உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/771

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறுப்புப்‌ பிறழ்வு 751

களை விரிவடையச் செய்யும் தன்மை பெற்ற நரம் பிழைகள் செல்கின்றன. மார்பு கீழ் முதுகுப் பிரிவைச் சார்ந்த தலைப்பகுதி. உள்கழுத்து நரம்பு, கழுத்துத் தமனிக்கும் அதன் கிளைகளுக்கும் நரம்பிழைகளை அனுப்புகின்றது. கண்ணீர்ச் சுரப்பி, மூக்கு, மேலண்ணம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்யும் நரம்பிழைகளும், அவற்றைச் சுரக்கச் செய்யும் நரம்பிழைகளும் சென்றடை கின்றன. இதே போன்ற நரம்பிழைகள், பெருமூளை யின் தமனிகளாகிய நடுத்தமனி, முன் தமனி, பிட் யூட்டரி போன்ற உறுப்புகளையும் சென்றடை கின்றன. கழுத்துப் பகுதி நரம்பு. மேல் பகுதியில் பெரிய தமனிகளுக்குச் செல்லும் நரம்பிழைகள் அவற்றிற்குச் சுரக்கும் நரம்பிழைகளை அனுப்புகின்றன. இவை உள். வெளிக் கழுத்துத் தமனிகளுக்கும் அவற்றின் கிளைகளுக்கும் சென்றடைகின்றன. இவை மேலும் இதயத் துடிப்பை அதிகரிப்பதாகவும் அமையப் பெற்றுள்ளன. விழித்திரை, தொண்டைப் பகுதி ஆகிய உறுப்புகளின் தசைகளையும் இவை சென்றடை கின் ன்றன. நடுப்பகுதியிலிருந்து கேடயச் சுரப்பிக்கு இதயத் துடிப்பை அதிகரிக்கும் நரம்பிழைகளும், உள்ளுறுப்புக்குச் செல்லும் நரம்பிழைகளும் செல் கின்றன. கீழ்ப்பகுதியிலிருந்து நடு மார்பு எலும்புக்குச் செல்லும் தமனிகள், இதயத்திற்கும், கேடயச் சுரப் பிக்கும் செல்லும் நரம்பிழைகள் செல்கின்றன. பரிவு நரம்புத் திசுத் திரள்களைக் கொண்ட மேல் பகுதியிலிருந்து உடலின் மேல் பகுதியில் அமைந்துள்ள வியர்வைச் சுரப்பிகளுக்குச் சுரக்கும் நரம்பிழைகள் செல்கின்றன. கைகளுக்குச் செல்லும் இரத்த நாளங்கள், நுரையீரல் இரத்த நாளங்கள் ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் நரம்பிழைகளும் இங்கிருந்து செல்கின்றன. கீழிருக்கும் முதுகுப் பகுதி நரம்புத் திசுத் திரள்கள் உடலின் கீழ்ப்பகுதிக்கும், நடுவே உள்ள திசுத் திரள்கள் உடற் பகுதிக்கும் நரம்பிழை களை அனுப்புகின்றன. கீழிருக்கும் திசுத் திரள்கள் வயிற்றில் உள்ள உள்ளுறுப்புகளுக்கு இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்யும் நரம்பிழைகளை அனுப்புகின்றன. முன் நரம்புத் திசுக்களிலிருந்து வரும் நரம்பிழைகள் கீழ்ப்பகுதியைச் சார்ந்த குடல் இணைப்பு நரம்புத் திசுத் திரள்களுக்கு அனுப்பப்படுகின்றன. இங்கிருந்து பின்னர் இவை மலக்குடலுக்குச் செல்கின்றன. ரா. அமுதா உள்ளுறுப்புப் பிறழ்வு உள்ளுறுப்புப் பிறழ்வு 751 உறுப்பு இறங்கல் அல்லது உள்ளுறுப்புப்பிறழ்வு (visceroptosis) என்பது உடலின் உள்ளுறுப்புகள் சாதாரண நிலையினின்று மாறிக் கீழிறங்கிக் காணப் படுவதைக் குறிக்கும். சிலரின் உள்ளுறுப்புகளை எக்ஸ் கதிர்கள் மூலமாகவும்,அறுவை மருத்துவத்தின் போதும் காணும்போது பிறரின் உறுப்பு நிலைகளி னின்றும் மாறுபட்டுக் சற்றே கீழிறங்கித் தொய் வுற்றாற்போல் இவை காணப்படும். உள்ளுறுப்புப்பிறழ்வு சிலவகை உடலமைப்புக் கொண்டோரிடம் காணப்படுகின்றது. உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள உடலமைப்புக் கொண்டவர் களிடம் உறுப்புப்பிறழ்வு தோன்றக்கூடும். பருமனான தோற்றம் உடையோரை விட உயரமான தோற்ற முடையோரிடமும் இந்நோய் தோன்ற வாய்ப்பு உண்டு. உயரத்திற்கேற்றவாறே உடல் உறுப்புகளும் அமைகின்றன. அத்தகையோரிடம் நீண்டு வாய்ப்பகுதி தொங்கக்கூடும். வளையங்கள் கூடக் காணக்கூடும். குடல் (transverse colon) உண்மையில் குறுக்காக அமையாது இரு முனைகளிலும் விறைப்பாக நடுவே துவண்டு தொங்கும். இரைப்பை சிறுகுடல் குறுக்குக் ஊட்டச் சத்துக் குறைபாடுகளால் நலிவுற்றோர். வேறுவகை நோய்களின் காரணமாக நலிந்தோர் முதலியோரிடமும் உறுப்புப் பிறழ்வு ஏற்படலாம். உறுப்புகளைப் பிணைத்து நிலைநிறுத்தக்கூடிய இணைப்புத் திசு குறைந்து போவதே இதற்குக் காரணமாகும். ஆனால் உறுப்புப்பிறழ்வு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்துவதில்லை. இவர்கள் தங்கள் பணிகளை எத்தடங்கலுமின்றி நிறை வேற்றவியலும். வேறு ஏதேனும் நோய்க்காக மருத் துவம் பெறும் போதே பெரும்பாலும் உறுப்புப் பிறழ்வு இருப்பதுகண்டுபிடிக்கப்படுகின்றது. மேலும் உறுப்புப் பிறழ்வால் நேரடியான சிக்கல்களோ, நோய்க் குறியீடுகளோ தோன்றுவதில்லை. அரிதாக, உறுப்புப்பிறழ்வு நேரடியாக நோய்க் குறியீடுகளை உண்டாக்குவதுண்டு. அத்தகைய நிலைக்கு க்ளெனார்ட் நோய் (glenard's disease) எனப் பெயர். பிரான்ஸ் மருத்துவ அறிஞர் க்ளெ னார்ட் என்பவரால் முதல் முதலில் அறிவுறுத்தப் பட்ட இந்நோய், பெரும்பான்மையும் பெண்களிடமே காணப்படும். பன்முறை மகப்பேறு ஏற்பட அத னால் வலுவிழந்து, துவண்டுபோன வயிற்றுமுன் சுவர் (anterior abdominal wall) உள்ளவர்களையே இது பாதிக்கும். இதில் வயிற்று உள்ளுறுப்புக்கள் யாவும் தொய்வுறுகின்றன. நீண்டு, மெலிந்து தொங் கும் இரைப்பை, வயிற்றுப் பின் சுவரில் ஒட்டிப் பதிந்துள்ள முன்சிறுகுடல் காரணமாகச் சில நோய்க்