838 ஊற்றுநீர் உட்கூறுகளின் உருவாக்கம்
838 ஊற்றுநீர் உட்கூறுகளின் உருவாக்கம் சற்றுக் கீழ் அமையும்போது தோண்டினால் தான் ஊற்றுநீர் கிடைக்கின்றது. மழைப் பொழிவு நிலத்துள் செல்லுமாறு தரைத் தளம் மணற்பாங்காகவோ மணல்பாறைகளாகவோ அமையும்போது மிகுதியான நீர் நிலத்துள் செல்லு கின்றது. பாறையின் வெடிப்பு, இடைவெளி, பிளவு ஆகியவற்றாலும் நீர் செல்கிறது. இவ்வாறு மணல், துகள், பாறைக் கனிமங்கள் ஆகியவற்றின் இடை வெளிகள் பாறை வெடிப்பு, பிளவு போன் றவை நீரை வாங்கிக் கடத்தும் தன்மையுடையவை. இத் தன்மையுடன் அமைந்த மணற் பரப்புகள், துகள் பாறைப் படிவங்கள் பிற பாறை ஆகியவற்றை நீர் புகும் பாறைகள் என்பர். இவை நீரியலில் நீர்கொள் படிவங்கள் என்றும் நீர்கொள் பாறைகள் எனவும் கூறப்படும். களிமண் படிவங்களில் துகள் இடை வெளி மிக நுண்ணியதாக இருப்பதால் நீர் நுழைந்து வெளியேற வாய்ப்பு இல்லை. அனற்பாறைகள், உரு மாறிய பாறைகள் போன்றன கனிமங்களின் அடர்த்தி யால் இடைவெளியின்றியே இருக்கும். அல்லது மிக்க நுண் துளிகளோடு அமைந்தால் அங்கும் இதே போன்று நீர் நுழைந்து வெளிவர இயலாத சூழ் நிலையே ஏற்படுகின்றது. இத்தகைய படிவங்களை யும் பாறைகளையும் நீர்புகாப் பாறைகள், நீர்புகாப் படிவங்கள் என்றும் நீரியலில் இப்படிவங்களையும் பாறைகளையும் நீர்கொள்ளாப் பாறைகள், நீர் கொள்ளாப் படிவங்கள் என்றும் கூறுவர். (நீர் இறைக்கும் முன்) குழாய்க்கினாறு துகள் பாறைகளில், மணற்படிவங்கள், பரல் படிவங்களின் தனித்தனி மணிகளின் இடைவெளி வெற்றிடம் 35% அளவிற்கு இருப்பதும், ஒவ்வொரு மணல் மணிகளுக்கும் இடையே மிகுந்த இடைவெளி கட்டுமான அமைப்புடன் இருப்பதும் பேரளவு நீரினை ஏற்றுக் கடத்துகின்றன. எனினும் சில களி மண் படிவங்களில் இதே விழுக்காட்டிற்கும் அல்லது இதற்கு மேலும் கூட இடைவெளி வெற்றிடம் துகள் களுக்கு இடையே அமைந்திருப்பினும். தனித்தனித் துகள்களுக்கு இடைப்பட்ட வெற்றிட எல்லைக் குறுக்கம் மிக நுண்ணிதாக அமைந்துள்ள கட்டுமான அமைப்பால் இப்படிவங்களுள் நீர் நுழைந்து வெளி வர வாய்ப்பு அருகிவிடும். பாறைகளும், படிவங்களும் நீரைத் தக்கவைத்துக் கொள்ளும் நிலையில் அவற்றை நீர்க்கொள் பாறை அல்லது நீரிடப் படிவங்கள் அல்லது நீரிடப் பாறை கள் என்பர். நீரை ஏற்றுக் கொள்ளாமல்,தடுக்கும் பாறைகளையும், படிவங்களையும் நீர்த்தடைப் பாறை என்பர்.நீரிலிப் படிவங்கள் ஊற்றுநீர்ப் போக்கினைத் தடுத்துத் தாங்கவும், நீரிடப் படிவங்கள் நீரைத் தேக்கி வைக்கவும் செய்கின்றன. ஊற்று நீரோட்டம் அதன் பரவும் திசைப்போக்கு, நீரோட்டக் கால அளவு, ஊற்று நீர் நிலையின் அளவு எல்லை, ஊற்றுநீர் பரவும் படிவம், பாறை களின் தன்மை, ஊற்றுநீரின் தன்மை ஆகியவற்றைக் கொண்டும் பல உட்கூறுகளாகப் பகுத்து ஆராயப் நீர் இறைக்கும் குழாய்க் கிணறு தரைப்பரப்பு மேல் நீர்மட்டத்தளம் நீரோட்டமில்லா நீர் ஏற்கும் பாறைப் படிவம் வரையறுக்கும் வரையறுத்த நீரோட்டம் 1111011 கிணற்று நீர்மட்டம் படிவப்பாறை 1/1/1 நீர் ஏற்காத்தனப்பாறை தரைப்பரப்பு 77 வரையறுக்கும் படிவம் வரையறுத்த நீரோட்டம் வரைவிலா நீரோட்டம் இறைத்த நீர்மட்டம் படம் 2. (அ, ஆ) நீர் ஏற்காத் தளப்பாறை