136 எண்ணெய்க் குழாய்க் கிணறு திசை விலகல் காட்டி
136 எண்ணெய்க் குழாய்க் கிணறு திசை விலகல் காட்டி துளை துளைத்தகடு சுழற்பாதை காடி பித்தளை உடல் பரப்பி வடிகட்டி மரை ஆணி படம் 3. கூம்புக்குழல் எண்ணெய்த் அணுவாக்கப்பட்ட துளிகளை எரிக்க மின்மாற்றிகள் பயன்படுகின்றன. இந்த மின் மாற்றிகள் மின்திறனை 10,000 V வரை அதிகரிக்க வல்லவை. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மின் தேக்கி வகை எரிகருவியில் மின்தேக்கியிலிருந்து வெளிப்படும் மின்திறனை மற்றொரு மின்மாற்றி ஏறக்குறைய 14,000 V வரை அதிகரிக்கச் செய்கிறது. முனை களின் இடைவெளியில் மின்பொறி உருவாக்கப் படுகிறது. இந்த இடைவெளியின் அருகில்தான் அணுவாக்கப்பட்ட துளிகள் விழுகின்றன. காற்றூதிகளிலிருந்து வரும் காற்றினால் இந்த மின்பொறி போதுமான தூரம் எடுத்துச் செல்லப் - பட்டு எண்ணெய்த்துளிகளை அடைகிறது. இதனால் மின் முனைகளை எண்ணெய்க்குள் மூழ்காமல், எண்ணெயோடு தொடர்பே இல்லாமல் பாது காப்பான தொலைவில் வைக்க முடிகிறது. இந்த அமைப்பைப் படம் 2 இல் காணலாம். கொள்கலன் பொருத்துதல். எரிப்பிகளுக்குத் தேவையான எண்ணெய், பண்படா எண்ணெயை ஆவியாக்கிக் குளிரச்செய்வதன் மூலம் பெறப் படுகிறது. சாதாரண வைப்பு வெப்பநிலைகளில் இந்த எண்ணெய் வெடிக்கும் தன்மையற்றதாக இருக்கும். எரிப்பிகளுடன் எண்ணெய்க் கொள்கலனைப் பல்வேறு முறைகளில் பொருத்தலாம். தானியங்கி எண்ணெய் எரிப்பிகளில் மிக முக்கியமான பகுதி முதன்மைக் கட்டுப்பாட்டுப் பகுதி ஆகும். எரிப்பியில் ஏதேனும் ஒரு பகுதிச் செயல்பாட்டில் ஏதேனும் சிறு தடை ஏற்பட்டாலும் உடனேயே எரிப்பியின் செயல்பாட்டை இந்தக் கருவி நிறுத்தி விடும். தவறான காற்று விகிதம், தூசிகளால் வரும் குறைகள், எண்ணெய்ப் பற்றாக்குறை, ஒழுங்கற்ற எரிநிகழ்வு போன்ற தவறுகளிலிருந்து எரிப்பி பாது காக்கப்படுகிறது. இத்தகைய கட்டுப்பாட்டுக் கருவிகளின் அண்மைக் கண்டுபிடிப்பு காட்மியம் சல்ஃபைடு கருவி ஆகும். இந்தக் காட்மியம் சல்ஃபைடு கருவி, தீச்சுடரை நோக்கியவாறு பொருத்தப் படுகிறது. மேற்கூறிய தவறுகளில் ஏதேனும் ஒன்று நிகழுமேயானால் காட்மியம் சல்ஃபைடு கருவியின் மின்தடை அதிகரித்து எரிப்பியின் செயல்பாட்டை மிகக்குறைந்த கால அளவில் நிறுத்தி விடுகிறது. பயன்கள். பல வகைப்பட்ட சூடாக்கல், குளிர் வித்தல், பக்குவப்படுத்தல் போன்ற பல துறைகளில் எண்ணெய் எரிப்பி பயன்படுகிறது. மேலும் பல பள்ளிகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகளில் கட்டடங்களைச் சூடேற்றுவதற்கு எண்ணெய் எரிப்பி பயன்படுகிறது. உறிஞ்சிக் குளிர்விக்கும் குளிரூட்டும் பெட்டிகளில் எண்ணெய் எரிப்பி மிகுதியாகப் பயன்படுகிறது. கண்ணாடிகளாலான பயிர்வீடுகளில் செடியின் வளர்ச்சியைத் தூண்டி மிகுதிப்படுத்த கார்பன் டைஆக்சைடை உருவாக்க எண்ணெய் எரிப்பிகள் பயன்படுகின்றன. வயி. அண்ணாமலை எண்ணெய்க் குழாய்க் கிணறு திசை விலகல் காட்டி எண்ணெய் எடுப்பதற்காகக் குழாய்க் கிணறுகள் ஆயிரக்கணக்கான மீட்டர் ஆழத்திற்கு நிலத்தின் அடியில் துளையிடப்படுகின்றன. இவ்வாறு தோண் டப்படும் கிணறுகள் செங்குத்தாகச் செல்லாமல் சற்றே விலகினாலும் எண்ணெய்ப் படிவைச் சென்று அடையாமல் வேறு இடத்தை அடையும் வாய்ப்பு மிகுதி. எனவே குழாய்க்கிணறு தோண்டும்போது அக் கிணறு செங்குத்தாகச் செல்கிறதா அல்லது விலகிச் செல்லுகிறதா என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உதவும் கருவியே திசை விலகல் காட்டியாகும். இக்கருவி, கிணறு தோண்டும் போது விலகும் திசையையும், விலகு கோணத்தையும் ஒளிப்படமாகக் காட்டுவதால் கிடைக்கும் அளவுகள் மிகவும் நுட்பமாக உள்ளன. இக்கருவி ஸ்லெம் போசர் காட்டி மற்றும் சூர்வெல் காட்டி என இரு வகைப்படும். இருவகைக் கருவிகளிலும் செயல்முறை ஒன்றே. குழாய்க்கிணறு தோண்டும் பொழுது இக் கருவிகள் தொடர்ச்சியாக ஒளிப்படம் எடுத்து விலகு திசையையும், கோணத்தையும் காட்டுகின்றன. கருவி காட்டும் அளவுகளைக் கொண்டு வரைபடம் வரைந் .