உள்ளான் 747
உள்ளான் 747 அடைகாக்கும் செய்யும் இது ஜப்பான், சீனா வழியாகத் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குக் குளிர்காலத்தில் வலசை வருகின்றது. தென்னிந்தியாவின் கிழக்குக் கடற்கரை சார்ந்த பகுதிகளில் காணப்படும் இது மேற்குப் பகுதிகளில் காணப்படுவதில்லை. பெரிய உள்ளான். இது உள்ளான்களுள் அளவில் பெரியது. மிக அரிதாகவே இந்தியாவில் காணப்படு கிறது. வட ஐரோப்பா, மேற்கு ஆசியா, நார்வே பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் இது குளிர் காலத்தில் தென் ஆப்பிரிக்கா மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளுக்கு வலசை வருகின்றது. சென்னையில் இரு முறையும், மைசூரில் ஒரு முறையும், அந்தமானில் ஒரு முறையும் மட்டுமே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. விசிறி வால் உள்ளான். உள்ளான் என அடை யேதுமின்றிக் குறிப்பிட்டால் அது இதையே குறிக் கும் என்ற கருத்தில் இதைச் சாதாரண உள்ளான் (common snipe) என்றும் காடையின் கூறுவர். அளவில் ஒத்த இது இருபத்தேழு செண்ட்டிமீட்டர் நீளமுள்ளது. இதன் அலகின் நீளம் ஆறு செண்ட்டி மீட்டர்; உடலின் மேற்பகுதி அடர்ந்த பழுப்பு நிற மாகக் கறுப்பு, செம்பழுப்பு, வெளிர் வெள்ளைக் கோடுகளைக் கொண்டதாக இருக்கும். காஷ்மீரத்தி லும் இமயமலையில் 1600 மீட்டருக்கு மேலும் இனப் பெருக்கம் செய்கின்றது. சேறும் சகதியுமான சதுப்பு நிலத்தில் பத்து செண்ட்டிமீட்டர் குறுக்களவுள்ள கூட்டிணைப் புல்லைக் கொண்டு, அடர்ந்த சிறு உள்ளாள் செடிகளிடையேயும் நீர்ப் புதர்களிடையேயும் ஓரளவு மிதக்கும்படி அமைத்து நான்கு முட்டைகள் இடு கின்றது. இனப்பெருக்கத்தின் போது 50-100 ஆண் மீட்டர் உயர எழுந்து மேலும் கீழுமாகப் பாய்ந்து சிப்பர் எனக் குரல் எழுப்பியபடி பறக்கும். அப் போது விசிறி போல் விரிந்துள்ள இதன் வால் இறகு சின்ன உள்ளான் அலகு