உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 5.pdf/866

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

846 ஊனுண்ணி

846 ஊனுண்ணி லும் வாழ்கின்றன. இவை திமிங்கிலங்கள் போல முழுமையான நீர் வாழ்க்கைக்கேற்ற தகவமைப்பு ஆட்டர் களைப் பெறாவிடினும், மீன் வடிவத்தையும் மயிர் குறைந்த உடல் தோலையும் துடுப்புப்பாதங்களையும் கொண்டுள்ளன. நீண்டவிரல்கள் சவ்வினால் மூடப் பட்டுள்ளன. ஒட்டாரிடே குடும்பம் 1. நிலநீர் வாழ் தகவமைப்பு களைக் கொண்டவை. மென்மயிர் சீலின் (fur seal) தோல் விலைமிக்கதாகும். ட்ரைமக்கிடே குடும்பம் 2. துருவங்களுக்கருகில் கடல் வாழ் வால்ரஸ் இதிலடங்கும். மேல்தாடையில் 80 செ.மீ. வரை நீளமுடைய மிகப்பெரிய கோரைப் பற்களுள்ளன. மேலுதட்டைச் சூழ்ந்துள்ள மீசை மயிர் மிகவும் தடித்துக் காணப்படுகின்றது. ஃபோசிடே குடும்பம். 3. நீர் வாழ் தகவமைப்பு களைக் கொண்ட சீல்கள், ஃபோகா ஹேலிகோரஸ் என்பவை உட்பட எட்டுப் பேரினங்களைக் கொண்டவை. பின் கால்கள் வாலுடன் இணைந்து சவ்வினால் மூடப்பட்டு நீரில் நீந்துவதற்கு ஏற்றவாறு துடுப்புப்போல் அமைந்துள்ளன. ஹேலிகோரஸ் 2,5 மீட்டர் நீளம் வரை வளரும் பெரிய சீல் ஆகும். இவை ஆர்க்டிக் பகுதிகளிலும் நடுநிலை வெப்ப இடங்களிலும் காணப்படுகின்றன. சீல்களின் தோலுக் கடியில் பிளப்பர் என்னும் கொழுப்புப் பொருள் உள்ளது. சீல்கள் கூட்டமாக வாழும் இயல்புடை யவை. சில சீல்கள் மிக விரைவாக நீந்தும். கூ. கு.அருணாசலம்