உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678 உலோகக்‌ கார்போனைல்‌

678 உலோகக் கார்போனைல் காந்தப் பண்பால் சிலிகன் மிகச்சிறிய விளைவை ஏற்படுத்தினாலும் அது சிறந்த மின் தடைப்பொரு ளாக விளங்குகிறது. உலோகக் கலவைகள் மிகுந்த காந்த ஏற்புத்திறனைப் பெற்றிருப்பதால், மின் உற்பத்திக் கருவிகளில் காந்த உலோகக் கலவைகள் பயன்படுகின்றன. அல்நிக்கோ உலோகக் கலவைகள் செயற்கைக் காந்தங்கள் தயாரிக்கப் பெருமளவில் பயன்படுகின்றன. எ.கா: அல்நிக்கோ - 4. அருமண் உலோகங்களும் காந்த உலோகக் கலலைகளும் தயா ரிக்கப் பயன்படுகின்றது. எ.கா: RCO.. இதில் R சமேரியம், லாந்தனம், சீரியம் முதலியன. விலை உயர்ந்த உலோகக் கலவை. விலை உயர்ந்த தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களும், உலோகக் கலவைத் தயாரிப்பில் பெரும்பங்கு பெறுகின்றன. நாணயமாகவும், நகைகளாகவும் பயன்படுவதுடன் மின்கருவிகளிலும் பெரிதும் பயன்படுகின்றன. இவ் வுலோகங்களில் மாசின் அளவு காரட் என்னும் அலகில் குறிக்கப்படும். மஞ்சள் தங்கம் என்ற கலவையில், Au-Ag-Cu = 2:1:1 என்ற விகிதத் தில் உள்ளது. வெண்தங்கத்தில் 18 காரட் தங்கம் மட்டுமே உள்ளது. சில உடல் உறுப்புக்கான லோகக் கலவை. உலோகக் கலவை உடல் உறுப்புகள் செய்யப் பயன் படுகின்றது. குறிப்பாக எலும்பு முறிவுகளைச் சரி செய்யும் கருவிகள் உலோகக் கலவையால் ஆன வையே. விட்டாலியம் உலோகக் கலவை இவ்வகை யில் மிகச் சிறப்பு வாய்ந்தது. இது கோபால்ட், குரோமியம், மாலிப்டீனம், நிக்கல் போன்ற உலோ கங்களின் கலவையாகும். டை டேனியம் உலோகக் கலவையும் உடல் உறுப்புகளைத் தயார் செய்யப் பயன்படுகின்றது. இதயத்திற்குச் செயற்கை வால்வு தயாரிக்கவும் பயன்படுகின்றது. இக்கலவையில் டைட் டேனியம் ஆக்சைடு மேற்பூச்சாகப் படிவதால்,கலவை அரிமானம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்கிறது. எனினும் இவ்வுலோகக் கலவையின் எந்திரவியல் பண்புகள் நிறைவாக அமையாததால், இடுப்பு போன்ற அசைவுமிக்க பகுதி உறுப்புகள் செய்யப் பயன்படுவதில்லை. வடிவம் மாறா உலோகக் கலவை. இவ்வகை உலோகக் கலவைகள் உயர் வெப்ப நிலையில் ஒரு வடிவத்தையும், குறைந்த வெப்பநிலையில் வேறு வடிவத்தையும் பெற்றிருக்கும். மீண்டும் வெப்ப நிலை உயரும்போது அதே வடிவத்தை மீண்டும் பெறும். 47.5 விழுக்காடு கேட்மியம் கலந்த தங்க உலோகக் கலவை, இவ்வகையில் முதன் முதலில் கண்டறியப் பட்டது. இது மின்னியல் துறையில் பெரிதும் பயன் படுகின்றது. மீ கடத்துதிறன் உலோகக் கலவை. உலோகம் சில வெப்பநிலைக்குக் கீழே குளிர்விக்கப்படும்போது. அதன் மின்கடத்து திறன் மிகுதியாக உயர்ந்திருப்பது அறியப்பட்டது. காமர்லிங் ஒன்னஸ் என்பார் இம் மீகடத்துதிறனை முதலில் கண்டறிந்தார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாதரசத்தை, 4.15 k க்குக் கீழ் குளிர்விக்கும்போது அதன் மின்தடை பூச்சியமானது. பின்பு இப்பண்பு மற்ற உலோகங் களிலும் கண்டறியப்பட்டது. நியோபியம் வெனேடி யம் ஆகிய உலோகங்களில் உலோகங்களில் இப்பண்பு மிகவும் பயனுடையதாகும். பி.இ.எம். லியாகத் அலிகான் உலோகக் கார்போனைல் கார்பன் மோனாக்சைடு உலோகங்களுடன் வினை புரிந்து விளையும் சேர்மங்கள் உலோகக் கார்போ னைல்கள் (metal carbonyls) ஆகும். கார்பன்மோனாக் சைடில் தனி இரட்டை (lone pair) எலெக்ட்ரான்கள் உள்ளன. இத் தனி இரட்டை, எலெக்ட்ரான்களை உலோக அணுக்களுக்கு வழங்கி ஈதல் பிணைப்பை (coordinate bond) உண்டாக்குகிறது. எனவே கார்பன் மோனாக்சைடு ஒரு சிறந்த ஈந்தணைவியாகச் (ligand) செயல்படுகிறது. உலோகக் கார்போனைல்கள் பெரும் பாலும் குறைந்த உருகுநிலை கொண்ட படிகங்கள்; ஏனையவை நீர்மங்களாக உள்ளன. இவை கரிமக் கரைப்பான்களில் கரைகின் றன; ஆனால் நீரில் கரைவ தில்லை. இவை சிதைவடையும்போது உலோகமும், கார்பன் மோனாக்சைடும் வெளிப்படுகின்றன. உலோகக் கார்போனைல்கள் அதிக வினைபுரியும் தன்மை கொண்டவை. ஹாலோஜன், காரம், அமீன், பாஸ்ஃபீன், சயனைடு, நைட்ரிக் ஆக்சைடு, அசெட்டிலீன், ஒலிஃ பீன், அரோமாட்டிக் சேர்மம், கார உலோகம் போன் றவை கார்பன் மோனாக்சைடை முழுதுமாக அல்லது பகுதியாக வெளியேற்றி வினை புரிகின்றன. தனிம வரிசை அட்டவணையில், எட்டாம் தொகுதி இடை நிலை உலோகங்கள் (transition elements) எளிதில் உலோகக் கார்போனைல்களைக் கொடுக்கின் றன. இடைநிலைத் தனிமங்களில் d ஆர்பிட்டால்கள் காலி யாக இருப்பதால்,கார்பன் மோனாக்சைடு வழங்கும் இரட்டை எலெக்ட்ரான்களை அவை ஏற்றுக்கொள் கின்றன. வெற்றிடமாக உள்ள d ஆர்பிட்டால்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஈதல் பிணைப்புகள் உண்டா கின்றன. உலோகக் கார்போனைல்களை, இடைநிலை உலோகங்களுடன் கார்பன் மோனாக்சைடை G நேரடி யாக வினைப்படுத்தியும் உலோகச் சேர்மங்களை ஒடுக்கியும் பெறலாம். சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Ni +4 CO - Fe + 5 CO Ni(CO). Fe(CO),