உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஃகு கட்டகம்‌ 3

எஃகு கட்டகம் 3 பின்னல்கள் THII வலிவுத்தட்டு படம் 3. கூட்டு சிக்கலானது. குட்டையான தூண்கள் அமுக்கத்தால் நொறுங்கிச் சிதைகின்றன. ஆனால் நெடிய தூண்கள் நெளிந்து குறைவான சுமையிலேயே செயலிழக் கின்றன. உறுப்பின் மெலிமை விகிதத்தையும், பொருட்பண்பையும் பொறுத்து அமுக்க வலிமை மாறுபடும். தாங்க வேண்டிய சுமை மிகுதியானால் கூட்டு அமுக்க உறுப்புகளைப் பயன்படுத்தவேண்டும். கூட்டு உறுப்பில் உள்ள தனிப்பட்ட கூறுகள் ஒன்றிச் செயல்பட, பின்னல்கள் (lacings) அல்லது பிணைக்கட்டைகள் (battens) இணைக்கப்பட வேண்டும். அமுக்க உறுப்பின் மெலிமை விகிதம் 350க்கு மேல் இருத்தல் கூடாது. அமுக்க உறுப்பு களைப் பின்வரும் முறையில் வடிவமைக்கலாம்: உறுப்பின் மீதுள்ள சுமையைப் பொறுத்து அதன் வெட்டுமுகப் பரப்பைத் தோராயமாகக் கணக்கிட்டு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உருட்டிய வடிவங்களைத் தேர்ந்தெடுத்தல், தேர்ந்தெடுத்த உறுப்பின் மிகக்குறைந்த பரப்பின் சுழல் ஆரத்தைக் கணக்கிடல், உறுப்பின் இரு முனைகளும் தாங்கி யிருக்கும் முறையைப் பொறுத்து அதன் தொகு உயரத்தை effective height) இந்தியச் செந்தர நிர்ணய வரைமுறை எண் 800 இலிருந்து அறிதல். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பின் மெலிமை தத்தைக் கணக்கிடுதல். மெலிமை விகிதம் = விகி தொகு உயரம் மிகக் குறைவான சுழல் ஆரம் கணக்கிட்ட மெலிமை விகிதத்திற்கு அனுமதிக்கப் பட்ட அமுக்கத் தகைவை இந்திய செந்த்ர நிர்ணய வரைமுறை எண் 800 இலிருந்து அறிதல். உறுப்பு தாங்கக் அனுமதிக்கப்பட்ட உறுப்பின் கூடிய அமுக்க அமுக்கத் தகைவு X வெட்டு முகப் பரப்பு கணக்கிடப்பட்ட அமுக்கவிசை, உறுப்பின் மீதுள்ள சுமையைவிட மிகுதியாயிருந்தாலோ, சம மாக இருந்தாலோ, தேர்ந்தெடுத்த உறுப்பே போதும். இல்லையேல் போதியவாறு அதிகரித்த பரப்புள்ள விசை அ.க. 6-1அ அமுக்க உறுப்புகள் மாற்று உருட்டிய வடிவங்களைத் தேர்ந்தெடுத்து மேற்காணும் படிகளைப் பின்பற்ற வேண்டும். கூட்டு அமுக்க உறுப்புகளுக்குப் பின்னல்களையோ, பிணைக் கட்டைகளையோ அமைத்து வடிவங்களை ஒன்றி ணைக்க வேண்டும். . உத்திரம். உத்திரங்கள், வளைவு, துணிப்பு விசை களுக்கு (bending and shear force) உள்ளாகின்றன. வை உருட்டு இரும்புச் சட்டங்களாகவோ, கூட்டு உத்திரங்களாகவோ இருக்கலாம். உத்திரங்களை வடிவமைப்பதில் பின்வரும் வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன; உத்திரத்தின் மீதுள்ள பெரும வளைவுத் திருப்புமை (maximum bending moment), துணிப்பு விசை முதலியவற்றைக் கணக்கிடல். உத்திரத்திற்கு வேண்டிய வெட்டுமுகக் கெழுவினைக் (section modulus) காணல். வெட்டுமுகக்கெழு உச்ச வளைத்திறன் அனுமதிக்கப்பட்ட வளை தகைவு எஃகு அட்டவணைகளிலிருந்து உரிய வெட்டுமுகக் கெழு கொண்ட சட்டத்தைத் தேர்ந்தெடுத்தல். தேர்ந்தெடுத்த உத்திரத்தில் உச்ச துணிப்புத் தகைவு (shear stress) அனுமதிக்கப்பட்ட துணிப்பு வலிமை எஞ்சாமலிருப்பதைக் காணல். (இல்லையெனில் பொருத்தமான வேறு சட்டம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்). உத்திரத்தின் தொய்வைக் கணக்கிட்டு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் உள்ளதைக் கண்டறிதல். செறிவுச் சுமை (concentrated load), தாங்குமானங்கள் (bearings) உள்ள இடங்களில் அமுக்கவிசையால் இடையிணைப்புத் தகடு (web plate) நெளியக் கூடும். இதைத் தவிர்க்க உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாளுதல். . தகட்டு உத்திரம், மிகுதியான சுமை தாங்குவ தற்கும், நீண்ட கண் இடைவெளிக்கும் (span) சாதாரண உருட்டு உத்திரங்கள் பயன்படுவதில்லை. இந்நிலையில் தகட்டு உத்திரங்களைப் பயன் படுத்துவது நல்லது. எஃகு தகடுகள், சட்டங்களைக் கொண்டு இவை அமைக்கப்படுகின்றன. பிணைக்கும்