54 இறைச்சி உணவு விலங்குகள்
54 இறைச்சி உணவு விலங்குகள் பால் மட்டும் ஊட்டப்பட்டு வளர்க்கப்படுகின்றன. அவற்றின் வயது இரண்டு முதல் நான்கு மாத மாகும்போது எடை ஏறத்தாழ அறுபத்தெட்டு கிலோ இருக்கும். அப்போது அவை இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. குறிப்பாகக்கன்றுகள் இறைச் சிக்காக வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் குறிப்பாகத்தமிழ்நாட்டில் இறைச்சி இனத்துக்கென்று தனி மாட்டினம் இல்லை. இந்தி யாவில் பசுக்கள் கொல்லப்படுவது தடை செய்யப் பட்டுள்ளது. இதனால் ஆடு, கோழி, முயல் ஆகிய இனங்களில் இறைச்சிக்காக விரைவில் எடை கூடும் இனங்கள் தோற்றுவிக்கப்பட்டுப் பெருகுவது போல மாட்டினத்தில் முன்னேற்றம் செய்ய இயலாமல் உள்ளது. ஆடு. செம்மறி ஆட்டினத்தில் பார்டர் லீசெஸ் டர், செவியாட், ஷஃப்ஃபோல்க், ஆக்ஸ்போர்டு அல்லது ஹேம்ப்ஷயர், ரைலேண்டு, ஷவுத்டவுன், ஸ்காட்டிஷ் பிளாக்ஃபே, ஹீல், ரோம்னி மார்ஷ். வேல்ஸ் மவுண்டன், கரிரிடேல் ஆகியவை சிறந்த இனங்கள் ஆகும். இந்தியாவில் நெல்லூர், யாலாக் அல்லது தெங் குறி, பன்னூர், மாண்டியா ஆகிய இனங்கள். குறிப் பாகத் தமிழ்நாட்டில் மேச்சேரி தரமான இறைச் சியை அளிக்கின்றது. மேலும் தமிழ்நாட்டில் சென்னை சிவப்பு, இராமநாதபுரம், கீழக்கரை, வேம்பூர், நெல்லூர் ஆகிய இனங்களும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் சேலம் மாவட் டத்தில் மேச்சேரிக்கு அருகில் பொட்டநேரி என்ற இடத்தில் மேச்சேரி இனச்செம்மறி ஆட்டிற்கென்று ஆய்வு நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.வெள் ளாடுகளில் அயல்நாட்டு இனங்கள் டோக்கன்பெர்க், சானன், ஆல்பைன், நுபியன், அங்கோரா ஆகியவை சிறந்தவை. இவை அதிக பால் அளிக்கும் இனங்கள்; இவை இந்திய இனங்களோடு சேர்த்துப் புதிய இனத்தை உருவாக்கி அதன் மூலம் அதிக இறைச்சி, அதிகமான பால், அதிக குட்டிகள் ஈன ஆய்வுகள் நடந்து வருகின்றன. வெள்ளாடுகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வும், பாலுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்தி யாவில் இருக்கும் வெள்ளாடுகளின் இனங்கள் இமய மலைப் பகுதியில் ஹிமாலயம், பாஷ்மினா, சேகு இனங்களும் வடக்குப்பகுதியில் ஜமுனாபாரி, பீட்டல், பார்பரி இனங்களும் மத்திய பகுதியில் மார்வாரி, மேஷனா, ஜேல்வாடி, பேராரி கத்திய வாரி இனங்களும் தெற்குப் பகுதியில் சுநடி டெக் கானி, ஒஸ்மளப்பாடி, மலபாரி இனங்களும் கிழக்குப் பகுதியில் வங்காளம், அஸ்ஸாம் மலை ஜாதி இனங் களும் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாட்டின் முடி, விரிப்புகள் செய்யப் பயன்படுகின்றது இவற்றில் அங்கோரா இனத்தின் இறைச்சி அதன் சுவையான தன்மையினால் சிறப்புற்று மிகுதியான விலைக்கு விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இறைச்சிக் காகத்தனியான வெள்ளாட்டினம் ஏதும் இல்லை. நாட்டு இனங்கள்தாம் உள்ளன. வெள்ளாடுகளை யும், செம்மறி ஆடுகளையும் காயடித்து விடுவதால் இறைச்சி தரமுள்ளதாகவும் எடை அதிகமாகவும் இருக்கும். பன்றி. இவ்வினம் மிகுதியான இறைச்சி அளிப் பதில் முதன்மை வகிக்கிறது. பன்றிகள்ஒன்பது மாதத் தில் பருவத்துக்கு வந்துவிடும். ஒரு பன்றி பத்துக் குட்டிகள் வரை ஈனும்; அவ்வாறு ஓராண்டில் இரு முறை ஈனும். வெஸ்ஸக்ஸ் சேடில்பேக், யார்க்ஷயர், பீயூட் ரெயின், லேண்ட்ரேஸ் ஆகியவை நல்ல இறைச்சி உடைய அயல்நாட்டுப் பன்றி இனங்களாகும். உண்ட உணவை இறைச்சியாக மாற்றும் தன்மையில் பன்றி கள் முதன்மை வகிக்கின்றன. இந்தியாவில் தனித்த பன்றி இனம் ஏதும் இல்லை. நாட்டு இனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் இந்தியாவில் வெளிநாட்டுப்பன்றி இனங் களைக் கொண்ட பன்றிப் பண்ணைகள் மிகுதியாக உள்ளன. குறிப்பாக யார்க்ஷயர் இனம் மிகுதியாக உள்ளது. பா நாச்சி ஆதித்தன் நூலோதி. Thomton, Hand Book of Anima Husbandry, ICAR Publication, New Delhi, 1977. இறைச்சி உணவு விலங்குகள் மனிதர்களுக்கு உணவாகும் விலங்கினங்கள் இறைச்சி உணவு விலங்குகள் என்றழைக்கப்படுகின்றன. த் தகைய விலங்கினங்கள் பெரும்பாலும் தாவர உணவு வகைகளையே உண்டு வாழும் விலங்குகளாகும். மாடு, எருமை, ஆடு, மான், குதிரை, ஒட்டகம் பன்றி, கங்காரு, முயல் போன்ற இவற்றுடன் கோழி வான்கோழி, வாத்து முதலியவையும்மனிதர்களுக்குப் பெருமளவில் இறைச்சியை அளிக்கின்றன. ஊன் உண்ணும் விலங்கினங்களான நாய், பூனை போன்றவற்றின் இறைச்சியை ஜெர்மன் நாட்டில் பல நகரங்களில் வாழும் பணியாளர்கள் உட்கொள் கின்றனர். இந்தியாவில் நாடோடி மக்கள் இத்தகைய இறைச்சியை உட்கொள்கின்றனர். ஐரோப்பிய நாடு களில் குதிரை, கழுதை, கோவேறு கழுதைகளின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்துகின்றனர்.