உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/856

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

836 ஊழியலை

836 ஊழியலை உள்ள கான கிலோமீட்டர் வேகத்தையும் கொண்டு செல்லும். ஆனால் உயரம் ஒரு மீட்டருக்கு மேல் செல்லாத காரணத்தால் நடுக்கடல்களில் கப்பல்களால் இவை கவனிக்கப்படுவதில்லை. எனினும் நீரில் ஆழமும் இதனுடன் தொடர்பு கொண்டுள்ள தால் இவை ஏற்படுத்தும் ஆற்றல் மிகுதியாக இருக்கும். இதனால் இவ்வலை, ஆழம் குறைந்த பகுதி களையும் குறுகிய விரிகுடாவையும், கடற் கூம்பையும் சென்றடையும்போது, உயரம் அதிகமாகிப் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு வரை சுற்றியபின் பெரும் அழிவை விளைவிக்கக் கூடும். பல 1933 இல் ஜப்பான் அகழியின் மேற்குச் சரிவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துடன் தோன்றிய ஊழியலை இருபத்தேழு மீட்டர் உயரம் வரை எழுந்ததால் . கூடிய வாய்ப்பு இருக்கும் சமயங்களில் கடற்பகுதி களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை அனுப்பப்படு கிறது. இவ்வாறு எச்சரிக்கை கிடைக்கும் சமயங்களில் கடல் துறைமுகங்களில் உள்ள கப்பல்கள் அங்கிருந்து நடுக்கடல்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இத்தகைய எச்சரிக்கை அமைப்புகள் நிறுவப் படும் முன்னர், ஊழியலை வருவதைக் கடற்கரை ஓர விளிம்பு (shore line) கடல் நோக்கி உள்வாங்கிச் செல்வதைக் கொண்டு கண்டறிந்தனர். 1946 ஹவாயிலுள்ள கிலோ துறைமுகத்தில் ஏற்பட்ட ஊழியலை இதுபோன்றே ஏற்பட்டது. யுனிமேக் தீவிற்கு மூவாயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள அலூசியன் அகழியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இந்த ஊழியலை உருவானது. யுனி மேக் தீவில் உள்ள அலாஸ்கா, ஸ்காட்சி கேப் ஆகிய இடங்களும் இந்த ஊழியலையால் பாதிக்கப்பட்டன. இத்தீவில் கடல் மட்டத்திற்கு மேல் பதினான்கு உயரத்தில் அமைந்திருக்கும் கலங்கரை விளக்கம் முப்பத்தாறு மீட்டர் உயரத்தைக் கொண்ட ஊழியலையால் முழுதுமாக அழிக்கப்பட்டது. கடற்கூம்பிலும் சில பசுபிக் விரிகுடாக்களிலும் கரை யோரமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் அழிந்தன. மணிக்கு 756 கி.மீ வேகத்தில் பசுபிக்கைக் கடந்து வந்த இந்த அலைகளை மீட்டர் ஏறத்தாழப் பத்து மணி நேரத்திற்குப் பின்னர் சான் பிரான்சிஸ்கோவில் பதிவு செய்துள்ளனர். இந்த அலைகள் சில்லியின் வடக்கிலுள்ள இக்கியு சென்றடைய ஏறத்தாழ இரு பது மணி நேரம் ஆயிற்று. சான்பிரான்சிஸ்கோ வழி அதிக ஆழத்தைக் கொண்டிருப்பதே இதற்குக் கார ணம் ஆகும். இக்கியுவிலும் தென் அமெரிக்காவின் பசிபிக்கரையோரப் பகுதிகளிலும் ஊழியலை உண் டாகியுள்ளன. இவற்றில் ஹவாயிலும் ஜப்பானி லும் ஏற்பட்ட நிலநடுக்கமும் ஊழியலையும் மிக வும் கடுமையாகிப் பெரிதும் அழிவை விளைவித்தன. 1775 இல் லிஸ்பனில் ஏற்பட்ட ஊழியலை கால் வாயைக் கடந்த பின்னரும் கூட வடகடலில் பெரும் அலைகளைத் தோற்றுவித்தது. கடும் புயல் வீசும் சமயம் நடுக்கடல்களில் உள்ள கலங்கள் புயலின் பெரும் அழிவைக் காப்பாற்றிக் கொள்ளத் துறைமுகங்களை வந்தடைவது வழக்கம். ஆனால் ஊழியலை உருவாகும் சமயங்களில் அவ் வலை துறைமுகங்களையே தாக்கக் கூடுமாதலால் துறைமுகங்களிலுள்ள கலங்களை நடுக்கடல்களுக்குக் கொண்டு செல்கின்றனர். 1948 ஆம் ஆண்டு வரை, ஊழியலை வருவதை உணர்ந்து கப்பல்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய எச்சரிப்பு அமைப்பு ஏதும் இல்லை. 1946இல் ஹவாய் நகரை ஊழியலை தாக்கிய பின்னர் பசுபிக் கடற்பகுதி முழுதும் ஊழியலை எச்சரிப்பு அமைப்பு நிறுவப்பட்டது. கடலடியில் நிகழும் புவியதிர்ச்சி அவை உருவாக் கக்கூடிய ஊழியலை ஆகியவை தொடர்பான செய்தி கள் ஓதங்களைப் பதிவு செய்யும் நிலையங்களில் தொகுக்கப்பட்டன. பெரும் ஊழியலை உருவாகக் அலூசியன் அகழியில் ஏற்பட்ட மாற்றத்தால் உண்டான இப்பெரும் அலைகள் பசிபிக் பெருங் கடல்களின் கடற்பகுதிகளில் உள்ள நிலநடுக்க மானி யிலும் ஓதங்களைப் பதிவு செய்யும் நிலையங்களி லும் பதிவு செய்யப்பட்டன. தொடர்ச்சியாக ஏற் பட்ட வளர்ச்சியில் உருவானதுதான் அனைத்துலக ஊழியலை எச்சரிப்பு அமைப்பு ஆகும். இது முதன் முதலில் ஹவாய் தீவுகளை எச்சரிக்கை செய்வதற் கென்று வடிவமைக்கப்பட்டது. ஆனால் இவ் லமைப்பு பெரிதும் உதவியாக இருந்ததால் பசுபிக் பெருங்கடல்களைச் சுற்றி உள்ள நாடுகளும் பின்னர் இவ்வமைப்பில் சேர்ந்தன. ஊழியலையின் வேகம் அதிகமானதால் கொந்தளிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு அருகில் உள்ள இடங்களை முறைப்படி எச்சரிக்கை செய்வதற்குக் கூட முடியாது போய்விடும். 1957 ஆம் ஆண்டில் அலூசியன் அகழிக்கருகில் ஏற்பட்ட புவி அதிர்ச்சி அலைகளைப் பற்றி அடாக் தீவிற்கு எச்சரிக்கை எதுவும் செய்ய முடியாமல் போயிற்று. அதே சமயத்தில் 1964 இல் அலாஸ்காவில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்குப்பின்னர் சரியான சமயத் தில் எச்சரிக்கை செய்ததன் விளைவாகப் பிரின்ஸ் வில்லியம் சவுண்ட், அலாஸ்கா போன்ற கடற் பகுதி களில் வாழும் மக்கள் காப்பாற்றப்பட்டனர். தற் போது அறிவியல் துணையுடன் ஊழியலையைக் கண்டறியக் கருவிகளைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றைக் கொண்டு ஊழியவை ஏற்படும் முறை, நேரம். வேகம் போன்றவற்றைத் தெளிவாக அறிய லாம். ம.அ. மோகன்