எரிபொருள் அமைப்பு 283
எரிபொருள் அமைப்பு எரி உட்கனற் பொறிகளில் எரிபொருளைச் செலுத்தும் முழு இயக்கம் எரி பொருள் அமைப்பு (fuel system ) எனப்படும். மின் பொறி எரிபற்றுப் (spark ignition) பொறியில் எரி கலப்பிக்கு அல்லது அழுத்த எரி பற்றுப் (compression ignition) பொறியில் பொருள் எக்கிக்கு (fuel pump) தேவைப்படும் விதத் திலும் அழுத்தத்திலும் எரிபொருளைச் செலுத்து வதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். எரிபொருள் சேர்கலம் அல்லது தேக்கி (fuel tank). எரிபொருள் எக்கி (fuel pump), எரிபொருள் கடத்தும் குழாய்கள், காற்று எரிபொருள் வடிகட்டிகள் (filters) என்பன இவ்வமைப்பில் முக்கிய உறுப்புகள் ஆகும். எரிபொருள் அமைப்பு 283 பிளாஸ்டிக் போன்றவற்றால் செய்யப்பட்டிருக்கும். எரிபொருளை ஊற்றுவதற்கும் முழுமையாக வெளி யேற்றுவதற்கும் தகுந்த செருகுகள் (plugs) பொருத்தப்பட்டிருக்கும். எரிபொருள் எக்கி. சேர் கலத்திலிருந்து (collecting tank) எரிபொருளை மேலோங்கிச் செலுத் துவதற்கு எரிபொருள் எக்கிகள் தேவைப்படுகின்றன. கனற்சிக்குத் தேவைப்படும் வீதம், அளவீடு, . கொள் ளளவு, அழுத்தம், பொறியின் வேலைச்சுமை ஆகிய வற்றிற்கு ஏற்றவாறும், காற்றுத் தடை ஏற்படாத வாறும் எக்கிகள் செயல்படும். காண்க. எரிகலப்பி, எரிபொருள் உட்செலுத்தல். எரிபொருள் வடிகட்டி அடைப்பிதழ்கள் மூலம் மிதப்பு, தூசு, நீர்த்திவலை, நுரை போன்றவை எதுவு எரிகலப்பி வடிகட்டி முடுக்கம் குழாய் எக்கி சூடுவை குழாய் அமைப்பு தேக்கி காற்றொழுக்கு குழாய் எரிபொருள் தொடர் எரிபொருள் செலுத்தும் அமைப்பு எரிபொருள் தேக்கி. இக்கலம் பொதுவாகக் கனற் பொறியிலிருந்து சற்று விலகியே இருக்கும். தானி யங்கி ஊர்திகளின் பின்புறம் தாழ்வாக அமைக்கப் பட்டிருக்கும். இக்கலம் எஃகு தகடுகளால் பெட்டி போல் செய்யப்பட்டிருக்கும். துருப்பிடிக்காத வாறு வர்ணம் பூசப்பட்டிருக்கும். எடை குறை வாக இருக்கும் பொருட்டு அலுமினியம் மற்றும் மில்லாமல் தூய்மையான எரிபொருள் கனற்கலத்திற் குச் செலுத்தப்பட வேண்டும். இதற்குச் சேர் கலத்தி லிருந்து வெளிப்படும் எரிபொருள் இரண்டு மூன்று நிலைகளில் தகுந்த வடிகட்டிகளால் தூய்மைப்படுத்தப் படும். இவ்வடிகட்டிகள் பருமன் (coarse), நுண்ணிய (fine) துளைகளைப் பெற்றிருக்கும். இடைத்திரை கள், நுண்துளைகள் கொண்ட வலைகளால் ஆன