எலும்புக்கூழ்ப் பகுதி 339
கீழ்முனையோடு முன்கை எலும்புகள் கீல் மூட்டாகப் பொருந்தியுள்ளன, இதனால் முழங்கையை நீட்டவும் மடக்கவும் இயலும். முழங்கையெலும்பின் மேல் முனையும் ஆரை எலும்பின் உருளை போன்ற மேல் பாகமும் முளைமூட்டமைப்பில் உள்ளன. இந்த இரண்டு எலும்புகளும் ஒரு போக்காகக் கிடக்கும் போது உள்ளங்கை முன் அல்லது மேல் நோக்கியும், ஆரையெலும்பு முழங்கையெலும்பின் மேல் புரண்டு குறுக்காகக் கிடக்கும்போது உள்ளங்கை பின் அல்லது கீழ்நோக்கியும் இருக்கும். கையெலும்புகளனைத்தும் நன்கு அசையக்கூடியனவாக அமைந்து பொருள் களைப் பற்ற உதவுகின்றன. பெருவிரல் மற்ற விரல்களுக்கு முன்னே எதிராகக் கொண்டு வரத்தக்க அமைப்பில் உள்ளதால் கையினால் எதையும் வலி வாகப் பிடிக்க முடியும். காலெலும்புகள். தொடையெலும்பு உடலிலுள்ள மற்ற எலும்புகளைவிடப் பெரியது. முழங்காலுக்குக் கீழே சுணுக்காலில் கீழ்க்கால் வெளியெலும்பு மெலிய தாகவும். உள்ளெலும்பு பெரியதாகவும் உள்ளன. கணுக்காலில் 7, பாதத்தில் 5, விரல்களில் 14 என மொத்தம் இருபத்தாறு எலும்புகள் உள்ளன. முழங் காலில் தசை நாணிலுண்டான முழங்காற்சில் ஒன்று உள்ளது. பொதுவாகக் கால்கள் நடக்கவும் சுமையைத் தாங்கவும் உறுதியும் அடர்த்தியுமுடைய எலும்பு சுளைப் பெற்றுள்ளன. கையெலும்புகளைவிடப் பெரியனவாகவும் உள்ளன. காலெலும்புகளை முள்ளந்தண்டோடு சேர்க்க இடுப்பு வளையம் உள்ளது. இது தட்டையும் வளைவுமுடைய எலும்புகளாலானது. இடுப்பெலும் பில் உள்ள ஆழமான குழியில் தொடையெலும்பின் உருண்டையான முனை பொருந்தியுள்ளது. தோள் மூட்டைப் போல் பந்துக்கிண்ண மூட்டமைப்பி லிருந்தாலும் குழி ஆழமாக உள்ளதால் கைக்குள்ள வீச்சு காலுக்கு இருப்பதில்லை. இதனால் உடற் சுமையைத் தாங்கும்போது நழுவாமல் இருக்க உதவு கிறது. முழங்காலில் கணுக்காலைப் பின்னுக்கு மடக்கவும் நேராக நீட்டவும்தான் முடியும். காலை நீட்டியிருக்கும்போது கால் மூட்டில் சேரும் எலும்பு முனைகள் ஒன்றுக்கொன்று பூட்டுப் போலப் பின்னிப் பிணைந்துகொள்வதால் கால் உறுதியாக நிற்கிறது. காலடியெலும்புகள் கையெலும்புகளைப்போல எளிதாக அசையக் கூடியவையல்ல. கைப்பெரு விரலைப் போன்று கால்பெருவிரலை மற்ற விரல்களுக் கெதிரே கொண்டுவர இயலாது. ஆனால் குரங்கின் கால் பெருவிரல் கைப்பெருவிரல் அசைவதைப்போல அமைந்துள்ளது. எனவே குரங்கை நாற்கால் விலங்கு என்பதைவிட நாற்கை விலங்கு எனக் குறிப்பிடுவதே பொருத்தமாகும். அ.க. 6-22அ எலும்புக்கூழ்ப் பகுதி 339 மேற்கூறிய எலும்புகளனைத்தும் சவ்வுப்படலங் களையோ குருத்தெலும்புகளையோ அடிப்படை யாகக் கொண்டவை. வையன்றித் தசைநாணிலும் சில சிற்றெலும்புகள் உண்டாகும். அவற்றிற்கு எள்ளெலும்புகள் (sesanid) என்று பெயர். முழங் காலில் உள்ள சில்லே அவற்றைவிட மிகப்பெரியது கே.கே. அருணாசலம் எலும்புக்கூழ்ப் பகுதி யது. எலும்புத் திசுக்களின் ஆதாரப் பொருள்தான் எலும்புக் கூழ்ப் பகுதியாகும். இதில் இழைகள் பதிக்கப்பட்டு உள்ளன. இந்த எலும்புக்கூழ்ப் பகுதி கால்சியம் உப்புகளால் ஆனது. நன்கு முதிர்ந்த எலும்புக் கூழ்ப் பகுதியின் எடையில் ஐந்தில் ஒரு பகுதி நீரால் ஆனது. இதில் கரிமப் பொருள்களின் பங்கு 30-46 விழுக்காடாகும். தாது உப்பு 60-70 விழுக்காடாகும். முக்கிய கரிமப் பொருள்களில் 90-95 விழுக்காடாகும். நாரிழைகள் சேர்ந்த புரதம் ஒரு மியூக்கோபாவிசாக்கரைடுடன் வெள்ளை விழுக்காடும், புரதச் சத்து 5 விழுக்காடும் உள்ளன. இந்த கரிம எலும்புக் கூழ்ப் பகுதி கால்சியம் உப்பால் தாக்கப்படாமல் இருக்கும்போது அதை ஆஸ்டியாய்டு எலும்புக்கூழ்ப் பகுதி என்பர். இயல்பான எலும்பில் இந்த ஆஸ்டியாய்டு மிகக் குறைந்த அளவில் இருப் பதற்குக் காரணம் உடனே கால்சியம் உப்புப் பரவுவதேயாகும். ரிக்கட்ஸ் என்ற நோயில் ஆஸ்டி யாய்டு எலும்புக் கூழ்ப் பகுதி மிகவும் அதிக அளவில் காணப்படுகின்றது. எலும்புக் கூழ்ப் பகுதி. இது பார்ப்பதற்கு ஒரே உருவமைப்புடன் விளங்கினாலும், உண்மையில் இது இரு உருவமைப்புகளால் ஆனது. நன்கு மாவுச் சத்து ஏறிய துணிகளுக்குச் சமமாக இதைக் கூறலாம். இழைகளும், கடினமான பொருள்களும் நிறைந்த பகுதியே இது. இதன் ஒரு பகுதி கரிமப் பொருளால் கொண்டதாகும். ஆன இழைகளைக் பகுதி கனிமப் பொருள்களால் ஆனது. மற்றொரு கரிமப் பொருள்கள். பெரும்பான்மையான கரிமப் பொருள்கள் வெள்ளை நார்களால் ஆனவை. இவை யல்பான வகையைச் சார்ந்தவையாகும். இந்த இழைகள் மிகவும் நுட்பமாகவும், ஒன்றுடன் ஒன்று இணைந்து அடுக்கப்பட்டும் அமைந்துள்ளன. இவ் விழை அடுக்குகள் 3-5 மைக்ரான் அடர்த்தியுள்ள அடுக்குகளாகக் காணப்படுகின்றன. இவ்வடுக்குகள் ஆஸ்டியோ கொல்லாஜன் (osteo collagen) இழை கள் எனப்படுகின்றன. இவ்விழைகள் தனிப்பட்ட ஒரு வித சிமெண்ட் பொருளால் இணைக்கப்பட் டுள்ளன