உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிகலப்பி 269

எரிகலப்பி 269 ஆ. குளிர்காலத்தில் குட்டிகளை ஈனும். இவற்றின் கருக்காலம் 20-28 நாளாகும். குட்டிகளை அவற்றின் தாய் பேணிக் காக்கிறது. குட்டிகள் மிருதுவான வெண்ணிற மயிரு டன், கண் திறவாத நிலையில் பிறந்த இருபது நாள் களில் வாலின் நுனியில் கருநிற மயிர்க்குஞ்சம் தோன்று கிறது. இருபத்தேழு நாள்களில் கண்கள் திறக்கின்றன. தாய், குட்டிகளுக்கு ஆறு வாரங்கள் பாலூட்டுகிறது. ஆனால் கண் திறவாத நிலையிலேயே றைச்சியை யும் ஊட்டுகிறது. அவ்வப்போது வெளியில் செல்லும் குட்டிகளைத் தாய் மீண்டும் இருப்பிடத்திற்கு இழுத்து வருகிறது. இரண்டு, மூன்று குடும்பங்கள் சேர்ந்து இரையைத் தேடிச் செல்கின்றன. இலையுதிர் காலத் தில் குடும்பத்தினுள் பெற்றோர்களும் குட்டிகளும் பிரிந்து செல்கின்றன. பெண் குட்டிகள் 3,4 களிலும் ஆண் குட்டிகள் ஓர் ஆண்டிலும் இன முதிர்ச்சியடைகின்றன. வட மாதங் எர்மின் நிறம் பருவத்திற்கேற்றவாறு மாற்ற மடைகிறது. ஆண்டுக்கு இரு முறை இவ்வாறான நிறமாற்றம் நடைபெறுகிறது.உலகின் பகுதி களில் கோடைக்காலத்தில் செம்பழுப்பு நிறத்திலுள்ள எர்மின்கள் குளிர் காலத்தில் வெண்ணிறம் பெறு கின்றன. செம்பழுப்பு நிற மயிர்களின் அடியில் வெண் மயிர்கள் வளர்வதால் நிறமாற்றம் மிகவேகமாக நடைபெறுகிறது. கோடைக்காலத்தில் இலைச் சருகு, களிடையில் வாழும்போதும் குளிர்காலத்தில் உறை பனிப் பின்புலத்தில் வாழும்போதும் எர்மின்கள் காலத்திற்கேற்ற சூழலில் இயைந்து வாழ இந்த நிறமாற்றம் உதவுகிறது. எரிகலப்பி ஜெயக்கொடி கௌதமன் இவ் எரிவதற்குரிய எரிபொருள் கலவை தயாராகும் முறை யைக் கொண்டு உட்கனற் பொறிகள் இரு வகை களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மின்பொறி எரிபற்றுப் பொறி (spark ignition engine) ஒன்றாகும். தற்காலத்தில் அனைத்து வகை இரு சக்கரத் தானி யங்கி வண்டிகளும், சிற்றுந்து வண்டிகளும் வகைப் பொறிகளாலேயே இயக்கப்படுகின்றன. இவ் வகைப் பொறிகளில் காற்றும் எரிபொருளும் தேவைக் கேற்ற விகிதத்தில் கலக்கப்பட்டு எரி கலத்தினுள் (combustion chamber) செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு காற்றினையும் எரிபொருளையும் எரிகலத்திற்கு வெளியே தகுந்த விகிதத்தில் கலந்து எரிகலத்தினுள் செலுத்தும் கருவி எரிகலப்பி (carbu- rettor) எனப்படுகிறது. இது மின்பொறி எரிபற்றுப் பொறியின் முக்கியமான துணைக் கருவியாகும்.