உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிதல்‌ திசைவேக அளவீடு 281

எரிதல் திசைவேக அளவீடு 281 சான்றாகக் கூறலாம். இதற்கு சோடியம் டி-கோடு எதிர்ப்பாடு (sodium D line reversal) என்று பெயர். த. தெய்வீகன் எரிதல் திசைவேக அளவீடு எரிபொருளில் வேதி ஆற்றல் பெரும் அளவு மறைந்து இருக்கிறது. எரிபொருளில் கனற்சிக்குள்ளாகும் வேதி மாற்றங்களை நிகழ்த்தும்போது வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாறுகிறது. இக்கனற்சியின் மிகு வெப்ப நிலையில் தீப்பிழம்பு வெளிப்பட்டு மிகுவேகத் தில் செல்கிறது. இந்த வெப்ப ஆற்றல், பயன்தரு வகையில் வேலையைச் செய்து முடிக்க இத்தீப்பிழம்பு வேகத்தின் அளவீடு முக்கியமானதாகும். மேலும் தீப்பிழம்பின் தத்துவம் அடிப்படை ஆகியவற்றைப் புரிந்து கொள்ள, எந்த அளவிற்குத் தீப்பிழம்பு வேகத்துடன் செல்கிறது, எத்துணை அளவுக்கு எரி கலவையினூடே சென்று எரிகலவையை ஆட்கொள் கிறது என்பவற்றைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். தீப்பிழம்பின் வேக அளவை அறிந்து கொள்ளத் தனிப்பட்ட அளவீடு முறைகள் உள்ளன. இவ்வேகம் எரிபொருள் தன்மை, காற்று-எரிபொருள் விகிதம், வெப்பநிலை, அழுத்தம், பாய்ம நிலை ஆகியவற்றைப் பொறுத்து இருக்கும். மேலும் பயன்படுத்தப்படும் வேக அளவுமானியைப் பொறுத்தும் வேக அளவீடு களின் நுட்பம் மாறுபடலாம். எனவே குறிப்பிட்ட எரிகலவையைக் கருத்திற்கொண்டு, சுற்றுப்புறத் தன்மைகளுக்காக மாறிவிடாத வேக அளவை வரை யறை செய்து கொள்வது சாலச் சிறந்தது. அத்தகைய வேக அளவே எரிதல் திசை வேகம் (burning velocity) எனப்படும். கொந்தளிப்பற்ற (non turbulant) எரி பற்றாத கலவைக்குச் சார்புடைய வினை மண்டலத் தின் (reaction zone) நேரான திசை வேகத்தை (normal velocity) அறிவியலில் எரிதல் திசைவேகம் என்று கூறுவர். . எரிதல் திசைவேகம் இவ்வளவு என்று குறிப் பிட்டால் அது எரிகலவையின் சேர்மம், வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றையும் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு வழிகாட்டியாக இருக்கும். இதைத் தீப்பிழம்பில் குறிப்பிட்ட பரப்பளவிற்கு, எரிகலவை மாற்றத்தின் இத்துணை கனஅளவு வீதம் (volume ate) என்றும் கணக்கிடலாம். தீப்பிழம்பின் வேகத் தினை அளவிடும்போது சில சிக்கல்கள் ஏற்படு வதுண்டு. சான்றாக எரிபற்றாது ஒதுங்கியிருக்கும் வளிமங்கள் எரியும் நிகழ்ச்சியில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைக் கூறலாம். தீப்பிழம்பின் குறுக்கே ஏற்படக்கூடிய வெப்பநிலை ஏற்றமானது கனற்சிப் பொருள்களின் அடர்த்தி. திசைவேகம் ஆகிய வற்றில்கூட மாறுபாடுகளை உண்டாக்கலாம். அதனால் எரியாது ஒதுங்கியிருக்கும் வளிமங்களில் சலனம் ஏற்படலாம். நிலையான தீப்பிழம்பு (stationary flame), நகரும் தீப்பிழம்பு ஆகியவற்றின் திசைவேகங்களைத் தெளி வாக அறிய வழிமுறைகள் உள்ளன. ஆய்வுக் கூடத் தில் உள்ள புன்சன் எரிவிளக்கு வழக்கில் உள்ள எடுத்துக்காட்டாகும். படம் 1 இல் உள்ளவாறு தீப் பிழம்பை ஒரு கூம்பாகக் கருதிக் கொள்ளலாம்.கூம் பின் அடித்தளம் எரிவிளக்கின் குழல்வாய் (port) விட்டத்திற்கு இணையாக இருக்கும். S குழாயின் பரப்பு X கலவையின் சராசரி வேகம் தீப்பிழம்புக் கூம்பின் பரப்பு தீப்பிழம்பின் திசை வேகத்தை இச்சமன்பாட் டின் மூலம் கணக்கிடலாம். எனவே கூம்பின் பரப்பில் குறிப்பிட்ட நிமிடத்தில் செலுத்தப்படும் எரியாத வளிமத்தின் கொள்ளளவே திசைவேகமாகும். கூம்பின் உயரம் h, கோணம் x, சராசரித் திசை வேகம் U என்றிருந்தால், உள்ளீடற்ற கூம்பு. எரிந்த வளிமம் Uu எரியாத வளிமம் படம் 1. புன்சன் தீப்பிழம்பு h