210 எந்திர இயக்கம், தொழிலக
210 எந்திர இயக்கம், தொழிலக மனிதன் குறிப்பிட்ட சில கடமைகளை எளிதாகத் தொல்லை எதுவுமின்றிச் செய்து முடிக்கும் வகையில் எந்திரத் தொகுதிகள் பயன் தரக்கூடியவையாக மட்டுமே இருக்கும். மனித வலிமையால் எளிதாக மட்டுமல்லாமல். மிகையான காலத்தில் செய்ய இயலாத கடமைகளை இன்று சில எந்திரத் தொகுதிகள் செய்யக்கூடியவை யாக உள்ளன. எடுத்துக்காட்டாக வலிமை பொருந் திய மனிதனால் தூக்க இயலாத எடைகள், மிக அதிகமான எடையுள்ள வாகனங்கள், எந்திரங்கள், பாளங்கள் போன்றவை ஒரு நெம்புகோல் கொண்டு இயங்கும் திருகு சுமை தூக்கியால் (screw jack) இடம்பெயர்கின்றன. அவ்வாறே ஓர் ஓர் எரிபற்றுப் பொத்தானை அழுத்தியவுடன், பல வகை இயக்க அமைப்புத் தொடர்களால் வடிவமைக்கப்பட்ட உட்கனற் பொறி வியத்தகு செயல்களைச் செய்வது அனைவரும் அறிந்ததே. எந்திரத் தொகுதிகள் வடிவமைக்கப்படும் முக்கிய காரணமே குறைந்த செலவில் நிறைவான வேலைப் பயன்களைப் பெறுவதேயாகும். எந்திரத் தொகுதி யின் திட்ட அமைப்பு தேவைக்கேற்ற வகையில் முனைப்பாகவோ, குறுகிய நேரத்திற்குள் முடிக்கப் படும் வகையிலோ இருக்கும். குறைந்த எண்ணிக் கையில் பொருள்கள் உற்பத்தி செய்யப்படும்போது எந்திரத் தொகுதிகள் எளிய அமைப்பினைப் பெற்றிருக்கும், பெருந்திரள் உற்பத்தியானால் எந்திரத் தொகுதி தன்னியக்கமாகச் செயல்படும் வகையில் திட்ட அமைப்பினைப் பெற்றிருக்கும். மேலும் சில எந்திரத் தொகுதிகள், தானியங்கி ஊர்திகளில் சிக்கலான அமைப்புகளுடன் பொருத்தப் பட்டிருக்கும். காண்க, எந்திரம், இலகு எந்திரம். -கே.ஆர்.கோவிந்தன் எந்திர இயக்கம், தொழிலக செய்பொருளிலிருந்து தேவையற்ற பகுதிகளை வெட்டுக்கருவி மூலம் வெட்டி நீக்குதல் எந்திர இயக்கம் எனப்படுகிறது. இந்த இயக்கங்களால் செய்பொருளை வேண்டிய அளவிற்கும் உருவத் தோற்றத்திற்கும் மாற்ற முடியும். வெட்டுக்கருவிகள். வெட்டி நீக்கப்பயன்படும் இக்கருவிகள் ஒருமுனைக் கருவி, பல்முனைக்கருவி என இருவகைப்படும். தோற்றம், இயக்கம் இவற் றில் உள்ள சிறு சிறு மாற்றங்களின் அடிப்படையில் வை வாள், துளையிடு கருவி, துளை திருத்து கருவி, உராய்ந்து நீக்கும் கருவி எனப் பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன. வெட்டி நீக்கப்படும் பகுதி, அளவின் அடிப்படையில் நீங்கு துகள்கள் (chip) செதில்துகள்கள், சிறுதுகள்கள் எனப்படுகின்றன. வெட்டுக் கருவிகளின் தோற்ற மும் புற அமைப்பும் வேறுபட்டாலும் வெட்டுகிற அடிப்படை இயக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. செய்பொருளையும் வெட்டுக் கருவியையும் தாங்கி, வெட்டுதல் இயக்கத்தை நிகழச் செய்யும் எந்திரங்கள் அளவிலும் உருவிலும் மிகுதியாக வேறு படுகின்றன. இந்த வேறுபாடுகளின் அடிப்படையில் இவை சாதாரண சாணை பிடிக்கும் எந்திரம் முதல் மிகப்பெரிய தானியங்கி எந்திரம் வரை பல வகை யாக உள்ளன. கடைதல், முனைதிருத்தல், துளை பெரிதாக்கல், கொந்துதல் (broaching), அறுத்தல், இழைத்தல், வடிவமைத்தல், துளையிடல், சாணைபிடித்தல், பற்சக்கரம் உருவாக்கல், மெருகேற்றல், போன்றவை எந்திர இயக்கங்களின் சில வகைகளாம். செய்பொருள் வெட்டுக்கருவி; இவற்றிற்கு இடையே உள்ள சார்பு நகர்வு. எந்திர இயக்கம் நிகழ்வதற்குச் செய்பொருளுக்கும் வெட்டுக்கருவிக்கும் இடையே சார்பு நகர்வு இருத்தல் அவசியம். சில எந்திரங் களில் செய்பொருளும் ஏனையவற்றில் வெட்டுக் கருவியும் நகரும். பொதுவாக எந்த எந்திரத்திலும் வெட்டுக்கருவி, செய்பொருள் இரண்டையுமே விரும் பிய திசையில் நகர்த்தக்கூடிய அமைப்பு இருக்கிறது. அடிப்படையில் எந்த நகர்வையும் நேர்கோட் டில் முன்னும் பின்னும் நகரும் நகர்வு, சுழற்சி நகர்வு என இருவகைக்குள் அடக்கிவிடலாம். எடுத் துக் காட்டாக கடைதல் இயக்கம் நிகழ்கையில் சுழற்றப்படுகிறது. கடைபொறியில் செய்பொருள் வெட்டுக்கருவி நேர்கோட்டில் நகர்கிறது. இழைக் கும் எந்திரத்தில் வெட்டுக்கருவி நிலையாகவும், செய்பொருள் முன்பின்னாகவும் நகர்கிறது. ஒரே இயக்கத்தைப் பல்வேறு எந்திரங்களில் பல்வேறு நகர்வுகளின் மூலம் நிகழ்த்த முடியும். எடுத்துக்காட்டாக துளையிடல் இயக்கத்தைக் கடை பொறி, துளையிடு கருவி இரண்டிலும் நிகழ்த்தலாம். கடைபொறியில் செய்பொருள் சுழற்றப்பட்டு, வெட் டுக்கருவி (துளையிடுகருவி) வால்பகுதியில் இணைக்கப் பட்டு நேர்க்கோட்டில் செய்பொருளை நோக்கிச் செ செலுத்தப்படுகிறது. ஆனால் துளையிடும் எந்தி ரத்தில் செய்பொருள் அசையாநிலையில் இருக்கத் துளைக்கருவியே சுழல்வதோடு அச்சுத்திசையில் நேர்கோட்டில் செய்பொருளுக்குள் நகரவும் செய் கிறது. எனவே, எந்த இயக்கத்தை எந்த எந்திரத் தில் நிகழ்த்த வேண்டும் என்பது இயக்கத்தின் எளிமை அல்லது செலவுக்குறைவு போன்ற சில காரணங்களைப் பொறுத்தே அமைகிறது.