உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726 உழவாரக்குருவி

726 உழவாரக்குருவி காணப்படுவதை ராடார் கருவிகளின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். அனைத்து உழவாரக் குருவிகளும் ஏறக்குறைய தோற்றத்தில் ஒரே மாதிரியானவை. உழவாரக் குருவிகளின் புதை படிவங்கள் இயோசின் காலக் கட்டத்திலிருந்து கண்டறியப்பட்டுள்ளன. பனை உழவாரக் குருவி. சிட்டுக் குருவி போன்ற தோற்றமுடைய இப்பறவை 17 செ.மீ. நீளம் வரை வளர்கிறது. சிறகுகள் 13 செ.மீ. வரை வளர்கின்றன. பழுப்பு நிற உடலுடையது. இரண்டாகப் பிளவு பட்ட குறுகிய வாலுடையது. பறக்கும்போது சிறகு கள் வளைந்து வில்போலவும், உடல் அதில் பூட்டப் பட்ட அம்பு போலவும் தோற்றமளிக்கின்றன. ஆண், பெண் ஆகிய இருவகைப் பறவைகளும் புறத் தோற்றத்தில் ஒரே மாதிரியானவை. ஆப்பிரிக்காவின் தென்பகுதி, மடகாஸ்கர் தீவு, தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவிலிருந்து பிலிப் பைன்ஸ் தீவுகள் வரை இப்பறவை பரவியுள்ளது இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் ராஜஸ்தான் நீங்கலாக ஏனைய பகுதிகளிலும், இலங்கையிலும் இப்பறவை யாகக் காணலாம். பொதுவாகச் சமதளப் பகுதி களில் வாழும் இவை மலைப்பகுதிகளில் ஏறத்தாழ 1000 மீட்டர் உயரம் வரையிலும் செல்லுகின்றன. திறந்த வெளிகளிலும், வயல் மிகுந்த இடங்களில் பனை மரங்களிலும், பாக்கு மரங்களிலும் சிறு கூட்டங்களாக வாழ்கின்றன. ஒரு பனையில் அல்லது சிறு பனந்தோப்பில் வாழும் இப்பறவையின் கூட்டத் தைத் தவிர அந்தப் பகுதியில் பல கி. மீ. சுற்றள வுக்கு வேறு கூட்டத்தைப் பார்க்க முடியாது. இவை அம்பு போல நேராகப் பாய்ந்தும், வளைந்து திரும்பியும், சிட்டென மிக விரைவாகப் பறந்தும் இரையைப் பிடித்து உண்ணுகின்றன. பொழுது சாயும் வேளையில் இவை கீச்-கீச் என்னும் கலகலப்பான மகிழ்ச்சியூட்டும் ஒலியெழுப்பிக் கொண்டு பறப்பது பறப்பது பார்ப்பதற்கு மகிழ்வூட்டும். படம் 2