276 எரிசிபிலஸ் நோய் (கால்நடை)
276 எரிசிபிலஸ் நோய் (கால்நடை) எரிசிபிலஸ் நோய் (கால்நடை) பன்றிகளைப் பாதிக்கும் இந்நோய்க்குக் காரணம் எரிசிரிலோதிரிக்ஸ் ருசியோபதே (erysepelothrix rhysi- opethae) என்னும் பாக்ட்டீரியாவே ஆகும். பொதுவாக அனைத்து வீட்டு விலங்குகளையும், மனிதர்களையும் இந்நோய் தாக்கும் தன்மையது. எனினும் பன்றியினத்தையே குறிப்பாகத் தாக்க வல்லது. பன்றியின் அனைத்துப் பருவங்களும் பாதிப் புக்குள்ளாகக் கூடியவையெனினும் காலாண்டு முதல் ஓராண்டு வயதுடைய பன்றிகளே இந்நோயால் அதிகம் தாக்குதலுக்குள்ளாகின்றன. நோய் பரவுதல். இந்நோய்க் கிருமி தூய்மையற்ற மண்ணிலும் கழிவு நீரிலும், சிதைந்த பொருள்களி லும் இயல்பாகக் காணப்படும். இக்கிருமி சுற்றுப் புறத்தை எதிர்த்து வாழும் தன்மையது மட்டுமன்றி இருபத்தோரு நாளுக்குக் குறையாமல் மண்ணில் வாழும் இயல்புடையது. சில நேரம் நோய்க்குறி வெளியில் தெரியாமல் கிருமிகளைத் தன்னகத்தே சுமந் திருக்கும் பன்றிகளும், நோயுற்ற பன்றிகளும் கழிவுப் பொருள்களை வெளியேற்றுவதன் மூலம் இதை மண்ணில் பரப்புகின்றன. இக்கிருமி நிறைந்த தூய்மையற்ற நீரும், உணவுமே கால்நடைகளில் இந்நோய்க்குக் காரணமாக அமைகின்றன. எரிசிபிலஸ் நோயின் தன்மையினை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். கடுமையான புரைகண்ட நிலை. நோயின் அறிகுறி திடீரென்று தோன்றி, ஆபத்தான நிலைமை உரு வாகும். நோயுற்ற பன்றி கடும் காய்ச்சலுடன் கண் களில் நீர் வடிய உணவை உட்கொள்ளாது இருக்கும். மூக்குத்தண்டு முழுதும் வீங்க மூச்சுவிடக்கடினம் இருக்கும். கணையமும், நிணநீர்ச் சுரப்பிகளும் பருத்திருக்கும். வயிறு குடற்பகுதிகளில் குடற்பகுதிகளில் இரத்தப் பொட்டுடன் கூடிய கடும் அழற்சி காணப்படும். இரண்டாம் நாள் தோலின் மேற்புறம் செந்திட்டை கள் தோன்றிச் சிவந்த நிறத்திலிருந்து பழுப்பு நிற மாக மாறும். இந்நிலையிலிருக்கும் 80% பன்றிகள் மடிந்து விடும். தோல் தடிப்பு நிலை. இது கடுமையானதோ கொடுமையானதோ அன்று. தோலில் வீக்கத்துடன் கூடிய தடிப்பு பதினைந்து நாளில் மறைந்துவிடும். இதனை வைரத்தோல் நோய் என்று குறிப்பிடுவர். பன்றியின் காது, நுனி, வால் பகுதி, சப்பை, கால் பகுதி ஆகிய இவை சிற்சில சமயம் அழுகிய நிலையில் காணப்படுவதுண்டு. நீடித்த நிலை. பன்றிகளின் இடுப்பு, கால் எலும்பு கள் தரக்கமுற்ற நிலையில், நொண்டுதல் எலுபும் விறைப்பு முதலியன காணப்படும். மூட்டழற்சி மட்டு மன்றி, உள் இதய அழற்சி ஏற்படவும் வாய்ப்புண்டு. இந்நோய்க் கிருமி ஆடுமாடுகளைத் தாக்கும்போது மூட்டழற்சி, தோல் சிதைவு, காய்ச்சல், நொண்டுதல் முதலியவை காணப்படும். விலங்குகளிலிருந்து மனிதர் களிடம் தொற்றக்கூடிய நுண்கிருமி நோய்களில் எரிசிபிலசும் ஒன்று. மனிதர்களிடம் எரிசிபிலஸ் நோய். பெரும்பாலும் மனிதர்களில் தோல் புண், சளிச்சவ்வு வழியே இக் கிருமிகள் உள்நுழைய வாய்ப்புண்டு. இக்கிருமி மனிதர்களின் தோலைத் துளைத்துச் சென்ற ஒன்றிரண்டு வாரத்தில் நமைச்சல், தடித்த திட்டுகள். கடும் வலி போன்றவை விரல்களிலும் கைகளிலும் தோன்றும், சில நேரம் மனிதரின் உடல் முழுதும் செந்திட்டைகளும், தோல் அழற்சியும். திட்டுகளும் ஏற்படலாம். அழுகல் இந்நோய் தாக்கப்பட்ட பன்றி இறைச்சியையும் கழிவையும் தொடும்போது, மனிதர்களுக்கு நோய் பரவுகிறது. இறைச்சிக் கடைக்காரர், இறைச்சி ஆய்வாளர், பன்றித் தொழுவப் பணியாளர் ஆகியோருக்குப் பரவ வாய்ப்புள்ளதால் இது ஒரு தொழில் தொடர்பான நோயாகக் கருதப்படுகிறது. நோய்க் கட்டுப்பாடு, பன்றித் தொழுவங்களைத் தூய்மையாக வைத்தலும், பணியாளர் கிருமி கொல்லிகளைக் கொண்டு தூய்மையாக இருத்தலும், இறைச்சி ஆய்வாளர் கையுறை அணிதலும், புதிதாகப் பண்ணைக்குக் கொண்டு வரப்படும் பன்றிகளை ஒருமாதம் தனித்து வைத்துப் பின் சேர்த்தலும், பன்றிகளுக்குத் தடுப்பூசி போடுதலும் இந்நோயைத் தடைசெய்யும். மருத்துவம். அதிக அலகு பென்சிலின் ஊசி மூலம் செலுத்தலும், எரிசிபிலஸ் எதிர்ச் சீரத்தைக் கொடுத் தலும் நோய் கண்டபின் குணப்படுத்த ஏற்ற மருத்துவ முறையாகும். எரிடானஸ் விண்மீன்குழு ச.தமிழரசன் எரிடானஸ் (eridanus) ஒரு குளிர்கால விண்மீன் குழுவாகும். ஓரியன் விண்மீன் குழுவின் அடியிலிருந்து தென் துருவம் வரை ஏறக்குறைய 32° வரை நீண்டு, பரந்து இருப்பதால், இது எரிடானஸ் ஆற்று மீன்குழு என்றும் சொல்லப்படும். இத்தாலிய நாட் டில் உள்ள 'போ' ஆற்றின் பண்டைய பெயர் எரிடானஸ் என்பதால் அதிலிருந்து ஆறுபோல் நீண்டு . .