உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

666 உலோகக்‌ கட்டமைப்பு

666 உலோகக் கட்டமைப்பு முறையில் சில குறைபாடுகள் ஏற்படுகின்றன. வேண்டிய உருவ அமைப்பிலோ, வேண்டிய வெளிச் சுற்றிலோ குறைபாடுகள் உண்டாகின்றன. உருண்டை வடிவ அமைப்பில் ஒரு விட்டம் கூடுதலா கவும் ஒரு விட்டம் சிறியதாகவும் அமையலாம். அவ்வாறு அமையும் குறைபாடுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ள படத்தின் மூலம் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளன. இந்தக் குறைபாடுகளுக்குக் காரணம் பொது வாகச் செலுத்தலில் உள்ள வழிகாட்டிகளே ஆகும். அவை தேய்ந்து போனாலோ உடைந்து போனாலோ இந்தக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. இந்தக் குறைபாடுகளைக் கவனித்து சரி செய்து விடலாம். சில குறைகளைப் பற்ற வைத்தல் மூல மாகவும் அதிக உலோகம் செலுத்திக் கரடுமுரடான உலோகங்களைச் சாணைப் பிடித்தல் மூலமாகவும் நீக்கிச் சரியான நிலைக்குக் கொண்டு வந்து விடலாம். அ உ அ குளிர்ந்த உருட்டல் முறையில் உலோகங்களை உருவ மாக்குதல். குறைந்த எடையும் மெல்லிய கனமுமுள்ள வெட்டுத் தோற்றம் உடைய பொருள்கள் அதிக அளவில் வான் ஊர்திகளுக்கும் தானியங்கி வாக னங்களுக்கும் எந்திரசாலைகளுக்கும் தேவைப்படு கின்றன. வீடுகளுக்குத் தேவையான பொருள்களைத் தயார் செய்யவும் அவை பயன்படுகின்றன. மெல்லிய கனமுள்ளபொருள்களை வெப்ப உருட்டல் முறையில் தயார் செய்ய முடியாது. குளிர்ந்த உருட்டல் முறை உண்மையிலேயே உருட்டல் முறை அன்று. கன அளவும் உருட்டல் முறையில் உலோகங்களின் உருவ அமைப்பும் ஒரே சமயத்தில் மாறுதல் அடையும். குளிர்ந்த உருட்டல் முறையில் உருவ அமைப்பு மட்டும் மாறுதல் அடைகின்றது. கன அளவில் சிறிது அளவே மாறுதல் அடைகின்றது. கடின உருவ அமைப் பிற்குப் பல தொடர்ச்சியான உருளைத் தாங்கிகள் மூலம் உலோகம் செலுத்த வேண்டும். இவ்வகை வேலைகளை உலோக அழுத்தல் முறையிலும் செய்ய வாம். மிகுந்த அளவு உற்பத்திக்குச் சூட்டுருட்டல் (hot rolling முறையே மிகவும் சிறப்பானதாகும். இம் முறையின்படி தயாரிக்கப்படும் பொதுவான உற் பத்திப் பொருள்கள் தட்டுகள், பாளங்கள், கோல் கள், கட்டுமான உத்திரங்கள் போன்ற றவையாகும். வழவழப்பான பரப்பும், சரியான பரிமாணமும் மிகுந்த வலிமையும் கொண்ட தகடுகள், துண்டுகள். பாளங்கள்,கோல்கள் போன்ற உற்பத்திப்பொருள்கள் அவற்றின் நோக்கத்தைப் பொறுத்து மாறுபட்ட குறைவுகளுடன் தண் உருட்டல் (cold rolling) செய்யப்படுகின்றன. -எஸ். இராஜேந்திரன் சரியான வடிவம் முனைகள் சரியாக அமையவில்லை. சில இரும்பு எஃகுகளை உருட்டல் முறையில் செய்யும்போது மேல் பகுதியில் வெடிப்புகள், மேடுபள்ளங்கள் உள்ள தகடுகள் போன்ற குறைகள் ஏற்படுகின்றன. இந்தக் குறைகளைத் தூய மிருது வான உருளிகள் மூலம் சரி செய்யலாம். குறைகள் உள்ளவற்றை ஆய்வு செய்து ஒதுக்கித் தள்ளி விடலாம். உருட்டி முடிந்தவுடன் தவறான குளிரச்செய்தல் முறையினால் உட்புற, வெளிப்புற வெடிப்புகள் உண்டாகின்றன. அவற்றைச் சரியான குளிரச் செய்தல் முறையால் செம்மைப்படுத்தலாம். உலோகக் கட்டமைப்பு உலோகங்கள் கலவைகள் ஆகியவற்றின் பண்புகள் அவற்றின் கட்டமைப்பைச் சார்ந்திருக்கின்றன. திண்ம உலோகங்கள் படிக வடிவில் இருக்கும். அதாவது உலோகத்தின் அணுக்கள் முப்பரி மாணத்தில் ஒரே மாதிரியான படிக வடிவத்தில் அடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வோர் உலோகத்துக்கும் தனித்தனியே படிக வடிவம் உண்டு. ஆனால் பெரும் பாலான உலோகங்கள் மூன்றுவகைப்படிகவடிவத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும். அவை உடல்மையக் கனசதுரம் (body centred cubic structure) முகமைய கனசதுரம் (face centred cubic structure) நெருக்கி அடுக்கப்பட்ட அறுபட்டைவடிவம் (closed packed hexagonal structure) ஆகும். உடல் மையக் கனசதுரத்தின் எட்டு மூலையிலும்