உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

782 உறை நிலையும் உறை கலவையும்

உறை நிலையும் உறை கலவையும் பனிக்கட்டி எடை கம்பி வளையம் படம் 4. திண்மங்கள் உருகும்போது அவற்றின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் அணி வகுப்பு மாறி விடும். கிறது. அவற்றுக்கிடையிலுள்ள தொலைவுகள் அதிக மாகின்றன. அவை நீர்மத்தின் பருமம் முழுதும் அலைந்து திரியக் கூடிய சுதந்திரம் பெறுகின்றன. பொருளின் அடர்த்தி குறைகிறது. உருகினால் சுருங் கக்கூடிய பொருள்களின் மின் தடை திடீரெனக் குறை கிறது. உருகினால் விரியக் கூடிய பொருள்களின் மின்தடை திடீரென அதிகமாகிறது. உருகும்போது ஆவி அழுத்தத்திலும் திடீர் மாற்றங்கள் ஏற்படு கின்றன. கரை திறனிலும் குறிப்பிடத்தக்க மாற் றங்கள் தோன்றுகின்றன. உறை சுவவை. ஒரு நீர்மத்தின் கரைகிற பொருள் அந்நீர்மத்தில் உறை நிலையைக் குறைக்கிறது. ஒரு கரைசலின் உறை நிலை தூய கரைப்பானின் உறை நிலையை விடக் குறைவு. ஒரு நீர்மத்தின் உறை நிலையில் ஏற்படும் வீழ்ச்சி அதில் கரைந்துள்ள பொருளின் செறிவுக்கு நேர்வீதத்தில் இருக்கும் என்பது பிளக்டனின் விதியாகும். சாதாரண உப்பை நீரில் கரைக்கும்போது ஏற்படும் விளை வுகளாவன : உப்புக் கரைசல் நீர்த்ததாக இருக்கும்போது 0°C வரை அது நீர்ம நிலையிலேயே இருக்கும். அதற்குக் கீழே ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் தூய பனி நீர்ப் படிகங்கள் தோன்ற ஆரம்பிக் கின்றன. இது உப்புக் கரைசலின் உறைநிலை ஆகும். அப்போது கரைசலும், திண்ம நிலைக் கரைப்பானும் சமநிலையிலிருக்கின் றன. உப்புக் கரைசலின் வெப்ப நிலையை மேலும் குறைத்தால் பனிப்படிகங்கள் அதிக அளவில் பிரிந்து வர உப்புக் கரைசலின் செறிவு அதிகமாகிறது. -22°C இல் உப்புக் கரைசல் தெவிட்டிய நிலையை அடைந்ததும் கரைசலும் பனிக்கட்டிகளும் ஒட்டு மொத்தமாக உறைந்து திண்மமாகி விடுகின்றன. இந்த வெப்பநிலையில் தெவிட்டிய தூய பனிக்கட்டி, உப்புக் கரைசல், திண்ம உப்பு ஆகிய மூன்றுமே சமநிலையில் உள்ளன. இதற்குச் சிறும உறை கலவை வெப்ப நிலை என்று பெயர். அந்த நிலையில் கரைசலில் 236% உப்பு இருக்கும். இதற்கு உறை கலவைச் செறிவு என்று பெயர். இந்தக் கலவை சிறும உறை நிலைக் கலவை எனப்படும். அது நுண்ணிய உப்புப் படிகங்களும் பனிப்படிகங்களும் கொண்ட கலவை யாகும். உறை கலவையை மேலும் குளிர்வித்தால் அதன் சமநிலை குலைந்து விடும். கரைசல் முன்பே தெவிட்டிய நிலையை எட்டி விட்டதால், மேலும் பனிக்கட்டி சேரும்போது, கரைசலின் செறிவு அதி கரிக்க முடியாது. சிறிதளவு உப்பு வீழ்படிவாதல் மட்டுமே நிகழும். 23.6% உப்புக் கலந்த ஒரு கரைசலைக் குளிர வைத்தால் பனிப் படிகங்கள் உருவாகாமலேயே அது 22°C இல் ஒட்டு மொத்தமாக உறைந்து விடுகிறது. 23.6% மேல் உப்புக் கரைந்த ஒரு கரைசலைக் குளிர வைத்தால் முதலில் உப்பு தனியாகப் பிரிந்து வர ஆரம்பிக்கிறது. அக்கரைசல் 23.6% உப்பு அடங் கியதாக ஆகி 22°C இல் உறையும். 1 ஒரு குறிப்பிட்ட கரைப்பானின் நூறு கிராம் நிறையில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கிராம் மூலக்கூறுகள் அளவில் கரை பொருள் கரைந் திருக்கும் போது, எல்லா வகையான கரைபொருள் களுக்கும், உறை நிலை வீழ்ச்சி சமமாக இருக்கும். இதற்கு அக்கரைப்பானின் மோலார் உறைநிலை இறக்கம் என்று பெயர். சர்க்கரை போன்ற மின்னாற் பகுப்பு அடையாத பொருள்களுக்குத் தண்ணீரின் மோலார் உறைநிலை இறக்கம் 18.6°C ஆகும். சோடி யங்குளோரைடு போன்ற மின்னாற் பிரிகை அடையும் பொருள்களுக்கு அது 18.6Xn. இதில் n என்பது ஒரு மூலக்கூறிலிருந்து பிரிகையினால் தோன்றும் அயனி களின் எண்ணிக்கை. உறைநிலை இறக்கத்திலிருந்து ஒரு கரை பொருளின் பிரிகைத் திறனைக் கண்டு பிடிக்கலாம். பனிக்கட்டியுடன் தகுந்த உப்புகளைக் கலந்து சுழியை விடக் குறைவான வெப்பநிலைகளைப் பெற லாம். இக்கலவை, உறைகலவை எனப்படுகிறது. பனிக்கட்டித் தூளுடன் உப்பைச் சேர்த்தால், பனிக் கட்டிகளின் மேற்பரப்பிலுள்ள தண்ணீர்ப் படலத் தில் சிறிது உப்பு கரைகிறது. அந்தத் தெவிட்டிய கரைசலின் உறை நிலை சுழியை விடக் குறைவு. இக்கரைசலை விடப் பனிக்கட்டி உயர்ந்த வெப்ப நிலையிலிருப்பதால் அது உருக ஆரம்பிக்கிறது. அதற்குத் தேவையான உள்ளுறை வெப்பம் உப்புக் கரைசலிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே உப்புக் கரைசலின் வெப்பநிலை மேலும் குறைகிறது. இதுபோல - 22°Cஇல் பனிக்கட்டி உப்பு, உப்புக் கரைசல் ஆகியவை சமநிலையை எட்டும்