694 உலோகம்
694 உலோகம் இழைத்தல் தாதுக்களுக்கு பொடியாக்கப் செறிவூட்டப்படுகிறது. சல்ஃபைடு நுரை மிதப்பு முறை சிறந்ததாகும். பட்ட தூளுடன் நீரையும் பைன் எண்ணெயையும் சேர்த்துக் காற்றைச் செலுத்தி நன்கு கலக்கும்போது உண்டாகும் நுரையுடன் உலோகத் தனிமத்தின் துகள்கள் மேலே மிதக்கும். மண் துகள்கள் அடியில் தங்கிவிடும். காந்தப் பண்புகளைக் கொண்ட தாதுக்களைப் பிரிப்பதற்கு மின்காந்தப் பிரிப்பு முறை பயன்படு கிறது. இம்முறையில் தூளாக்கப்பட்ட தாது காந்தப் புலத்தில் உள்ள கப்பிகள் மீது படுக்கை வசத்தில் நகரும் பட்டை மீது எடுத்துச் செல்லப்படும் போது காந்தப் புலம் உள்ள கப்பியின் அருகில் ஈர்க்கப்படுகின்றன. ஆனால் மண் பொருள்கள் அவ்வாறு ஈர்க்கப்படாமல் கீழே விழுகின்றன. காந்த ஈர்ப்பு நீங்கிய பின் தாது தனியே விழுகின்றது. அவை உருகு நீற்றுதல். உலோகத் தாதுவை அதன் நிலைக்குக் கீழ் காற்றுப்படாமல் அதிக வெப்பப் படுத்துதலுக்கு நீற்றுதல் என்று பெயர். இதனால் தாதுவிலிருக்கும் ஈரம், எளிதில் ஆவியாகும் பொருள் கள் ஆகியவை நீங்குகின்றன. கார்பனேட் தாதுக் களுக்கு இம்முறை பயன்படுகிறது. வறுத்தல். செறிவூட்டப்பட்ட தாதுவில் இருக்கும் கந்தகம், கார்பன் டைஆக்சைடு, ஈரம் போன்ற வற்றைப் போதிய அளவு காற்றில் வெப்பப்படுத் தலுக்கு வறுத்தல் என்று பெயர். உருக்கிப் பிரித்தல். உருக்கிப் பிரித்தல் முறை யில் செறிவூட்டப்பட்ட தாதுடன் ஆக்சிஜன் ஒடுக்கி யும், இளக்கியும் (flux) சேர்க்கப்பட்டு வெப்பப்படுத் தப்படுகின்றன. SnO, + 2 C + இளக்கி → Sn + 2 CO + கசடு உலோகங்கனைப் பிரித்தல். மாசு நீக்கப்பட்ட தாதுவிலிருந்து/ உலோகங்களைப் பிரித்தெடுக்க உலர் முறைகள், ஈர முறைகள், மின்பகுப்பு முறைகள் போன்ற பல்வேறு முறைகள் உள்ளன. தாதுக்களி லிருந்து பிரித்தெடுக்கப்பட்ட உலோகங்கள் முற்றி லும் தூய்மையாக இரா. அவற்றுடன் குறைந்த லிழுக்காடு அளவு மற்ற உலோகங்களும். கரைந்த வளிமங்களும் இருக்கும். எனவே தூய உலோகத் தைப் பெறக் காய்ச்சி வடித்தல் முறை, ஆக்சிஜ னேற்ற முறை, கழியிட்டுக் கலக்கல் முறை, மின் னாற பகுப்புப் போன்ற முறைகள் உதவுகின்றன. குறைந்த கொதிநிலை கொண்ட உலோகங்கள் (எ.கா: துத்தநாகம், பாதரசம்) காய்ச்சி வடித்தலால் தூய்மையாக்கப்படுகின்றன. வெள்ளியுடன் பிரித் தெடுக்கப்பட்ட நிலையில் காரீயம் மாசாகக் கலந் திருக்கும். எனவே அதனை எலும்புச் சாம்பலால் செய்யப்பட்ட குழிவான மூசையில் இட்டுக் காற்றுப் படத் திறந்து வைத்துச் சூடாக்கும்போது காரீயம் அதன் ஆக்சைடாக மாறுகிறது. இம்முறைக்கு ஆக்சி ஜனேற்ற முறை என்று பெயர். 2 pb + Os 2 PbO தாமிரத்திலிருந்து தாமிர ஆக்சைடுகளை நீக்கக் கழியிட்டுக் கலக்கு முறை பயன்படுகிறது. இம்முறை யில் உருகிய உலோகக் கலவை பச்சைக் கழி கொண்டு நன்கு கலக்கப்படுகிறது. கழியிலிருந்து வெளியேறும் வளிமங்கள் (மீத்தேன் போன்றவை) ஆக்சைடுகளை ஒடுக்குகின்றன. மின்னாற்பகுத்தலில் மாசு கலந்த உலோகம் நேர்மின் முனையாகவும். தூய உலோகம் எதிர்முனையாகவும் இருக்கப் பொருத்தமான உலோக உப்புக் கரைசலில் வைத்து மின்சாரத்தைச் செலுத்தும்போது தூய்மையற்ற உலோகம் கரைசலில் கரைந்து எதிர்மின்வாயில் படிகிறது. உலோகங்களைத் தூய்மைப்படுத்த இம் முறை மிகவும் சிறந்ததாகும். உலோகம் இழைத்தல் த.தெய்வீகன் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பல பொருள் கள் உலோகத் தகடுகளால் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, குழாய் இணைப்பு கூம்புப்பகுதி, கூரைத்தகடு, எண்ணெய் டின், வாகனங்களுக்குத் தேவையான கதவு, சமையலுக்குத் தேவைப்படும் வாணலி, தட்டு, மூடி ஆகியவை உலோகத் தகடு களால் ஆனலை. இவற்றை உருவாக்கப் பயன்படும் உலோகங்கள் நீட்சித் தன்மை பெற்றிருத்தல் இன்றி யமையாததாகும். அப்பொழுதுதான் வளைக்கப்படும் பகுதிகளில் வெடிப்பு ஏற்படாமலிருக்கும். உலோகத் தகடுகளைக் கொண்டு பொருள்களை உருவாக்கும் முறைகளைச் சாதாரணமாகக் கைவினைக் கருவி களைப் பயன்படுத்தி உருவாக்கும் முறை, ஆற்றலால் இயக்கப்படும் அழுத்திகளைப் பயன்படுத்தி உரு வாக்கும் முறை எனப் பிரிக்கலாம். இவற்றில் மெல்லிய முன்னது தகடுகளைக் கொண்டு சிறிய பொருள்களை உருவாக்கவும், பின்னது மிகுதியான ஆற்றல் தேவைப்படும் பெரிய பொருள்களைச் செய்யவும் கையாளப்படும். இவற் றில் சுழற்றுவதற்காக எந்திரத்தையும் அதே சமயத் தில் கைவினைஞரின் திறமையையும் பயன்படுத்தி உருவாக்கும் முறையான உலோகமிழைத்தல் (metal spinning) என்ற முறையும் தனியிடத்தைப் பெறு கிறது. உலோகமிழைத்தல், வட்ட வடிவ உலோகத் தகடுகளைப் பயன்படுத்தித் தேவைப்படும் பொருள்