உஸ்திகா தீவு 791
லா. செல்லோவியானா. இதைத் தொங்கும் அல்லது அழும் லாண்ட்டானா என்பர். இது தென் அமெரிக்க இனமாகும். இதன் மலர்கள் இளஞ்சிவப்பு - ஊதா நிறம் கொண்டவை. லா. ட்ரைஃபோலியேடா. இது மேற்கிந்தியத் தீவு களைத் தாயகமாகக் கொண்டது. அங்கு ஆகஸ்ட் மாதம் மலரும். இந்த இனத்தில் ஒரு வகை உண்டு. அதன் வெண்மையான மலர்களுக்காக இதைப் பனி அரசி என்பர். லா. காமிரா. இதில் பலவகைகள் உண்டு. லா.கா.நீவியா. வெள்ளை மலர்கள்: மஞ்சரியின் வெளி மலர்கள் நீலநிறமாகும். லா.கா. மீம்யூடாபிலிஸ், மலர்கள் வெண்மை, மஞ்சள், இளஞ்சிவப்பு, நீலநிறமாக மாறக்கூடியவை. லா. கா. மிஸ்டா. மஞ்சள் நிற மலர்கள் பிறகு குங்குமப்பூ நிறத்திற்கு மாறும். லா. கா. க்ரோசியா. கந்தக மஞ்சள் நிற மலர்கள் குங்குமப்பூ நிறத்திற்கு மாறும். னலாஸ்கா தீவு தி. ஸ்ரீகணேசன் அலாஸ்காவின் தென்மேற்கில் அமைந்திருக்கும் உன லாஸ்கா தீவு (unalaska island) சமதளமற்ற கரடு முரடான தீவாகும். அலூஷியன் தீவுகளைச் சேர்ந்த பெரும் தீவுகளில் ஒன்றான இத்தீவு ஏறத்தாழ 48.3கி.மீ.நீளத்தைக் கொண்டுள்ளது. 1759 ஆம் ஆண்டில் ரஷ்ய நாட்டுத்தோட்ட வல்லுநர்களால் இத்தீவு கண்டுபிடிக்கப்பட்டது. கோடியாக் மக்க உஸ்திகா தீவு 791 ளால் கைப்பற்றப்படும் வரை இத்தீவு ரஷ்ய மக்க ளின் பயிர்த் தொழில் மையமாக இருந்தது. இத் ஊசியிலை தீவில் ரஷ்யர்களால் நடப்பட்ட சில மரங்கள் இப்போதும் ஆங்காங்குக் காணப்படு கின் -ம. அ.மோகன் றன. உஸ்திகா தீவு மத்தியதரைக் கடல் பகுதியைச் சேர்ந்த டைர்கீனியன் கடலில் அமைந்திருக்கும் உஸ்திகா தீவு ஓர் எரி மலைத் தீவாகும். ஏறத்தாழ எட்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இத்தீவு, மையத்தில் 239 மீட்டர் வரை உயர்ந்து காணப்படு கிறது. இத்தீவின் கடற்பகுதியோரமாக எண்ணற்ற குகைகள் காணப்படுகின்றன. தொடக்க காலத் திலும், நடுக்காலத்திலும் இத்தீவில் சரசென் இன மக்கள் குடியிருந்தனர். கடற்கொள்ளையரின் தொடர்ச்சியான தாக்குத லால் இத்தீவிலிருந்து வெளியேறிய மக்கள் பதினெட் டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இங்கு குடியேற வில்லை. இத்தீவில் திராட்சை, தானியங்கள் பழங் கள் ஆகியவை பயிரிடப்படுகின்றன. மீன்பிடித்தல் முக்கியமான தொழிலாகக் கருதப்படுகின்றது. இத் தீவின் மக்கள் வடகிழக்குக் கடற்பகுதியில் அமைந் துள்ள உஸ்திகா துறைமுகத்தருகில் வாழ்கின்றனர். இதன் நிர்வாகம் பாலேர்மோ மாநிலக்கட்டுப்பாட் டில் இயங்கி வருகின்றது. இத்தீவிலிருந்து பாலேர் மோவுக்கு கப்பல் போக்குவரத்து உண்டு. இத்தீவு 38' 42' வடக்கு அகலாங்கிலும் 13° 01' கிழக்கு நெட்டாங்கிலும் அமைந்துள்ளது. ம. அ.மோகன்