உளக்கோளாறு 753
உளக்கோளாறு 753 உள்ளுறை வெப்பம் ஏறக்குறைய எண்பது கிலோ காலரி/கிலோ கிராம் ஆகும். இதை ஜூல்/கிலோ கிராம் அலகில் குறிப்பிட்டால், அதன் எண் மதிப்பு 33.6× 10" ஆகும். நீரின் ஆவியாதல் உள்ளுறை வெப்பம் ஏறக்குறைய 536 கிலோ காலரி/கிலோ கிராம் (2256×10 ஜூல்/கிலோ கிராம்) ஆகும். சில முக்கிய பொருள்களின் உள்ளுறை வெப்பம் அட்ட வணையில் தரப்பட்டுள்ளது. உள்ளுறை வெப்பத்தால் பல நன்மைகள் உள்ளன. நீரின் ஆவியாதலின் வெப்பம் பிற அனைத்து நீர்மங்களையும் விட மிக அதிகமாக இருக்கின்றது. இதனால் மனிதன் மற்றும் விலங்கு களின் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தும் ஒரு நுட்பமான கருவியாக நீர் விளங்குகின்றது. வெப்பம் மிகுந்த கோடைக் காலத் தில் உடலைக் குளிர்விக்கச் செய்து வெப்பநிலையைச் சமப்படுத்துவதும் நீரின் உயர்ந்த அளவிலான ஆவி யாதல் உள்ளுறை வெப்பமேயாகும். உறைந் பொருள்களுள் உள்ளுறை உள்ளுறை வெப்பம் திருக்க முடியும் என்ற உண்மையைப் பயன்படுத்தி இன்றைக்குச் சூரிய ஆற்றலைச் சேர்த்து வைக்கும் வழிமுறை ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இதனால் சூரிய வெப்பத்தை இராக்காலங்களிலும், சூரிய ஒளி போதிய அளவு கிடைக்காத காலங்களிலும் பயன் படுத்திக் கொள்ள இயலும். பருமப் பெருக்கத்தி னால் ஏற்படும் சிக்கல் காரணமாக, ஆவியாதல் உள்ளுறை வெப்பமாகச் சேர்த்து வைப்பதை விட, உருகுதல் உள்ளுறை வெப்பமாகச் சேர்த்து வைப் பது எளிதாக உள்ளது. மேலும் மிக அதிகமாக உறைதல் உள்ள ளுறை வெப்பமும் (அதனால் ஓரலகு நிறையில் மிக அதிக அளவு வெப்பத்தைச் சேமிக்க முடியும்), தகுந்த அளவு உருகு வெப்பநிலையும். (மிக உயர்ந்த உருகுதல் வெப்பநிலை பெற்றிருந்தால் நிலை மாற்றம் ஏற்படாமலும் போகலாம்), நிலை மாற்றத்தினால் மூலக்கூறு அமைப்புச் சிதைவுறாத பண்பும் கொண்டுள்ள பொருள்களே இதற்குப் பெரிதும் பயன்படுகின் றன. கிளாபார் உப்பு என்று கூறப்படும் சோடியம் சல்ஃபேட் டெகாஹைட்ரேட், பாரபின் மெழுகு போன்ற பொருள்கள் உள்ளுறை வெப்பத்தைத் திரட்டிச் சேர்க்கும் முறைக்குப் பயன்படுகின்றன. வெப்பக் காப்பீடு செய்யப்பட்ட அமைப்பில் கிளாபார் உப்பை நிரப்பி, பின்னர் ஒரு குழாய் வழி யாகச் சூரிய ஆற்றல் சேர்ப்பானிலிருந்து பெற்ற சுடு நீரை உட்செலுத்தினால், அது குழாயைச் சுற்றியுள்ள கிளாபார் உப்பால் கவரப்படுகின்றது. வெப்பத்தைக் கவர்ந்தேற்றுக்கொண்டதால் அது உருகி நீர்மமாகி விடுகின்றது (படம்). பின்னர் வெப்பம் தேவையான போது குளிர்ந்த நீரைக் குழாய் வழிச் செலுத்தினால், உப்பு நீர்மம் கிளாபர் உப்பாக உறைந்து, ஏற்கனவே அ.க.5-48 சுடுநீர் வெப்பக்காப்பீடு சிளாபார்உப்பு கவர்ந்து கொண்ட வெப்பத்தைக் குளிர்ந்த நீருக்கு அளித்துவிடுகிறது. இதனால் குளிர்ந்த நீர் வெந் நீராக வெளி வருகின்றது. உளக்கோளாறு மெ மெய்யப்பன் இது ஒரு சிக்கலான நோயாகும். இதைச் சார்ந்த நோய்களைக் குறிப்பிட்டு வரையறுக்க இயலாதெனி னும் இதை இரு வகையாகப் பிரிக்கலாம். மிகப் பெரும் வகை நோய். இவ்வகையில் மனச் சிதைவு நோய், மித மிஞ்சிய மன எழுச்சி நோய், ஐயத்துடன் நம்பிக்கையின்மை ஆகியவை அடங்கும். மிகச் சிறிய நோய். இதில் உளஞ்சார்ந்த நரம்பு நோய், ஆளுமை அல்லது பண்பாடு சார்ந்த கோளாறுகள் அடங்கும். நோய்க்காரணம். பெருமூளையின் இரத்த நாளக் கடின நிலை, புற்றுநோய், வளர்சிதை மாற்ற நோய், நரம்பு மண்டல நோய், நாளமில்லாச் சுரப்பு நோய், நாட்பட்ட நோய்களான காசம், தொழுநோய், காக்காய் வலிப்பு இவற்றுடன் பரம்பரைக்கூறாக மூளைச் சிதைவு நோயும் காணப்படுகிறது. மரபு நுட்ப அணுவியல், சுற்றுப்புறச் சூழ்நிலைக் கூறுகள் ஆகியவை சேர்ந்தால்தான் நோய் உண்டா கும். மனக்கவலை, பதட்டநிலை, மனக் கிளர்ச்சி, ஏமாற்ற நிலை, பொருத்தமற்ற திருமணங்கள்,