உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/850

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

830 ஊர்வன

830 ஊர்வன வாழ்முறையும், பரவலும். தற்போது வாழும் ஊர் வனவற்றில் பல்லிகளில் 3000 சிறப்பினங்களும், பாம்புகளில் 2700 சிறப்பினங்களும், சிறப்பினங்களும், ஆமைகளில் 200 சிறப்பினங்களும் முதலைகளில் 23 சிறப்பினங் களும்,நீர்,நிலம் ஆகிய இரு சூழ்நிலைகளிலும் பரவ லாகக் காணப்படுகின்றன. இவை வெப்பப் பகுதி களிலேயே அதிகமாகக் காணப்படுகின்றன. வட துருவத்தில் மூன்று சிறப்பினங்கள் உள்ளன. தென் துருவம் ஊர்வனவாகிய விலங்குகளின்றிக் காணப் படுகிறது. பாலைவனங்களிலும் இவை வாழ்கின்றன. இவ்விலங்குகள் நிலத்திலோ, மரங்களிலோ மிகுதி யாகக் காணப்படுகின்றன. சில குழி தோண்டுதல் காற்றில் மிதந்து பறத்தல் போன்ற ஆற்றல்களைப் பெற்றுள்ளன. டிரேகோ என்ற பறக்கும் பல்லி விலா எலும்புகளால் தாங்கப்பட்டுள்ள சவ்வுகளின் உதவியுடன் பறக்கின்றது. குருட்டுப்புழு போன்ற பல்லிகள் நிலையாக நிலத்தடியில் வாழ்கின்றன. இவை பார்வைத் திறனையும், ஓரிரு இணையான கால்களையும், வாலையும் இழந்து, தோற்றத்தில் பாம்புகள்போல் காணப்படும். பல ஊரும் விலங்குகள் நீரில் வாழ்கின்றன. ஆமைகள் நீரிலும் நிலத்திலும் சதுப்பு நிலங்களிலும் வாழ்கின்றன. முதலைகள் யாவும் நன்னீரில் காணப் படினும் குரோகடைலஸ் போரோசஸ் என்ற முதலை வங்காள விரிகுடாக் கழிமுகம், தென்சீனா, மலேயாத் தீவுகள், ஆஸ்த்ரேலியா, இலங்கை, ஃபிஜித் தீவுகள் போன்றவற்றில் பரவிக் காணப்படுகிறது. 9 இந்தியாவுக்கே உரிய கேவியாலிஸ் கேஞ்சட்டிகஸ் கங்கை, பிரமபுத்திரா, சிந்து, மகாநதி ஆகிய பெரும் ஆறுகளில் காணப்படுகிறது. இந்தியக் கடவில் மிகக்கொடிய நச்சுக் கடற்பாம்புகளின் 29 சிறப் பினங்கள் காணப்படுகின்றன. நீர்வாழ் ஆமைகளும், முதலைகளும் முட்டையிடும் காலத்தில் நிலத்தை நாடி வருகின்றன. இவற்றால் பலமணி நேரம் நீருக்கடியில் இருக்க முடியுமாதலால் இவை நுரை யீரலால் மட்டுமல்லாமல் தோல் மூலமும் சுவாசிக் கின்றன. ஊர்வனவற்றில் பாம்புகளும் பல்லிகளும் மனிதன் வாழும் இடங்களில் அதிகமாகக் காணப்படு கின்றன. பாம்பு வகைகளில் நஞ்சுள்ள விலங்குகள் அதிகமாகக் காணப்படுகின்றன நாகப்பாம்பு களை அவற்றின் படத்தைக் (hood) கொண்டும் அவற்றில் காணப்படும் ஒன்று அல்லது இரண்டு கண்ணாடிக் குறிகளைக் கொண்டும், கட்டுவிரி யனைக் கருத்த உடலில் காணப்படும் வெள்ளை வளையங்கள், வெண்மையான வயிறு. தலையில் காணப்படும் கேடயச் செதில்களைக் கொண்டும் கண்ணாடிவிரியனை முக்கோணத்தலை, அத்தலையின் மேல் காணப்படும் சிறிய செதில்கள், '0' வடிவக் குறி, முதுகின் இரு பக்கங்களிலும் சங்கிலித் தொடர் போல் காணப்படும் கறுப்பு வளையங்களைக் கொண்டும் சுருட்டை விரியனை முக்கோணத் தலை, அதன்மேல் காணப்படும் சிறிய செதில்களுக்கிடையே யுள்ள வெள்ளை அம்புக்குறி, முதுகின் இரு பக்கங் முதலை