உள்ளங்கை 735
உள்ளங்கை 735 எலும்புகளுக்கிடையே மடக்கு வலைப்பின்னலின் முன்புறம் காணப்படும். து உள்பட்டையாலும் உள்ளங்கைச் சிறு தசையாலும் மூடப்பட்டிருக்கும். இவ்விரு எலும்புகளுக்கு இடையில் இந்த நரம்பு இரு பிரிவாகப் பிரிந்து, ஒன்று மேல் வாரியாகவும், மற்றது உள்ளங்கையினுள் ஆழ்ந்தும் செல்லும். மேல் வாரியாகச் செல்லும் நரம்பு, சிறுவிரலுக்கும் மோதிர விரலின் பகுதிக்கும் தொடு உணர்ச்சி நரம்புகளைக் கொடுக்கிறது. உள்ளங்கைத் தசை களுக்கு இயக்க நரம்பு கொடுத்த பின் நடு நரம் போடு இணைகிறது. நடு நரம்பு. கையிலிருந்து நடுநரம்பு மணிக்கட் டின் கால்வாய் வழியாக உள்ளங்கையிலும் செல் கிறது. இது உள்ளங்கை நீள் தசையின் நீட்சியா கிய உள்ளங்கைத் தசைச் சவ்வின் அடியில் காணப் படும். இந்த நரம்பு திரும்பச் செல்லும் நரம்பாகவும் விரல் நரம்புகளாகவும் பிரிந்து உள்ளங்கையிலுள்ள முதல் இரு உருளைத் தசை, பெருவிரல் வெளிவாங் கிச் சிறு தசை, பெருவிரல் மடக்குச் சிறுதசை,பெரு விரல் முரண்பட்ட தசை இவற்றிற்கு இயக்க நரம்பு களையும் பெருவிரல், குறிப்பிடும் விரல், நடுவிரல், மோதிர விரலின் ஒரு பகுதி ஆகியவற்றிற்குத் தொடு உணர்ச்சி நரம்புகளையும் கொடுக்கின்றது. நடு நரம்பு, உள்ளங்கை உள் நரம்பு ஆகியவற்றின் விரல் நரம்புப் பிரிவுகள் நார் உறையை அடுத்துக் காணப்படும். தசை மடக்கு வலைச் சல்லின் முன்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும். இது உள்ளங்கையில் நான்கு பிரிவு களாகப் பிரிந்து நான்கு விரல்களும் தொடங்கு மிடத்தில் தோலடித்திசுவுடன் இணைகிறது. இது உள்ளங்கை இழைக்கும் உள்பட்டைக்கும் நார்த் திசுக்களைக் கொடுக்கிறது. விரலின் நார் உறை. உள்ளங்கைத் தசைச் சவ் வுக்கு அடியில் ஒவ்வொரு விரலின் உள்ளேயும் இரு நாண்கள் செல்கின்றன. இவை உள்ளங்கை எலும் பின் தலைப்பகுதிக்கருகில் மற்றொரு நார் உறை யினுள் செல்கின்றன. இவ்வுறைகள் உள்ளங்கை விரல் மூட்டுகளில் உள்ள உள்ளங்கை இழையிலிருந்து விரல் நுனி எலும்புவரை காணப்படும். ஆதலால் இவ்வுறை மூன்று மூட்டுகளைத் தாண்டிச் செல் கின்றது. இம்மூட்டுகளுக்கு எதிரே இவ்வுறை மெல்லியதாக இருக்கும். விரல் உறைகல் உள்ளங்கைத் தசைச் சவ்வு. உள்ளங்கை நீள் இரண்டாம் துனை ஆழ்பகுதி மேல்தசை பெருவிரல் உறை பொது மடக்குத்தசை உறை முதல் துலை ஆழ்குறுக்கு நான் உள்ளங்கை நாம் விரல் மடக்குத்தசையில் உறை - 2 துறை கருட நீன்டவிரவ் மடக்குத் தசைகள் செருகியுள்ள முறை விரலின் மடக்கு நீள் தசை செருகும் விதம். விர லின் மடக்கு ஆழ்ந்த நீள் தசைகளின் நாண்கள் விரல் நுனி எலும்பின் முன்புறத்தில் செருகுகின்றன. மேல் வாரியாகச் செல்லும் தசைகளின் நாண்கள் விரலின் முன் எலும்புக்கு அருகில் இரண்டாகப் பிரிந்து விரலின் நடு எலும்பின் ஓரங்களில் செருகு கின்றன. மேல் வாரியாகச் செல்லும் நாணின் துளை வழியாக ஆழ்ந்த நாண் செல்கிறது. உருளைவடிவத்தசை. நான்கு உருளை வடிவத் தசைகள் உள்ளங்கையில் உள்ளன. இலை உருவி லும், அளவிலும், நிறத்திலும் மண்புழு போலவே