உள்ளுறுப்பு இயக்கம் 749
உள்ளகச் சுழல் உருளையைப் பயன்படுத்துவதால் உள்ளகப் பாறைகளின் மீது உள்ளீடு துளைத் தலுக்கு ஏற்படும் செலவு குறைவதில்லை. உள்ளகப் பாறைகளின் மீது தாங்கக் கூடிய அழுத்தத்தைக் கொடுத்து அதனை மதிப்பீடு செய்யும்போது வலிமை குறைந்த பொருள்களை மீட்பது மிகவும் முக்கியமானதாகும். இதற்கு முழுமையான உள்ளக மீட்புத் தேவைப்படுகிறது. கடினமான, மிருதுவான பொருள்களைக் கொண்ட மாறுபட்ட பாறை அடுக்கு களில், வலிமை குன்றிய பாறைகளின் மாதிரிகளைக் கண்டறிவது அடிமானத்தை வடிவமைப்பதற்கு மிகவும் முக்கியமானதாகும். வைரத்துண்டுகளைப் பயன்படுத்தும் துளைத் தல் முறை அதிகமான செலவை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து கிடைக்கும் பாறை மாதிரிகளைச் சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டும். பாறை உள்ள கங்கள் அல்லது மாதிரிகள் தவறான இடத்தில் வைக்கப்பட்டாலோ, வைக்கப்பட்டுள்ள பெட்டியில் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து காணப்பட்டாலோ அவ்வாய்வு தன் மதிப்பை இழந்து விடுகிறது. துரப்பணத் துளையின் ஆழம், உள்ளகத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து, துரப்பண எந்தி ரத்தின் வகை நிர்ணயிக்கப்படும். அடிமானப் பயன் பாடுகளுக்காகக் குறிப்பிட்ட ஆழத்திலுள்ள பாறை களை எடுப்பதற்குச் சுழலும் உள்ளகத் துரப்பணம் பயன்படுத்தப்படுகிறது. பென்டண்ட் வகை வைரத் துரப்பணம், நீரியல் மின்னோடியால் இயக்கப்படும் புவிஈர்ப்பு ஊட்டத் துரப்பணமாகும். ஆழமான பல துளைகளைப் போட நீரியல் ஊட்டத்துரப்பணம் தேவைப்படு கிறது. து சுமார் 750 மீ. ஆழம் வரை துளை இடும். பாறைகள் வேறுபடும் நிலைக்கு ஏற்றவாறு துரப்பணத்துண்டின் ஊடுருவல் அளவு, சுமை ஆகியவை துரப்பணத்தால் கட்டுப்படுத்தப்படும். புவிஈர்ப்பு ஊட்டத் துரப்பண எந்திரம் அல்லாமல் நீரியல் ஊட்டத் துரப்பண எந்திரத்தாலும் இது கைகூடும். உள்ளுயிர்த்தல் இரா. சரசவாணி மூச்சு விடுதல் என்பது உள்மூச்சு, வெளிமூச்சு என்ற நிகழ்வுகளைக் கொண்டது. உள்மூச்சில் காற்றை மூக்கு வழியாக உள்ளே இழுத்து, சில வினாடி கழித்து மூக்கு வழியாகவே காற்று வெளியிடப் படுகிறது. உள்ளிழுக்கும் மூச்சே உள்ளுயிர்ப்பு inhalation) எனப்படும். உள்ளுறுப்பு இயக்கம் 749 நுரையீரல்கள் நெகிழ்வுத் தன்மை கொண்ட இரண்டு பலூன்கள் போன்றவை. மூச்சு விடும்போது மார்புக் குழிவு விரிவடைகிறது. வெளி மூச்சின்போது மார்பு சுருங்குகிறது. உள்ளுயிர்ப்பின்போது உதர விதானம் சுருங்குவதால், கீழ் நோக்கிச் செல்கிறது. அப்போது, விலா எலும்பிடைத் தசைகள் சுருங்கு வதால், விவா எலும்புகள் மேல் நோக்கி நகரு கின்றன. பின்னர் மார்பு சுருங்கும்போது காற்று வெளிவருகிறது. மார்பின் முறையான விரிந்து சுருங்கும் தன்மை யால் சுவாசம் பேணப்படுகிறது. சுவாசத்தின்போது. ஆகாயத்திலுள்ள காற்று மூச்சுச் சிற்றறைகளுக்குச் சென்று பின்னர் வெளியேறுகிறது. சுவாசப்பணி, பல பகுதிகளின் ஒருங்கிணைந்த செயலால் கட்டுப்பட்டு நடைபெறுகிறது. மார்புக்கூடு, அதன் தசைகள், மூச்சுப் பாதைகளின் திறந்த தன்மை, நுரையீரல் களின் நெகிழ்வுத்தன்மை, உள்மூச்சு வெளிமூச்சு ஆகியவற்றின் லயம், ஃபுளுரா உறை,நரம்பு-வேதி நுட்பத்தின் ஒழுங்கமைவு போன்ற கூறுகள் ஒருங் கிணைந்து செயல்படவேண்டும். உள்ளுயிர்ப்புக்கான மையம் முகுளத்தின் வலைப் பின்னல் பகுதியின் முன்புறத்தில் அமைந்துள்ளது. அதுபோன்றே வெளிமூச்சு மையம், அதன் பின்புறத் தில் அமைந்துள்ளது. பான்ஸ் (pons) மேற்பகுதியில் அமைந்துள்ள மற்றொரு மையம், இவ்விரு மையங் களையும் கட்டுப்படுத்துகிறது. இந்த மையங்கள், தமனி இரத்தத்தின் அமில கால நிலைக்கும், கரியமில வளிமத்தின் அழுத்தத்திற்கும் கட்டுப்பட்டுள்ளன. பிஎச் குறைந்து, கரியமிலவாயு அழுத்தம் அதிகரித் சுவாசம் தால் மிகையான ஏற்படுகிறது. பிஎச் அதிகரித்துக் கார்பன் டைஆக்சைடு வளிம அழுத்தம் குறைந்தால் சுவாசம் தடைப்படுகிறது. இருமல், தும்மல் ஆகியவை உள்மூச்சில் உட்சென்ற வேண்டாத பொருளை அகற்ற நடைபெறும் அனிச் சைச் செயல்களாகும். மு. கி.பழனியப்பன் (pH) உள்ளுறுப்பு இயக்கம் லான்கிலேயின் தானியங்கு பகுதி அல்லது உள் ளுறுப்பு இயக்கப் பகுதி (viscero motor) என்பது மத்திய நரம்புத் திசுக்களையும், புற எல்லை நரம்பு இழைகளையும், இயங்கு தசைகளுக்கு நரம்பூட்டம் அளிக்கும் நரம்புத் திசுத் திரள்களையும், உடலின் உள்ளடக்கியதாகும். அனைத்துச் சுரப்பிகளையும் இடைப்படைத் திசுக்களின் இட அமைப்பாலும், நரம்புகள் புற எல்லை நரம்பிழைகளில் இருந்து வெளி வருவதாலும் இவை தலைப்பகுதிப் புற எல்லை