688 உலோகப் பொறிவினைமை
ஆற்றல் ஆற்றல். 688 உலோகப் பொறிவினைமை ரான்கள் உள்ளடங்காமல் (delocalised) இருப்பதால் கம்பியாக நீட்டவும், தகடாக அடிக்கவும் இயல் கிறது. -த.சுவாமிநாதன் 25 L1 அணுவின் 2s அணுஆர்பிட்டால் 25 2$ 25 Li2 மூலக் கூறின் மூலக்கூறு Li அணுவின் 25 ஆர்பிட்டார் ஆர்பிட்டால்கள் மூலக்கூறு ஆர்பிட்டால்கள் உருவாதல் (அ) Liz மூலக்கூறு (கற்பிதமானவை) (ஆ) Lis மூலக்கூறு (கற்பனையானவை) 25 மேலும், சங்கிலித்தொடரில் அணுக்கள் சேரும் போது உண்டாகும் மூலக்கூறு எலெக்ட்ரான் மண்ட லங்கள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி இருக்கும். இதுவே பட்டை அமைப்பு எனப்படுகிறது. இவ்வாறு உண் டாகும் பட்டையில் கீழ்ப்பகுதி எலெக்ட்ரான்களால் நிரம்பியும், மேல்பகுதி வெறுமையாகவும் இருக்கும். முப்பரிமாணத்திலும் இதே அடுக்குகள் தொடரும். மின்புலத்தில் கீழ்ப்பகுதியில் உள்ள எலெக்ட்ரான்கள் ஆற்றலைப் பெற்று மேல்பகுதியிலுள்ள மேல்பகுதியிலுள்ள வெற்று எலெக்ட்ரான் மண்டலங்களுக்கு மின்னோட்டத்தைக் கடத்தும். இதுவே உலோகங்கள் எளிதில் கடத்தி களாக இருப்பதற்குக் காரணமாகும். இதுபோன்றே வெப்பக்கடத்தலும் நிகழ்கிறது. ஒளிக்கற்றைகள் பாய்ச்சப்பட்டால், கீழ்ப்பகுதி யிலுள்ள ஆற்றல் குறைந்த ஆர்பிட்டால்களில் உள்ள எலெக்ட்ரான்கள், கிளர்வுற்று உயர் ஆற்றல் நிலைக் குத் தாவி, பின் ஆற்றலைப் பல அலை நீளங்களில் வீசிக் கீழ்ப்பகுதிக்குத் திரும்புவதால் உலோகங்கள் பளபளக்கின்றன. உலோகக் கூட்டமைப்பில் எலெக்ட் உலோகப் பொறிவினைமை இது உலோகப் பண்புகளில் ஒன்றாகும். உலோகங் களின் மேலுள்ள இழைகளை உளிகளால் தகர்த்து ஏற்ற வடிவமைக்கும் ஏற்புத்திறனையே லாகப் பொறிவினைமை (machinability of metals) எனலாம். உலோகத் தன்மைகளைப் பொறுத்துப் பொறி வினைமை அல்லது வெட்டுந்தன்மையின் தரம் நிர்ண யிக்கப்படுகிறது. புதிய கட்டுறுதியான உலோகக் கலவைகள், தூய்மையான வலிமையான வெப்ப வேதிமுறைச் செயல்பாடு, கட்டுக்கடங்கிய வேதியியல் பகுப்பாய்வு ஆகியவற்றின் ஆய்வுகள், உலோகப் பொறிவினை மையை ஊகித்து விட்டுவிடுவதில்லை. உலோகப் பொறிவினைப் பொருள்களின் நுண் அமைப்பு, கடினத்தன்மை, இழுவலிமை ஆகியவற்றைப் பற்றிய ஆழ்ந்த ஆய்வின் மூலமாக நுட்பமாகத் தீர்மானிக் கப்படுகிறது. ஆய்வகங்களில் வேறுபட்ட பொருள்களை, வெப்ப வேதியியல் செயல்பாட்டிற்கு உட்படுத்தும் போது, பலவகையான நுண் அமைப்புகள் உருவா கின்றன. பின்னர் அப்பொருள்கள் அமில அறிப்பு மெருகேற்றல் ஆகியவற்றிற்கு உட்படுகின்றன. இறுதி யாக இத்துண்டுகள் கடைசல் எந்திரத்தில் பொருத் தப்பட்டு கட்டுக்கடங்கிய வேகம், ஊட்டம், வெட்டு ஆழம் ஆகிய சூழ்நிலைகளில் உலோகப் பொறி வினைமை ஆய்வுகள் செய்யப்படுகின்றன. பொறிவினைமைத் தரமிடல். பொறிவினைமைத் தரமிடலில், தரமிடப்பட வேண்டிய பொருளை SAE - 1112 எஃகுடன் ஒப்பு நோக்குதலே நிலையான முறையாகும். SAE - 1112 என்பது மிருதுவான, எளிய எந்திர வினை எற்காகும். இது கடையாணி, திருகு போன்றவற்றை தயாரிக்க உதவுகிறது. உற்பத்தித் துறையில் ஒப்பு நோக்குதலுக்கு இவ்வெஃகு தரமான, ஏற்ற பொருளாகும். உயர் வேக எஃகுக் கருவியைக் கொண்டு வெட்டும் போது SAE-1112 எஃகின் பொறிவினைமை நூறு என்று தரமிடப்பட்டுள்ளது. பிற அனைத்துப் பொருள்களின் பொறிவினைமை அவற்றின் எளிய அல்லது கடின எந்திர வினையைப் பொறுத்து நூறுக்குக் குறைவாகவோ, அதிக மாகவோ தரமிடப்படுகின்றது.