உலோகக் கலவை (உலோகவியல்) 673
இரும்பைச் சார்ந்த உலோகக் கலவைகளில் இரும்புதான் அதிக அளவில் காணப்படும். முக்கிய மான இரும்புக் கலவைகளில் இரும்பும் கரியுமே காணப்படும். கரியின் அளவு எடையில் 1.3 விழுக் காடுக்குள் இருந்தால் அந்த இரும்புக் கலவைக்கு எஃகு என்றும் 2.0 மேல் 5 விழுக்காடுக்குள் இருந் தால் வார்ப்பிரும்பு என்றும் பெயரிடப்பட்டிருக் கின்றது. கரி மட்டும் உள்ள எஃகுக்கு, கரி எஃகு என்று மற்றொரு பெயரும் உண்டு. ஆனால் கரி மட்டுமல்லாமல் சுந்தகம், நைட்ரஜன், பாஸ்ஃபரஸ் போன்ற மாசும் இதில் உண்டு; மற்றொரு வகை எஃகில் கரியுடன் குரோமியம், நிக்கல் போன்ற தனிமங்களும் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றிற்குக் கலவை எஃகு என்ற சிறப்புப் பெயருண்டு. சான் றாகத் துருப்பிடிக்கா எஃகில் இரும்பு, கரி இவற்றைத் தவிர 18 விழுக்காடு குரோமியம் 8 விழுக்காடு நிக்கல் ஆகிய தனிமங்களும் அடங்கியுள்ளன. இரும்பல்லாத உலோகக் கலவைகளில், வெண் கலக் காலத்திலிருந்தே புழக்கத்தில் இருப்பது செம்பு உலோகக் கலவையாகும். பித்தளை என்ற செம்புக் கலவையில் செம்பும் துத்தநாகமும் இருக்கின்றன. பித்தளையில் செம்பின் அளவு 57 முதல் 75 விழுக் காடு வரை (எடைக் கணக்கில்) மாறுபடும். ஆனால் வெண்கலத்தில் செம்புடன் துத்தநாகத்திற்குப் பதி வாக வெள்ளீயம் 5 முதல் 10 விழுக்காடு வரை அடங்கியுள்ளது. தொடக்க காலத்தில் பித்தளைக்கும் வெண்கலத்துக்கும் உள்ள வேறுபாடு தெளிவாக எழுதி வைக்கப்படவில்லை. முதன் முதலாகச் செய்யப்பட்ட செம்பு நாணயங்கள் மாசு நிறைந்த வெண்கலமேயாகும். 1851 இல் பிரான்சில் 95 விழுக் காடு செம்பு, 4 விழுக்காடு வெள்ளீயம், 1 விழுக்காடு துத்தநாகம் கொண்ட உலோகக் கலவையால் செய்யப்பட்டவை வெண்கல நாணயங்கள் எனப் பட்டன. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் 95.5 விழுக்காடு செம்பு, 3 விழுக்காடு வெள்ளீயம், 1 விழுக்காடு துத்தநாகம் கொண்ட உலோகக் கலவை யால் செய்யப்பட்டவை இங்கிலாந்தில் செம்பு நாணயங்கள் என்றழைக்கப்பட்டன. வான ஊர்திக் கட்டுமானத் தொழில் விரிவடை யத் தொடங்கியவுடன், அடர்த்தி மற்றும் எடை குறைவான உலோகக் கலவைகளும் கண்டுபிடிக்கப் பட்டன. அவற்றில் முக்கியமானது அலுமினிய உவோகக் கலவையாகும். அலுமினியம் 2.7 கி/ க.செ.மீ அடர்த்தி கொண்டது. மக்னீசியமும் அதன் கலவைகளும் 1. 81 கி/க.செ.மீ. அடர்த்தி கொண்டவை. ஆனால் மக்னீசியக் கலவைகளின் வலிமை அலுமினியக் கலவைகளின் வலிமையை விடக் குறைவேயாகும். அலுமினியம் 660°Cவெப்பத்தி லும் மக்னீசியம் 650°C வெப்பத்திலும் உருகும் தன்மை கொண்டவை. இவற்றின் உலோகக் கலவை களின் வலிமை 300°C - 400°C வெப்ப அளவில் அ.க.5-43 உலோகக் கலவை (உலோகவியல்) 673 வேகமாகக் குறைகிறது. விமானம் வேகமாகப் பறக்கும்போது, காற்றுடன் ஏற்படும் உராய் வால், அதன் இறக்கை முதலியன மேற்கூறிய வெப்ப அளவுக்கு மேல் சூடேற வாய்ப்புண்டு. இதனால் வெப்பந்தாங்கக் கூடியதும் அதே சமயத் தில் நொய்மையானதுமான உலோகக் கலவையைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையேற்பட்டது. டைட்டேனியம் அதன் கலவைகள் ஆகியவற்றின் அடர்த்தி 4.5 கி/க.செ.மீ அளவிலும், உருகுநிலை 1660°C அளவிலும் உள்ளன. ஆனால் அவற்றை 500* C வெப்பத்துக்குமேல் பயன்படுத்த முடியாது. இவ்வாறு மனிதனின் தேவைக்கு ஏற்றவாறு அவ்வப் போது புதிதாக உலோகக் கலவைகள் கண்டு பிடிக்கப்படுகின்றன. தாங்குதளக் கலவை. இவ்வுலோகக் கலவைகள் மற்றொரு பொருளின் பரப்பில் சறுக்கி அல்லது உருண்டு செல்லுமாறு தொடர்பு ஏற்படுத்தப் பயன் படுகின்றன. பெரும்பாலான தாங்குதள உலோகக் சுலவைகளில் கடினமான உலோகக் கூட்டுத் துகள்கள் மென்மையான பகுதிகளில் பதிந்திருக்கும். பாரம் தாங்குவது மென்மைப் பகுதியின் வேலையாகும். தேய்மானத்தைக் கட்டுப்படுத்துவது கடினப் பொருளின் வேலையாகும். பாபிட் என்பவரால் உருவாக்கப்பட்ட வெள்ளீய (tin) உலோகக் கலவை, தாங்குதளக் கலவைக்குச் சிறந்த சான்றாகும். இதில் 90 விழுக்காடு வெள்ளீயம் 4.5 விழுக்காடு ஆண்டி மணி 4.5 விழுக்காடு செம்பு அடங்கியுள்ளன. இக கலவையில் Sb Sn மேலும் Cu Sn என்ற வேதிக் கடினக் கூட்டுப் பொருள்கள் வெள்ளீயத்தில் சேர்க் கப்பட்டுள்ளன. இக்கலவையில் வெள்ளீயத்துக்குப் பதிலாக ஈயம் மட்டும் கலந்தால் கிடைக்கும் புதுக் கலவையின் விலை முன்னதை விடக் குறைவாகும். 1.6 விழுக்காடு நிக்கல், அல்லது 1 விழுக்காடு வெள்ளி 0.75 விழுக்காடு செம்பு கொண்ட காட்மிய உலோகக் கலவையும் தாங்குதளக் கலவையாகப் பயன்படுகிறது. ஆனால் இக்கலவை எஃகுத் தளத் தின்மேல் ஒரு சிறிய இழையாகப் பரப்பப்பட்டுப் பயன்படுகிறது. அதிக எடை தாங்குவதற்காக 70 விழுக்காடு செம்பு 30 விழுக்காடு ஈயம் கொண்ட உலோகக்கலவை தாங்குதளமாகப் பயன்படுகிறது. 3-4 விழுக்காடு ஈயம் கொண்ட விமானங்களில் தாங்கு தளமாகப் பயன்படுகிறது வெண்கலமும் காரீயமும் உலோகவியல் துகள் முறையில் நுண் துளையுடைய தாங்கு தளமாக உருவாக்கப்படுகின்றன. இவற்றின் நுண்துளைகள் மசகு எண்ணெயை உறிஞ்சிக் கொள்வதால், தாங்கு தளம் பயன்படும்போது தனியே எண்ணெய் இட வேண்டியதில்லை. எனவே இவற்றிற்கு எண்ணெய் அற்ற தாங்குதளம் என்று பெயர். வெள்ளிக் கலவை அரிமான எதிர்ப்பு உலோகக்கலவை. வேதி மாறு பாட்டினால் சீர்கெடாத உலோகங்களான தங்கம்,