உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/780

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

760 உளுவை மீன்‌

760 ளுவை மீன் பகுதியிலிருந்து முன்னோக்கிச் செல்கின்றன. முகத்தின் முன்பகுதி நீண்டும் சுன்னங்கள் உப்பலாகவும் உள்ளன. மேல்தாடையும், கீழ்த்தாடையும் ஒரே நீளமுடையன அல்லது கீழ்த்தாடைச் சற்று அதிக நீளமானது. வாய் ஏறக்குறைய கிடைமட்டத்தி லுள்ளது. கண்கள், தலையின் உச்சியில் மேல்நோக்கி யும் வெளிநோக்கியும் அமைந்துள்ளன. மேல்தாடை யில் ஒரு வரிசைப் பற்களும், கீழ்த்தாடையின் நடுவில் இரண்டு அல்லது மூன்று வரிசைப் பற்களும், கீழ்த் தாடையின் பக்கங்களில் ஒன்று அல்லது இரண்டு வரிசைப் பற்களும் காணப்படுகின்றன. முதல் முதுகுத் துடுப்பிலுள்ள முள்கள் வலிவற்றவை. வால் துடுப்பு சற்று வட்டவடிவமானது. கன்னங்களும், தலைப் பகுதியும் தவிர உடலின் ஏனைய பகுதிகளில் சீப்புச் செதில்கள் உள்ளன. நன்னீர் உளுவை ஏறத்தாழ நாற்பத்தைந்து செண்ட்டிமீட்டர் நீளமுடையது. இந்தியாவில் நன்னீர் நிலைகளில் பரவலாகக் காணப்படுகிறது. இது பொதுவாக வெளிர் மஞ்சள் நிறமானது. ஆனால் உடல் நிறம் வாழிடத்திற்கும் நீரின் நிறத் திற்கும் ஏற்ப வேறுபடுகிறது. உடலின் முதுகுப் புறத்திலும் பக்கங்களிலும் ஆங்காங்குத் திட்டுகளும் பட்டைகளும் காணப்படுகின்றன. சீப்புச் செதில்கள், கண்களின் பின்புறத்திலிருந்து உடல் முழுதும் உள்ளன. கண்களுக்கிடையிலுள்ள குழிவான பள்ளத்தில் ஒரு சுரப்பி உள்ளது. மேல் தாடையைவிடக் கீழ்த் தாடை சற்று நீளமானது. பற்கள் வரிசையாக அமைந்துள்ளன; துடுப்புகளின் அளவு பெரிதும் வேறு படுகிறது; முதல் முதுகுத்துடுப்பின் முள்கள் சில குண்டல உளுவை ஜன்னீர் உளுயை