எந்திரம், விதைக்கும் 241
. இப்பால் 2-3 மணிக்குள் 45-55°F வெப்பநிலைக்குக் குளிர்விக்கப்படவேண்டும். பரப்புக்குளிர்விப்பான்கள், சேகரிக்கும் தொட்டிக்குள் பால் விழும் முன்னரே குளிர்விக்கின்றன. இவ்வகைக் குளிர்விப்பான்களில் முதலில் குளிர்ந்த கிணற்று நீர் குளிர்விப்பியாகப் பயன்படுகிறது. இறுதிநிலையில் எந்திர முறையில் குளிர் பதனம் செய்யப்படுகிறது. குளிர்விக்கப்பட வேண்டிய பால், குவளைகளில் நிரப்பப்பட்டு குளிர்பதனப் பெட்டிகளில் வைக்கப்படுகிறது. இம் முறையில் பால் 50°Fக்கும் குறைவாகக் குளிர்விக்கப் படுகிறது.இக்குவளைகளின் வெளிப்பரப்பின் மீது நீர் தெளிக்கப்படுகிறது. அல்லது இக் குளிர்ந்த வளைகள் குளிர்ந்த நீரினுள் அமிழ்த்தி வைக்கப் படுகின்றன. 3-A செந்தரப்படி வடிவமைக்கப்பட்ட தொட்டிகள் பாலை 50°F க்கு 1 மணி நேரத்திற் குள்ளும் 40° Fக்கு 2 மணி நேரத்திற்குள்ளும் குளிர் விக்கும் திறன் கொண்டவை. இக்குளிர்ந்த பாலுடன் சூடான பாவைக் கலக்கும் போது அக்கலவையின் வெப்பநிலை 50 Fக்கு மேல் இருக்கக் கூடாது. பொதுவாக பால் 40°F அல்லது அதற்கும் குறைவான வெப்ப நிலையில் ஒன்று அல்லது இரண்டு நாள், தொட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும். தூய்மைப்படுத்தும் கருவி. இக்கருவி, பாலில் உள்ள தேவையற்ற மாசுப் பொருள்களை, மைய விலக்கு விசையின் மூலம் நீக்குகிறது. சில சமயங் களில் வடிப்பான், இத்தூய்மைப் படுத்தலுக்குப் பயன்படுகிறது. ஆனால் வடிப்பான் குறைந்த திறன் உடையது. தோற்றத்திலும், செயல்முறையி லும் இத்தூய்மைப்படுத்தும் கருவி பிரிப்பானைப் போன்றது. சிறு கிண்ணத்தில் சேகரிக்கப்பட்ட மாசுப் பொருள்கள் அடிக்கடி நீக்கப்பட வேண்டும். பொதுவாக, பால் சூடாகும் முன்னரே தூய்மைப் படுத்தப்படுவதால் சூடாக்கப்பட்ட பால் மாசுபடுவது தடுக்கப்படுகிறது. இத்துாய்மைப் படுத்தல் 50°-95°F வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது பாலிலிருந்து கொழுப்பை நீக்க உதவும் எந்திரமுறை மையவிலக்குக் கருவி பாலேடு நீக்கிகள் எனப்படும். செயற்கைப்பால் உண்டாக்கும் கருவி, பாலைச் குடாக்கித் துப்புரவு செய்யும் கருவி, போன்றவை முக்கியமான பண்ணை எந்திரங்களாகும். ஆவியாக்கும் கலமும் உலர்விப்பானும் பாலில் உள்ள நீரை நீக்க உதவும் எந்திரங்களாகும். இதனால், சேமிப்பு மற்றும் போக்குவரத்துச் செலவுகள் குறைகின்றன. எந்திரம், விதைக்கும் D பால் வா. அனுசுயா விதைத்தல் என்பது விதைகளை வேண்டிய ஆழத்தில் ஊன்றுதல், நிலத்திற்கு மேல் விதைகளைத் தூவுதல், எந்திரம், விதைக்கும் 24/ நாற்றுகளைப் பிடுங்கி நடுதல் போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. உயர் விளைச்சல் கிடைத்திடத் தேவையான அளவு விதைகளைச் சரியான ஆழத் தில், காலந் தவறாது தக்க இடைவெளிவிட்டு ஊன்றுதல் வேண்டும். பொதுவாக நிலக்கடலை, மக்காச்சோளம் போன்ற பெரிய விதைகள் ஆழத் திலும், ராகி, சும்பு போன்ற சிறுதானியங்கள் மேலாகவும் ஊன்றப்படுதல் வேண்டும். விதைக்கும் முறைகள். தூவுதல், துளையிட்டு விதை ஊன்றுதல், ஏருக்குப் பின்னால் விதையிடல், சாலில் விதையிடல், செடிக்குச்செடி வரிசைக்கு வரிசை சம இடைவெளியில் விதையிடல், செடிக்குச் செடி இடைவெளியில் விதையிடல், நாற்று நடுதல் என விதைக்கும் முறைகள் பல வகைப்படும். விதைக்கும் கருவியின் பணிகள். நல்ல விதைக்கும் கருவி சீரான ஆழத்திற்குச் சால் அமைத்தல், விதை பழுதடையாமல் ஒரே சீராக விதையிடல், விதைகளை மூடி மண் அணைத்தல் என மூன்று பணிகளையும் சிறப்பாகச் செய்திடும் வகையில் வடி வமைத்திடல் வேண்டும். விதைக்கும் எந்திரங்களை விதையிடும் முறைகளைக் கொண்டு இரண்டு வகை களாகப் பிரிக்கலாம். இவை மனிதர்களால் யிடும் விதைப்புக் கருவி, தானாகவே விதையிடும் விதைப்புக் கருவி எனப்படும். விதை சான்றாக, முதல் வகை விதைப்புக் கருவிக்குச் ஆந்திர மாநிலத்தில் உள்ள 'கொழு' விதைக்கும் கருவியைக் கூறலாம். இக்கருவி மாடு கொண்டு இழுக்கப்படுகிறது. படம் 1 இல் காட்டப்பட்டுள்ளது போல் இரண்டு அல்லது மூன்று சிறு கலப்பைகள், நிலத்தை உழுது சால் உண்டாக்குகின்றன. ஒருவர் உழுது கொண்டு செல்ல, மற்றொருவர், மேலே உள்ள கூம்பு வடிவ விதைப்பெட்டியில். விதைகளை ஒரே சீராகப் போட்டுக்கொண்டு வர வேண்டும். விதைப்பெட்டி, குழாய்கள் மூலம் கலப்பையுடன் இணைக்கப்பட்டுள்ளது. கலப்பையில், துளையிடப் பட்டு விதைகள், கொழுவிற்குப் பின்னால் விழும் படி வகை செய்யப்பட்டுள்ளது. இக்கருவியில் விதையிடுபவர், மிகவும் பழக்கப் பட்டவராக இருத்தல் வேண்டும். விதைகள் ஒரே சீராக விழும் வாய்ப்புக் குறைவு. இரண்டாவது வகை விதைப்புக் கருவிகளை, மனிதரால் தள்ளப்படும் கருவி, விலங்குகளால் இழுக் கப்படும் கருவி, உழுவுந்தினால் இயங்கும் கருவி என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். மனிதரால் தள்ளப்படும் கருவி ஒரு வரிசையில் விதைப்பதறகும், மாடுகளால் இழுக்கப்படுபவை மூன்றில் இருந்து 5 வரிசை வரை விதைப்பதற்கும் உழுவுந்து மூலம் இயக்கப்படுபவை 6- 12 வரை விதைப்பதற்கும் பயன்படுகின்றன. வரிசை