58 இறைச்சி உற்பத்தியில் துணைப் பொருள்கள்
58 இறைச்சி உற்பத்தியில் துணைப் பொருள்கள் புழுக்கள்: 'புழுக்களைக் கொல்லப் புழுக் கொல்லி களான பிப்ரஸின் போன்ற மருந்துகளை முயல் களுக்குக் கொடுக்க வேண்டும். நோய்த்தடுப்பு முறை. நோய் இல்லாத முயல்களைப் பண்ணையிலிருந்து வாங்க வேண்டும்; நோய்வாய்ப் பட்ட முயல்களை நீக்க வேண்டும்; புதிதாக வாங்கப் பட்ட முயல்கள் அனைத்தையும் ஒரு தனி இடத்தில் இரு வாரங்களுக்கு வைத்துப் பார்த்து நோய் இல்லை என்று நன்கு முடிவு செய்த பிறகு மற்ற முயல் களுடன் அவற்றைச் சேர்க்க வேண்டும். சத்துள்ள தீவனம், தீவனத்தில் சேர்க்க வேண்டிய பொருள்கள் ஆகியவற்றின் அளவை அடிக்கடி மாற்றாமல் இருக்க வேண்டும். காற்றோட்டம், வெளிச்சம் ஆகியவை கொண்ட கழுவி விடக்கூடிய சிமெண்ட் தரைகளே ஏற்றவை. தற்பொழுது இந்தியாவில் தரமான இன முயல் கள் இல்லை. இறைச்சிக்காக வளர்க்கும் பிராய்லர் இன நியுஜீலண்ட், வெள்ளை, கலிபோர்னியன் டட்ச், ஜீண்ட்பிலான் வெளிநாடு போன்ற முயல்களை களிலிருந்து இறக்குமதி செய்து அவற்றை வணிக முறையில் வளர்த்து இறைச்சி உற்பத்தியைப் பெருக்கிப் பொது மக்கள் பயனடைய ஏற்பாடுகள் செய்வது நல்லது. பி.பி. தங்கவேலு இறைச்சி உற்பத்தியில் துணைப் பொருள்கள் கொன்று பதப் அடிதொட்டிகளில் விலங்குகளைக் படுத்திய பிறகு அவற்றின் உயிரற்ற உடல் உணவா கிறது. விலங்கின் எஞ்சிய பகுதிகளாகிய இதயம், நுரையீரல், மண்ணீரல், கணையம், இரைப்பை போன்ற உள் உறுப்புகளையும், தோல், நுனிக்கால் போன்ற உண்ணத் தகாதவற்றையும் உதிரிகள் அல்லது துணைப் பொருள்கள் என்று கூறலாம். அதாவது அடிதொட்டியிலிருந்து கிடைக்கும் பொருள் களில் நேரிடையாக இறைச்சியாகப் பயன்படாதவை அனைத்தும் இறைச்சியின் துணைப் பொருள் களாகும். விலங்குகளிலிருந்து கிடைக்கும் இறைச்சியும், துணைப் பொருள்களின் அளவும் இனத்திற்கு இனம் மாறுபடும். பொதுவாக ஆட்டிற்கு நாற்பது விழுக் காடும், மாட்டிற்கு நாற்பத்தைந்து விழுக்காடும், பன்றிக்கு எழுபது விழுக்காடும் உயிரற்ற உடல் எடையாகக் கிடைக்கும். எடுத்துக்காட்டாக ஏறத் தாழ இருபது கிலோ எடையுள்ள ஆட்டிலிருந்து எட்டுக் கிலோ உயிரற்ற உடல் எடையும் எஞ்சிய பன்னிரண்டு கிலோ துணைப் பொருள்களும் கிடைக்கின்றன. இதேபோல் மாடு, பன்றியிலிருந்து கிடைக்கும் துணைப் பொருள்களின் அளவையும் கணக்கிடலாம். இவ்வாறு துணைப் பொருள்களின் அளவு மிகவும் உயர்ந்து இருப்பதால் அன்றாடம் பல நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகளைக் கொல்லும் அடி தொட்டிகளில், ஓர் ஆண்டில் எந்த அளவுக்குத் துணைப் பொருள்கள் கிடைக்கும் என்பதும், அவற்றைக் கையாளுவதும், நீக்குவதும் எவ்வளவு கடினம் என்பதும் தெளிவாகும். துணைப் பொருள்களை அங்கேயே தேங்க விட்டால் அவை கெட்டு, அழுகி, நாற்றம் வீசி, அடி தொட்டியும் சுற்றுப்புறமும் தூய்மை கெட்டு, தர மான இறைச்சி உற்பத்திக்கு ஊறு விளைவிக்கும். ஆகவே இவற்றை அடிதொட்டியிலிருந்து உடனடி யாக நீக்க வழிவகை செய்ய வேண்டியுள்ளது. இவற்றைக் கழிவுப் பொருள்களாக எண்ணி வீணாக் காமல் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருவாய் பெற முடியும். இதன் மூலம் அடிதொட்டி நிர்வாகத் தில் ஏற்படும் சில செலவினங்களைக் குறைக்கலாம். வணிக முறையில் நல்ல வருவாய் கொடுப்பதாலும், சுற்றுப்புறச் சூழலைக் கெடாமல் பாதுகாப்பதாலும், இப்பொருள்களைப் பதப்படுத்துவது மிகவும் தேவை யானதாகும். சில அடிதொட்டி துணைப்பொருள் கள் நேரிடையான பயன்பாட்டிற்கும், பலவகைத் துணைப் பொருள்களைத் தயாரிக்கவும் பயன்படுகின் றன. சத்துமிக்க உணவிலும், மருத்துவத்திலும், வீடு களில் பயன்படும் பொருள்களிலும், விளையாட்டுக் கருவிகள் இசைக் கருவிகள் செய்வதிலும், தொழிற் சாலைப் பயன்பாட்டிலும் உதவுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளில் இவற்றிலிருந்து மேன்மேலும் பொருள்களை மிகுதியான துணைப் உற்பத்தி செய்யப் பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. உட்கொள்ளக் கூடிய துணைப் பொருள்கள். உறுப்பு இறைச்சி, கொழுப்பு,குடல், இரத்தம் முதலியவை உணவாகப் பயன்படுகின்றன. உள் உறுப்பு இறைச்சி யில் உயிர்ச்சத்து அடங்கியிருப்பதால் அது பல் வேறு வகையில் உண்ணப்படுகிறது. இவற்றில் கல்லீரல், மூளை, நாக்கு, மாட்டின் வால், சிறுநீரகம்,விரை முதலியவை குறிப்பிடத்தக்கவை. இரத்தச்சோகையைக் குணப்படுத்தும் சத்துகள் கல்லீரலில் அடங்கியுள்ளன. தாவர எண்ணெய்க்கு மாற்றாக மிருகக் கொழுப்பையும் சமையலுக்குப் பயன்படுத்தலாம். உணவுக் கொழுப்பைத் தூய்மை யான முறையில் சேகரிக்க வேண்டும். தூய்மையற்ற கொழுப்பு, குறைந்த விலையில் உணவல்லாத வேறு தொழில்களுக்கு உதவுகிறது. சிட்டர்லிங்ஸ் என்பது பன்றியின் பெருங்குடலிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உணவு ஆகும். டிரைப் மாட்டின் இரைப்பை யிலிருந்து தயாரிக்கப்படும் உணவு ஆகும். ஆடு மாடு பன்றி இவற்றின் பதப்படுத்தப்பட்ட குடலுக்குள்