எந்திர அதிர்வு 207
பூரண வெற்றிடத்தையோ, காண வேண்டியுள்ளது. உராய்வில்லாத இயக்கத்தையோ, உருவாக்குவது மிகவும் கடினம். ஆகவே அனைத்து நேரங்களிலும் காற்றும் உராய்வும் வெளி விசையாகவே செயல்படு கின்றன. இக்காரணத்தால், நடை முறையில் இயற்கை அதிர்வுகளை மட்டும் தனியாகக் முடியாது. மேலும் ஓர் உறுப்பின் இயக்கத்திற்காகச் செலுத்தப்படும் உந்து விசை, காற்றின் ஆற்றலை யும் உராய்வையும் வென்றிடுவதில் விரயமாகிறது. இதனால் பொறியில் உருவாகும் அதிர்வுகளும் ஒடுக்கப்படுகின்றன. இவ்வாறு ஒடுக்கப்படும் அதிர்வு கட்கு, ஒடுக்கப்பட்ட அதிர்வுகள் என்று பெயர். W படம் 1. ஒரு நேர் அதிர்வு. படம் 1 இல் காட்டியுள்ளபடி, அச்சாணியின் ஒரு முனை நிலையாகப் பொருத்தப் பட்டும், மறுமுனை W கிலோ எடையுள்ள பொருளைத்தாங்கிக் கொண்டும் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். இந்தப் பொருள், மேலும் கீழும் சென்று வருமானால் மேலே செல்லும்போது அச்சாணி, அமுக்க விசைக்கும், கீழே வரும்போது இழு விசைக்கும் உட்படும். இது போன்ற இயக்கத் தால், அச்சாணியில் ஏற்படும் அதிர்வுகட்கு நேர் அதிர்வுகள் என்று பெயர். குறுக்கு அதிர்வு. தொங்கும் பொருள் படம் 2இல் காட்டியுள்ளவாறு பக்கவாட்டில் அசைந்தாடுவதாக வைத்துக் கொள்ளலாம். அப்போது, அச்சாணியும் பக்கவாட்டில் வளைந்து கொடுக்க வேண்டிய அவசி யம் ஏற்படுகிறது. ஆனால் இந்த வளைவானது. கண்ணுக்குத் தெரியாமல் மிகவும் குறைந்த அளவின தாகவே இருக்கும். இத்தகைய இயக்கத்தினால் ஏற் படுகின்ற அதிர்வுகட்குக் குறுக்கு அதிர்வுகள் என்று பெயர். இப்போதும் அச்சாணியானது மாறி மாறி, அமுக்கு விசைக்கும், இழு விசைக்கும் ஆட் படுகிறது. எந்திர அதிர்வு 207 படம் 2. திருகு அதிர்வு. தொங்கும் பொருளானது படம் மூன்றில் காட்டியுள்ளது போல் முறுக்கு இயக்கத் திற்கு ஆட்படுமானால், அச்சாணி மாறி மாறி முறுக்கப்பட்டும், தளர்த்தப்பட்டும் வலிமை குன்றும். இதனால் அச்சாணியில் ஏற்படுகின்ற அதிர்வுகட்கு, திருகு அதிர்வுகள் என்று பெயர். இப்போது அச்சாணி முறுக்கு விசைக்கு ஆட்படுகிறது. அதிர்வுகளைப் பற்றி, மேலும், விரிவாக அறிந் திட, அதிர்வு தொடர்பான, சில வரையறைகளை அறிந்திடுவது அவசியம். சிலவற்றைக்கீழே காணலாம். படம் 3.