எந்திரப் பொறியியல் 231
படம் 6 இல் இதை அறியலாம். இதில் B என்னும் புள்ளி AC என்னும் நெம்புகோலின் மையமாக அமைந்துள்ளதைக் காண்க. நெம்புகோலின் நீளத் துடன் ஒப்பிட்டு நோக்குகையில் X மற்றும் Y இன் தொலைவு மிகக் குறைவாக இருக்கும். ஒரு நிலைத்த சுழல்தானத்தில் இயங்கக் கூடிய நெம்புகோல்கள் குறிப்பாக நேர்கோட்டு இடப்பெயர்ச்சி பெருக்க மடையப் பயன்படுத்தப்படுகின்றன. படம் 7 இல் காட்டப்பட்டுள்ள சட்டமைப்பு (pantograph) ஐந்து இடையிணைப்புகளைக் கொண்டு இருப்பதைக் காணலாம். இவ்வகை இயங்கமைப்பு வரைபட இயலில் வரைபடங்களைச் சிறிதாக்கவோ பெரிதாக்கவோ பயன்படுகிறது. ஐந்தாம் இடை யிணைப்பில் உள்ள புள்ளி Q ஒரு வளைகோட்டுப் பாதையில் சென்றால், நான்காம் இடையிணைப்பில் உள்ள புள்ளி P-யும் அதே மாதிரியான ஒரு கோட்டுப் பாதையில் செல்லும். ஆனால் P-புள்ளி யால் வரையப்படும் கோடு பெரிதாக்கப்பட்ட வளை கோடாக இருக்கும். இங்கு ABCD என்பது ஓர் இணைகரமாக இருக்கும். சுழல் தானம் A - நிலைத்த புள்ளியாக இருக்கும். வளை ஜோஸப்-விட் வொர்த் என்பார் (1803-1887) ஆறு இடையிணைப்புகளைக் கொண்டு ஓர் இயங்க மைப்பை உருவாக்கினார். இதை விரைவு-திருப்ப இயங்கமைப்பு (quick-return rechanism) என்பர். இதில் நழுவு முன்னோக்கு வீச்சில் (forward stroke) குறைந்த வேகத்துடனும் திருப்பு வீச்சு (return stroke) அதிக வேகத்துடனும் இயங்கும். படம் 8 இல் இவ்வமைப்பைக் காணலாம். நழுவி - வணரி இயங் கமைப்பிற்கும் விட்வொர்த்தின் விரைவு - திருப்பு இயங்கமைப்பிற்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால். நழுவி-வணரி இயங்கமைப்பில் நழுவி இரு திசைகளிலும் அதே வேகத்துடன் (சீரிசை இயக்கம்) செல்லும். ஆனால் விட்வொர்த் தின் விரைவு-திருப்பு இயங்கமைப்பில் முன்னோக்கி நகரும் வேகம் குறைவாகவும், திரும்பும் வேகம் அதிகமாகவும் இருக்கும். மேலும் இதில் ஆறு இடையிணைப்புகள் உள்ளன நழுவி-வணரி யங்கமைப்பில் நான்கு இடையிணைப்புகளே உள்ளன. சுழல் இணைப்பு (universal joint) என்னும் இயங்கமைப்பு, வெட்டிக் கொள்ளும் அச்சுகளைக் கொண்ட சுழல் தண்டுகளில் ஒன்றின் இயக்கத்தை மற்ற தண்டிற்குக் கடத்தப் பயன்படுத்தப்படுகிறது. படம் 9 இல் இவ்வகை இயங்கமைப்பைக் காணலாம். . மேலும் பலவகை யங்கமைப்புகளும், எந்திரப் பிணைப்புகளும் பல்வேறு வகையான எந்திரங்களில் பயன்படுத்தப்படுகின்றன, எனினும் சிக்கலான பிணைப்புகள் தற்போது வழக்கில் இல்லை. இதற்குக் காரணம், மின்ஆற்றல், நீரியல் ஆற்றல், வளியழுத்த (pneumatic) ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டு எந்திரப் பொறியியல் 231 சக்தியைத் திறம்படக் கடத்தும் இணைப்பில் பல மேம்பாடுகளுடன் உள்ளமையேயாகும். எந்திரப் பொறியியல் பொறியியல் துறை, பொதுவியல், மின்னியல், பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. க. வேதகிரி எந்திரவியல், மின்னணுவியல் எனப் பொதுவான பொறியியல் துறையில் உள்ள இதர பிரிவுகளுக்கு இணையான சிறப்புடன், அறிவியல் திட்டங்களுக்கு அடித்தள மாக, மருத்துவம், வேளாண்மை, போன்றவற்றுடன் இன்றியமையாதவாறு விட்ட அறிவியலே எந்திரவியல் ஆகும். விஞ்ஞானம் ஒன்றி அடிப்படைப் பிரிவு. எந்திரவியலைப் பொதுவாக ஆற்றல், உற்பத்தி என இரு வகைப்படுத்தலாம். க ஆற்றல். ஐம்பெரும் பூதங்கள் எனப்படும் நீர், நிலம், நெருப்பு, காற்று, வான் ஆகியவற்றில் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணர உள்ள வழிமுறைகளை ஆராய்ந்து மேம்படுத்துவதே எந்திர வியல் துறையின் நோக்கமாகும். எந்திரவியலிலுள்ள ஆற்றல் பெரும்பாலும் வெப்பமும், வேலை அல்லது செயல்திறனுமே ஆகும். இத்தகு ஆற்றல்களின் பரிமாற்றத்தால்தான் பல்வேறு பயனளிக்கக் பொறி வகைகள் உருவாகியுள்ளன. எந்திர ஆற்றலை வெளிப்படுத்த, பெரும்பாலும் சுழல் ஆற்றலே தேவைப்படுகிறது. எங்கேனும் ஒரு மூலையில் ஏதேனும் ஓர் உருளை அல்லது சக்கரம் சுழன்று ருக்க வேண்டியுள்ளது. கொண்டே கூடிய தனால் கிடைக்கக் கூடிய சுழல் ஆற்றலைக் கொண்டு பல்வேறு வகையான வேலைகளும், வியத்தகு பலன்களும் கிடைக்கின்றன. ஆகவே, ஒரு கருவியின் உருளை சுற்றுவதற்கான தத்துவங்களை அலசி, அறிவியல் அடிப்படையில் ஆய்வுகளையும் நடத்தி, ஓர் இயங்கு, இயக்கு அமைப்பினை (mechanism ) வடிவமைப்பதே எந்திரவியலாகும். எனவே, வெப்பத் தினைச் செயல் ஆற்றலாகவும் செயல் ஆற்றலை வெப்ப ஆற்றலாகவும் பயனளிக்கத் தக்க வகை யில் மாற்றுவதே எந்திரவியல் எனவும் கொள்ள லாம். இதனையே ஆற்றல் சமன்பாடு அல்லது ஆற்றல் நிலைக் கொள்கை (ஆற்றல் மாறாக் கோட்பாடு) விளக்குகிறது. ஒரு வகையான ஆற்றலைப் பிறிதொரு வகையான ஆற்றலாக மாற்றாலாமே தவிர, புதிய ஆற்றலை உருவாக்குவது என்பது இயலாது. இதனை அடிப்படையாகக் கொண்டுதான் பல்வேறு விளக்கம் எந்திரவியலாக உருவானது எனக் கூறினும் பொருத்தமாகும். ய