எந்திரம், வேளாண்மைப் பதப்படுத்தும் 249
தானியங்களை அவற்றின் பருமனுக்குத் தக்கவாறு மூன்று தரங்களாகப் பிரிக்கலாம். ஒரு மணி நேரத் திற்கு 300 கிலோ தானியங்களை இந்த எந்திரத்தில் தரம் பிரிக்கலாம். மக்காச்சோளக் கதிர் அடிக்கும் எந்திரம். மக்காச் சோளக் கதிர்களைச் செடிகளிலிருந்து பறித்து, அவற்றை மூடி இருக்கும் உறைகளை நீக்கிய பின்னர் கதிர்களிலிருந்து மணிகளைப் பிரித்தெடுப்பதற்கு உதவும் எந்திரங்கள் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப் பட்டுள்ளன. ஒரே சமயத்தில் உறைகளை நீக்கவும் மணிகளைக் கதிர்களிலிருந்து பிரித்தெடுக்கவும் எந்திரங்கள் உள்ளன. 1 எந்திரம்,வேளண்மைப் பதப்படுத்தும் 249 மக்களாச்சோளக்கதிர் அடிக்கும் எந்திரத்தில் இரு சுழலும் தட்டுகள் மின்னோடியைக் கொண்டு இயக்கப்படுகின்றன. சுழலும் தட்டுகளின் ஒரு பக்கத்தில் பருக்குகள் (projections) நிறைந்திருக்கும். இத்தட்டுகள் சுழலும் போது அவற்றின் நடுவில் உள்ள டவெளி வழியாகச் செல்லும் மக்காச் சோளக்கதிர்கள் அழுத்தமாகத் தேய்க்கப்பட்டு மக்காச்சோள மணிகள் கதிர்களிலிருந்து பறிக்கப் பட்டு, மையவிலக்கு விசையால் வெறும் கதிர்கள் வெளியே எறியப்படும். மின்னோடியுடன் இணைக்கப் பட்டுள்ள காற்றூதியால் மக்காச்சோள மணிகள் தூற்றப்படும். இந்த எந்திரத்தைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்கு 300 கிலோ மக்காச்சோளமணிகள் பெறலாம். 350 மி.மீ 3506.6 1370மிமீ . .7 . B 事 . + . • 1. 1250 மி.மீ படம் 2. மக்காச்சோனக் கதிர் அடிக்கும் எந்திரம் சோனத்தக்கை மக்காச்சோளம் போடும் பகுதி 2, அழுத்தும் வட்டச்சுருள் 3. கதிர் மணிகள் உதிரும் பகுதி 4. சுழலும் தட்டு 5. வெளியேறும் பகுதி 5. சோள மணிகள் வெளிவரும்பகுதி 7. மின்னோடி 8.காற்றூதி 3. 'V' வடிவவார் 10. திசை திருப்பும் சக்கரம்.