில் 5×4.5×2 மீ அளவுள்ள குழியைச் சமமான மேட்டுப் பகுதியில் தோண்டுவர். இதில் ஏறத்தாழ இரண்டு ஹெக்டேர் பயிரைக் கொண்டு குழிப் பசுந்தீனி தயார் செய்யலாம். பூக்கும் தருணத் தில் பயிரை அறுத்து, வாடச்செய்து பிறகு அதைக் குழியில் இடுவர். அதன்பின் மனிதரையோ மாடு களையோ கொண்டு காற்றுப்புகாவண்ணம் பயிரை மிதிக்கச் செய்வர். தரைமட்டத்திற்கு மேல் 1 மீ உலர்புல் சேர்ந்தவுடன் அதைச் சுற்றி இறுக்கமாக அணை கட்டுவர். உச்சியிலும் மண்ணால் இறுக்க மாக மூடிவிடுவர். மேற்பகுதியைக் கரை போல் அமைப்பதால் மழைநீர் பக்கவாட்டில் வடிந்துவிடும். அதைச் சுற்றி வாய்க்கால் அமைத்து நீரை வெளி யேற்றி விடுவர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட குழிப் பசுந்தீவனம் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு பக்குவம் அடைந்து கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படும். கால்நடைகள் எடுத்துக் கொள்ளும் தீவனத்தின் அளவு அதன் உடல் எடையில் இரண்டு மூன்று விழுக்காடு இருக்க வேண்டும். கறவை மற்றும் சினை மாடுகளுக்கு அதிகத் தீவனம் தேவை. தற் சமயம் கால்நடை ஆராய்ச்சியாளர்கள் இதுவரை பயன்படுத்தாத, ஆனால் ஊட்டச்சத்து அதிகமுள்ள பொருள்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அவற்றின் ஊட்ட விகிதம் கால்நடைகளுக்குத் தேலை யான அளவிலுள்ளது. மாங்கொட்டைப் பருப்பு. நாவல், தகரை,புகருவேல், சணப்புவிதைகள், மழை- மரம் காய், இலுப்பைப்பூ, இலுப்பைப் பிண் ணாக்கு முதலியவற்றைக் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளனர். 20 தி. ஸ்ரீகணேசன் அச்சகங்களில் அழுத்தத்தைச் செலுத்தி அச்செழுத்துக் களைக் காகிதங்களில் பதிக்கிறார்கள். ஆனால் இம் முறையில், அழுத்தத்தைப் பயன்படுத்தாமல், நிலை மின்சாரத்தின் (static electricity) மூலம் ஒரு தகட்டில் உள்ள எழுத்துகள் நகல்களைப் வழியாக வடிவ பெறலாம். கறுப்புப்பகுதி நிறைந்த இடங்கள் அதிக மின் னூட்டத்தையும், கரும்பகுதி குறைந்த இடங்கள் குறைவான மின்னூட்டத்தையும் பெறுகின்றன என் னும் அடிப்படைத் தத்துவம் இம்முறையில் பயன் படுத்தப்படுகின்றது. மையினால் தீட்டப்பட்ட ஓர் ஓவியத்தையோ, படத்தையோ எடுத்துக் கொள்ளலாம். இதில் கறுப் புப் பகுதியே இல்லாத வெண்மையாக உள்ள இடங் கள் எனப் பல பாகங்கள் இருக்கும். இந்த ஓவியத் E உலர் வரையியல் உலர் வரையியல் (xerox) என்பது மை பயன்படுத்தப் படாமல் செயல்படும் ஓர் அச்சு முறையாகும். படம் 2.