உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/823

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊட்டத்துகள்‌ நிறமாலையியல்‌ 803

ஆய்வு செய்யும் போது ஒத்ததிர்வி இடை வினை களில் குறைந்த ஆற்றல்களில் கூட நல்ல ஆற்றல் பிரிகைத் திறன் கிடைக்கும். மின்னூட்டத்துகள் நிற மாலையியல் ஆய்வுகளில் துல்லியமாகத் தெரிந்த ஆற்றல்கள் உள்ளவையும், குறைந்த பரவல் கொண்டலையுமான துகள் கற்றைகளை உண் டாக்குவது, தூய்மையான, ஒரு சீரான ஐசடோப் இலக்குகளைத் தயாரிப்பது, சிறப்பான ஆற்றல் பிரிகைத் திறனும் இலக்கிலிருந்து இலக்கிலிருந்து வெளிப்படும் வெவ்வேறு வகையான துகள் இனங்களை வேறு படுத்திக் காணும் திறமை கொண்ட துகள் துலக்கிகளைப் பயன்படுத்துவது ஆகியவை இன்றி யமையாதவையாகும். நேரின மின் கொண்ட இலக்கு அணுக்கருக் களின் கூலூம் விலக்கு விசையைத் தாங்கும் ஆற்றல் கொண்டவையாகத் துகள் கற்றைகளை முடுக்க வேண்டும். இதற்குச் சிறப்பு வகையான துகள் முடுக் கிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வான்டி கிராப் (Vande Graaff) துகள் முடுக்கிகள் சிறப்பான ஆற்றல் பிரிகைத் திறன் உள்ள துகள் கற்றைகளை உண் டாக்குகின்றன. அவற்றின் ஆற்றலை விருப்பப்படி எளிதாக மாற்ற முடியும். எனவே அவை ஒத்ததிர்வு இடைவினைகளை ஆய்வு செய்ய மிகவும் ஏற்றவை. ஆனால் அவை வெளிப்படுத்தக் கூடிய 0 மின் துகள் கற்றைகளின் ஆற்றல் 14 (1+Q) மி எ வோல்ட்டுக்கு மேல் போவதில்லை. கிடைமட்டத்தில் மாறும் (azimuthally) காந்தப் புலங்களைக் கொண்ட நவீன சைக்ளோட்ரான்கள் சில நூறு மி.எ. வோல்ட்டு வரை ஆற்றலுள்ள புரோட்டான் கற்றைகளை உண்டாக்க முடியும். கற்றைகளின் தரமும் சிறப்பாக உள்ளது. காந்த முறைகளின் மூலம் கற்றைகள் அகன்று விடாமல் தடுக்க முடிகிறது. சைக்ளோட்ரான் கற்றைகளின் ஆற்றல் அதிகமாயிருப்பதால் அவை கற்றை ஆற்றலை மாறாமல் வைத்துக் கொண்டு செய்யப்படும் நேரடி இடைவினை ஆய்வுகளுக்கு ஏற்றவையாக உள்ளன. நேர்கோட்டு முடுக்கிகளின் மூலம் உயர் செறி வும், மிகப் பெரும் ஆற்றலும் கொண்ட புரோட் டான் கற்றைகளை உண்டாக்க முடிகிறது ஆனால் அக்கற்றைகளின் தரம் மிகவும் குறைவாகும். மிகு கடத்து திறன் காந்தங்களைப் பயன்படுத்தி, மிகு நிறை அயனிக் கற்றைகளைப் பெரும் ஆற்றலுக்கு முடுக்கும் கருவிகளைத் தயாரிக்கும் முயற்சிகள் நடை பெற்று வருகின்றன. கற்றைத் தயாரிப்பு அமைப்புகளில் காந்த நான் முனை லென்சுகளும், இரு முனைகளும் கற்றை களைக் குவிக்கவும், வெவ்வேறு இலக்கு நிலைகளை நோக்கிக் கற்றைகளைத் திசை திருப்பி விடவும் அ.க. 5-51அ ஊட்டத்துக்கள் நிறமாலையியல் 803 உதவுகின்றன. ஓர் இருமுனைக் காந்தத்தைப் பயன் படுத்தித் துகள் கற்றைகளை ஆற்றலுக்கேற்றபடி பிரித்து விடலாம். ஒரு துளை அமைப்பின் உதவி யால் படுகற்றையின் ஆற்றல் பிரிவினையைச் செம் மைப்படுத்த முடியும். மேலும் முன்னேற்றப்பட்ட அமைப்புகள் இலக்கில் குவியப்படுத்தப்பட்ட அல்லது பிரிகை செய்யப்பட்ட கற்றைகளை வீழ்த்து கின்றன. இதன் மூலம் கற்றைச் செறிவில் இழப்பு ஏற்படாத வகையில் பிரிகைப் பொருத்தத்தைப் (dispersion matching) பயன்படுத்திச் சிறப்பான ஆற்றல் பிரிகையைப் பெற முடிகிறது. 20 மி.எ வோல்ட்டுக்குக் குறைவான ஆற்றல் உள்ள கற்றைகளின் நிலையையும் திசையையும் கட்டுப்படுத்த இணையாக்கி (collimator) அமைப்பு கள் பயன்படுகின்றன. ஆற்றல் அதிகமாயிருக்கும் போது ணையாக்கித் துளைகளிலிருந்து சிதறல் தோன்றுவதால் அம்முறை ஏற்புடையதாகாது. அதற்கு மாறாக நிலையான துலக்கிகளின் மூலம் கற்றை இருப்பிடங்களைக் கண்காணிக்கும் முறைகள் பயன்படுகின்றன. மின் துகள்கற்றைகள் காற்றின் வழியாகச் செல்லும்போது சிதறி ஆற்றலை இழக்கும். எனவே அவை செல்லும் பாதைகள் வெற்றிடமாக்கப்பட வேண்டும். வெற்றிடத்தை உண்டாக்க எண்ணெய்ப் பம்புகளைப் பயன்படுத்தினால் எண்ணெயிலிருந்து வரும் கார்பனும் சிலிகானும் இலக்குப் படலத்தை மாசுபடுத்தி விடும். எனவே இத்தகைய மாசுகளை வடிகட்டித் தடுக்கக் கூடிய வசதியுள்ள பம்புகளும், மூலக்கூறு பம்புகளும், அயனிப் பம்புகளும்,டைடேனி யம் பதங்கமாதல் பம்புகளும் (sublimation pumps) நீர்ம ஹீலிய வெப்பநிலையிலுள்ள உறைதல் பம்பு களும் பயன்படுகின்றன. இலக்கும் மின் துகள் துலக்கிகளும் பொருத்தப் பட்டுள்ள சிதறல் அறைகள் பல் உருவங்களிலும் அளவுகளிலும் அமைந்திருக்கும். துகள் சிதறல் கோணத்தைத் துல்லியமாக அமைத்து அளவிடக் கூடிய வசதி, பலவகையான துலக்கி அமைப்புகளை தொடர்பில்லாமல் ஒன்றுக்கொன்று இயக்கவும் நகர்த்தவும் கூடிய வசதி, வெற்றிடத்தைக் குலைத்து விடாமல் பல்வேறு இலக்குகளைப் பொருத்தக் கூடிய தன்மை, இலக்கின் வழியாக ஊடுருவிச் சென்று பாரடே உருளையை அடையும் கற்றையின் மொத்த மின் அளவை நுட்பமாக அறுதியிடும் வசதி ஆகியவை சிதறல் அறையில் அமைந்திருக்க வேண்டும். கற்றை மின்னோட்டம், இலக்குத் தடிமன், கற்றை நேர் கோட்டமைவு (alignment) ஆகியவற்றை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கண்காணிப்புத் துலக்கி களால் அளவிடலாம். அவை ஏதேனும் ஒரு குறிப் பிட்ட கோணத்தில் பொருத்தி வைக்கப்பட்டு மீள் திறனுள்ள சிதறல் போன்ற பெருமளவு நிகழ்வு