உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 எந்திரம்‌, விதைக்கும்‌

244 எந்திரம், விதைக்கும் உள்ள குழியில், விதைகள் தங்கி, விதைப்பெட்டியின் கீழ்ப்புறத்தில் உள்ள விதைக் குழாயின் மூலமாகச் சால்கொழுவின் பின்புறத்தை அடைகின்றன. சாலில் விழுந்த விதைகளை, சால் தூர்ப்பி மறைக்கிறது. தேவையற்ற இடங்களில் விதை விழுவதைத்தடுத்திட விதை நிறுத்தும் அமைப்பு பயன்படுகிறது. இது ஒரு கவைக்கோல் போன்ற உறுப்பின் மூலம் நிலச் சக்கரத்தில் இருந்து விதை உருளையைத் தேவை யற்றபோது பிரித்து விடுகிறது. எனவே, விதை உருளை சுழல்வதில்லை. மாடிழுக்கும் உமிழ் குப்பி விதைக்கருவி. து மாடுகளால் இழுக்கப்படுகிறது. இதில் மூன்று அல்லது ஐந்து சால் கொழுக்கள் கொண்ட வகை உள்ளன. ரண்டு நிலச்சக்கரம் இரும்புப் பட்டைகளால் ஆக்கப் பட்டுள்ளது. விதையிடும் அமைப்பு நிலச்சக்கரத் துடன் பற்சக்கரங்களினால் இணைக்கப்பட்டுள்ளது. விதையிடும் அமைப்பு உமிழ்குப்பி வகையைச் சேர்ந்தது. ஒரு வட்டத் தகட்டின் சுற்றுப்புறத்தில் சிறு குப்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வமைப்பு விதைப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும். A வட்டத்தகடு சுழலும்போது, விதைகள் குப்பி களால் எடுத்துச் செல்லப்படும். குப்பிகள் வட்டப் பாதையின் கீழ் நோக்கி வரும்போது, விதைகளை உமிழ்கின்றன. பின்னர் விதைகள் விதைக் குழலின் மூலமாகச் சால்கொழுவின் பின்புறத்தை அடை கின்றன. சால்கொழு 'கொத்துக்கொழு' வகையைச் சேர்ந்தது. பண்ணையில் இருந்து கருவியை வயலுக்கு எடுத் துச் செல்லும்போதும், மற்ற தேவையற்ற நேரங் களிலும், சால் கொழுக்களை மேலே தூக்கிவிட ஓர் அமைப்பும் இதில் உள்ளது. வரிசைக்கு வரிசை இடை வெளியை மாற்றிட, சால்கொழுக்களை மாற்றிப் பொருத்த வேண்டும். இதற்கான வசதி முதன்மைச் இணைக்கும் பற்சக்கரம் கொழு தூக்கும் பிடி விதைக்குப்பி விதைத்தட்டு விதைப்பெட்டி விதைநிறுத்துகோல் நுகம் நிலச்சக்கரம் கருத்தடி அழுத்து சக்கரம் சுழற்றும் பற்சக்கரம் விதை தூர்ப்பி விதைக்குழல் சால்கொழு படம் 3. மாடிழுக்கும் உமிழ் குப்பி விதைக் கருவி (பக்கவாட்டுத் தோற்றம்)