உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இறைச்சி இனக்‌ கோழி வளர்ப்பு

52 இறைச்சி இனக் கோழி வளர்ப்பு கி முன் அடைகருவிகளைப் பொருத்தி அவை சரியாக வேலை செய்கின்றனவா என்று கவனிக்க வேண்டும். முதல் வாரத்தில் இருந்து வெப்பத்தைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும். கோழிகள் நலமாக இருப்பதிலிருந்து சரியானபடி வெப்பம் அளிக்கப்படு கிறதா என்று அறியலாம். அடைகருவி விளக்கு அணைந்த பின் கோழிக் குஞ்சுகள் ஒத்த அளவிலும் பரவலாகவும் இருக்க வேண்டும். அடை கருவியி லிருந்து தொலைவில் விலகியிருந்தால் கருவியின் வெப்பம் மிகுதி என்றும், குஞ்சுகள் நெருக்கமாக அடைந்து காணப்பட்டால் வெப்பம் குறைவு றும் தெரிந்து கொள்ளலாம். என் வலிமை தடுப்பூசி போடும் நாள்களிலும், குன்றிய காலங்களிலும் கூடுதலான வெப்பம் தேவைப்படும். தேவையான வெப்பம் அளிக்க மூன்று அல்லது எட்டு வாரங்கள் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப அடைகருவி பயன்படுத்தப்படுகிறது. அடை கருவியைச் சுற்றிப்பதினைந்து அல்லது பதினெட்டு அங்குல உயரமுள்ள தகடுகளை அரணாக அமைத்துக் கோழிக் குஞ்சுகளை வெப்பப் பகுதிக்குள்ளேயே இருக்குமாறு பாதுகாக்க வேண்டும். இந்த அரண் குளிர்காலத்தில் கருவியிலிருந்து எழுபத்தைந்து சென்டிமீட்டர் தொலைவிலும், கோடையில் நூற்று ஐம்பது சென்டிமீட்டர் தொலைவிலும் இருக்கலாம். நாளுக்கு நாள் இந்த அரணை விரிவு செய்து, வளரும் கோழிக் குஞ்சுகளின் தேவைக்கேற்ப மிகுதியான இடமளிக்க வேண்டும். தீவனம், தண்ணீர், வெப்பம் இருக்கும் இடங்களைக் கோழிக் குஞ்சுகள் நன்றாக அறிந்து கொண்ட பிறகு இந்த அரணை நீக்கிவிடலாம். பொதுவாக மூன்று அல்லது ஏழு நாள்களில் அரண் நீக்கப்படுகிறது. அவ்விதம் நீக்கப்பட்ட தகடுகளை அறைகளின் மூலைகளில் அடையச் செய்யவேண்டும். ஓர் அடைகருவியில் ஏறத்தாழ இருநூற்று ஐம்பது குஞ்சுகளை அடைகாக்கலாம். ஒரு குஞ்சுக்கு இருபது சதுர அங்குல அடைகருவி இடம் தேவை. தீவனத்தொட்டிகளை அடைகருவிக்கு வெளியே யும் அரணுக்கு உட்புறமாகவும் ஒத்த இடைவெளி விட்டு அமைக்க வேண்டும். முதல் இரண்டொரு நாள்களுக்குத் தீவனத்தை அலுமினியத் தட்டில் வைத்தல் வேண்டும். இக்காலத்தில் தீவனம் வீணா காமல் இருக்க நாள்தோறும் நான்கு அல்லது ஐந்து முறை ஓரிரு பிடி அளவு தீவனம் தட்டின் மத்தியில் இட வேண்டும். மிகுந்த தீவனத்தைப் போடுவதால் அழிவு பெருகும். தண்ணீர்த் தொட்டிகளை 2.5 செ.மீ. உயரமுள்ள பலகையின் மேல் வைத்தால், சுற்றுப்புறம் ஈரம் ஆகாமல் இருக்கும். தீவனத் தொட்டிகளின் இடைவெளிகளில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்க வேண்டும். இறைச்சி இனக் கோழிக்குத் தேவையான இடம், தீவனம், தண்ணீர்த் தொட்டிகளின் அளவு இவை அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இறைச்சி இனக் கோழித் தீவனம். இறைச்சி இனக் கோழிகளுக்கு இரு வகையான தீவனங்கள்கொடுக்கப் படுகின்றன. முதல் ஐந்து அல்லது ஆறு வாரங்கள் வரை இறைச்சி இனக் கோழிகளுக்கு உயர் புரதச் சத்துள்ள தீவனமும், பிறகு எரிசக்தி மிகுந்த தீவன மும் தரப்படுகின்றன. தீவனத்தில் புரதச் சத்து விகித முறை, கோழியின் வயது, எடை, பருவ நிலைக்கு ஏற்ப அமைய வேண்டும். புரதச் சத்து மிகவும் இன்றியமையா அமினோ அமிலம் அடங்கியுள்ளதாக இருக்க வேண்டும். மித்தயோலின், சிஸ்ட்டின், லைசின், டிரிப்ட்டோஃபேன் ஆகிய அமினோ அமிலங்கள் சாதாரணமாகத் தீவனத்தில் குறைந்து காணப்படும். எனவே, அவற்றின் அளவுகள் தீவனத்தில் சரியாக இருக்கின்றனவா என்று கண்காணிக்கவேண்டும், தவிர கோடைக் காலங்களில் கோழிகள் தீவனத்தை குறைவாக உண்ணும். எனவே, மேற்கூறிய அமினோ அமிலங்களின் விழுக்காட்டு அளவுகள் தீவனத்தில் தரைப் பரப்பு வயது சதுர அங் குலம்/குஞ்சு சதுரமீட்டர் அளவில் வைக்கக்கூடிய குஞ்சுகளின் எண்ணிக்கை தீவனத்தொட்டி ஒரு குஞ்சுக்குத் 100 குஞ்சு தேவையான டம் அங்குலம் செ.மீ கள் (18 அங்குல களுக்குத் தேவை யான வட்டத் தீவனத் தொட்டி தண்ணீர்த்தொட்டி ஒரு குஞ்சுக்குத் தேவையான தண்ணீர்த்தொட்டி டம் அங்குலம் செ.மீ விட்ட முடையவை) 0.6 0.5 20 1.0 2.5 100 1. 1.0 2.5 7 வயதிற்கு மேல் 1.5 10 2.0 5.0 75 2.0 2.5