80 எக்ஸ் கதிர் விண்மீன்
80 எக்ஸ் கதிர் விண்மீன் பெருவிண்மீன் வளிமத்தைக் கவர்ந்து உறிஞ்சுகின்றது. இவ்வளிமம் அடர்த்தி மிக்க விண்மீனின் பரப்பை அடைவதற்கு முன்பே அதன் வெப்பநிலை பல இலட்சம் டிகிரி கெல்வின் அளவுக்கு உயர்கின்றது. அப்போது வை எக்ஸ் கதிர்களை உமிழ்கின்றன. பால்வெளி மண்டலத்தில் இரும விண்மீன்கள் கோடிக்கணக்கில் காணப்பட்டாலும் அவற்றுள் ஒரு சில மட்டுமே மிக நெருக்கமாகக் காணப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, சைக்னஸ் எக்ஸ் -1 என்ற இரும விண்மீன் இவ்வமைப்பைச் சார்ந்த தாகும். இவற்றுள் ரு விண்மீன், கட்புலனுக்கு உட்படாத மற்றொரு விண்மீனை ஐந்து அல்லது ஆறு நாள்களுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது. கட்புலனுக்கு உட்படாத விண்மீனின் நிறை, சூரியனின் நிறையை விட எட்டு மடங்கு மிகுதியாக உள்ளது. அதன் புறப்பரப்புப் பகுதிகள் எக்ஸ் கதிர் களை உமிழக்கூடியனவாக உள்ளன. ஒரு சுற்றுப் பாதையில் இயங்கி வரும் பெரு விண்மீன் கருந் துளையை மறைக்கும்போது, எக்ஸ் கதிர்கள் புவியை வந்தடைவதில்லை. எனவே கட்புலனுக்கு உட்படாத விண்மீன், கருந்துளை விண்மீன் என்று படுகிறது. சுட்டப் கருந்துளையின் புறப்பரப்புப் பகுதியிலிருந்து எக்ஸ் கதிர்கள் எவ்வாறு வெளிவருகின்றன என்பதற்கான விளக்கத்தையும் ஓரளவு ஊகித்தறிந்துள்ளனர். அருகி லுள்ள விண்மீனின் வளிம நிலைப் பொருள்களைக் கருந்துளை விண்மீன் உறிஞ்சும்போது அவை மிகை ஈர்ப்பினால் முடுக்கத்திற்கு உள்ளாகின்றன. கருந்துளை விண்மீனை அடைவதற்கு முன்பாக, ஒரு சுருள் (spiral) பாதையில் நெருங்கிய, வளிமப் பொருள்கள் கருந்துளையைச் சுற்றித் தட்டு வடிவில் தொகுக்கப்படுகின்றன (படம் - 1) . இத் தட்டிலுள்ள அணுக்கள் ஒன்றோடொன்று மோதிக் காள்ளும்போது எக்ஸ் கதிர்கள் வெளிப்படுகின்றன. எக்ஸ் கதிர் விண்மீன்களை ஆராய்வதற்கெனத் வானியல் ஒரு ஆராய்ச்சி மையம் தனியாக 1978 இல் அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ளது. ஐன்ஸ்டீன் வானியல் ஆராய்ச்சி மையம் என்ற எக்ஸ்கதிர்கள் பெயரில் 55 'சேர்மானத்தட்டு விண்மீன் கருந்துளை இயங்கி வரும் இந்நிலையத்தில் செ. மீ. விட்டமுடைய வானத் தொலை நோக்கி உள்ளது. இதைக் கொண்டு அண்டம். அதற்கு அருகில் உள்ள அண்டங்களின் எக்ஸ் கதிர் மூலங்கள் ஆகியவற்றைத் தெளிவாக ஆராய முடிகின்றது. மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளையும், கொள்கை களையும் நிறுவ முடியும் என்று நம்பப்படுகிறது. - தனலெட்சுமி மெய்யப்பன் நூலோதி. V.L Ginzburg, Key Problem of Physics and Astrophysics, Mir Publishers, 1978; Isaac Asimev, The Universe, Penquion Book, Third edition 1983. எக்ஸ் கதிர் விண்மீன் சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள, எக்ஸ் கதிர் களை வெளியிடும் மூலங்கள் எக்ஸ் கதிர் விண்மீன்கள் (x-ray stars) எனப்படும். (ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட அலைவு நீளத்தையுடைய மின் காந்த அலைகளால் பரப்பப்படும் ஆற்றலுக்கு எக்ஸ் கதிர் என்று பெயர்). 1962-ஆம் ஆண்டு முதல் எக்ஸ் கதிர் காணும் கருவிகளைக் கொண்டு அண்ட வெளியை வானியலாளர் ஆராய்ந்து வருகின்றனர். 1962 ஆம் ஆண்டு எக்ஸ் கதிர் அறியும் கருவியைத் தாங்கிய ஏவுகணை மூலம் நிலாவை ஆராய முற்பட்ட போது எக்ஸ் கதிர்களை மிகுந்த ஆற்றலுடன் விருச்சிக ஸ்கார்ப்பியஸ் X - 1 ராசியிலிருந்து வீசும் என்ற தோற்றுவாயைக் கண்டறிந்தனர். இந்த ஸ்கார்பியஸ் X-1 ஐ 13 ஆம் நிலையிலுள்ள பொலிவுப் பரிமாணம் (magnitude) உடைய விண்மீன் என்று அறுதி யிட்டனர். இந்த எக்ஸ் கதிர் விண்மீன் சூரியனை விட 1018 மடங்கு ஆற்றலுடைய கதிர்களை வீசுகின்றது என்றும் மிகுந்த நீல நிறமுடையது என்றும் கண்ட னர். 1968 ஆம் ஆண்டு சைக்னஸ் X-1 சைக்னஸ் X- 2 என்ற எக்ஸ் கதிர் விண்மீன்களைக் கண்ட றிந்தனர்.