உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 எலெக்ட்ரான்‌

348 எலெக்ட்ரான் வகை காய்க்கும். இது சொறி நோய் தாக்காத யாகும். நிறைந்த சாறும், குறைந்த விதையும் பழங் களில் காணப்படும். எலுமிச்சைச் சாற்றில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இதன் சாற்றில் சர்க்கரை யைக் கலந்து பானமாக அருந்தலாம். எலுமிச்சையில் சிட்ரால், லிமோனின், லினலூல், வினைல் அசெட்டேட், டெர்பினியால், சிமின் என்னும் எளிதில் ஆவியாகக் கூடிய எண்ணெய்ப் பொருள்கள் உள்ளன. இலைகளில் குமாரின் ஐசோ பிம்பினலின், பெர்காப்டன், சிட்ரோப்டன் என்னும் பொருள்களும் உள்ளன. எலுமிச்சை ஊறுகாய், தொக்கு, நசுக்குச்சாறு (squash), ஜெல்லி, மார்மலேட், பார்லி நீர், எலு மிச்சைச் சாறு நீர் (lime juice cordial) என்பன இதன் பிற செய்பொருள்களாகும். எலுமிச்சம் பழத்திலுள்ள மிகுதியான செம்புச்சத்து பல நோய் களைத் தீர்க்கும் வல்லமை கொண்டது. நாட்டு மருத்துவத்தின்படி இப்பழம் பித்த மயக்கம், வாந்தி, தாகம், யானைக்கால், கண்ணோய், காதுவலி முதலிய வற்றைப் போக்கும். பசியைத் தூண்டும். நகச் சுற்றுக்கு நன்மைதரும். செரிக்கச் செய்யும், நீர் உணவில் இதன் இலையைச் சேர்த்து உண்டால் குளிர்ச்சி தரும்.

எலுமிச்சைச் சாற்றிலிருந்து தலைவலி, நீர்க் கோவை, மலச்சிக்கல் கல்லீரல் நோய். களை இருமல், கடற்பயணிகளுக்கு வரும் மயக்கம், மஞ்சள் காமாலை, கணையால் ஏற்படும் நீர்ச்சுருக்கு, பல் நோய், சொறி, கரப்பான், வாதநோய்கள், மூட்டு வலி, கோடைக்கால வயிற்றுவலி, சேற்றுப்புண் ஆகிய வற்றைத் தடுக்கும் மருந்துகளைத் தயாரிக்கலாம். வைட்டமின் C குறைவால் ஏற்படும் ஸ்கர்வி நோய்க்கு மருந்தாகவும், அந்நோய் வராமல் தடுக்கும் உணவாகவும் எலுமிச்சை பயன்படுசிறது. எலுமிச்சம் பழத்தோல் மாடுகளுக்குத் தீவனமாகிறது. உலர்த்திய தோலால் பாத்திரங்களைத் தூய்மை செய்யலாம். பெரிய எலு பிச்சை (சிட்ரஸ் லிமன்). இதன் காய் நீள்சதுரமாக முனையில் காம்பு போன்ற புடைப்பு டன் இருக்கும். எலுமிச்சையைப் போலவே இதன் கனியும் மிகுதியாகப் பயன்படும். இதன் ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்தைப் போக்கும். தோல், பசியை உண்டாக்கும். சொறி கரப்பானுக்குச் சிறந்தது. காய்ச்சல், அழற்சி, கீல்வாதம், சீதபேதி, வயிற்றுப் போக்கு முதலியவற்றிற்கும் இது மருந்தாகப் பயன் படுகிறது. பயிரிடும் முறை. வடிகால் வசதி கொண்ட, மூன்று மீட்டர் ஆழம் வரை உள்ள மண் இப்பயிர் செய்ய ஏற்றது. களர் மற்றும் உவர் நிலங்கள் ஏற்றவையல்ல. எழுச்சியும், மிகுதியான காய்ப்புத் திறனும் கொண்ட மரங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றிலுள்ள பழங்களை அறுவடை செய்து விதை எடுத்து நாற்றுகள் தயார் செய்யவேண்டும். ஜுன் 5மீ. இடைவெளியில் 75 செ.மீ.நீள, அகல, ஆழமுள்ள குழிகளைத் தோண்டி மட்கிய தொழு உரம், மணல், செம்மண் இட்டு நாற்றுகளை முதல் டிசம்பர் மாதத்திற்குள் நடவேண்டும். நன்கு காய்க்கும் ஒரு மரத்திற்கு 50 கிலோ தொழுஉரம், 1350 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்ஃ பேட், 500 கிராம் பொட்டாசியம் குளோரைடு போன்ற உரங்களை இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். செடிகள் வளர்ந்த பின்னர் துத்தநாகம், இரும்பு, மக்னீசியம் ஆகிய நுண் ஊட்டம் கலந்த உரக் கலவையை மூன்று மாதத்திற்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். மண் அமைப்பிற்குத் தக்கவாறு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். எலுமிச்சைக்குப் பின் செய்நேர்த்தி தேவையாகும். களைகளை அவ்வப் போது வெட்டி நீக்கவேண்டும். செடி நட்டு மூன்று பின்னர் ஆண்டுகளுக்குப் எலுமிச்சை காய்க்கத் தொடங்கும். ஆண்டு முழுதும் காய்கள் காணப்படும். இருப்பினும் ஆண்டிற்கு இருமுறை (ஜனவரி. பிப்ரவரி : ஜூலை, ஆகஸ்ட்) அறுவடைப் பருவம் வரும். ஆண்டு ஒன்றிற்குச் சராசரியாக ஒரு மரத்தி லிருந்து 1500 - 3000 பழங்கள் கிடைக்கின்றன. எலுமிச்சை நோய்கள், எலுமிச்சை மரங்களைப் பச்சைப் புழுக்கள் தண்டு துளைப்பான்கள் (irunk borers) அசுவுணி, தத்தும் அசுவுணி, இலைத்துளைப் பான்கள், செதில் பூச்சி, மாவுப்பூச்சி, வெள்ளை ஈக்கள் ஆகிய பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றைப் போதிய பூச்சி மருந்துகள் தெளித்துத் தடுக்கலாம். எலுமிச்சை மரங்களைப் பூஞ்சைகள். பாக்டீரியா, வைரஸ் போன்றவை நோய்களை உருவாக்கி அழிக் கின்றன. இவற்றுள் திடீர் நலிவு நோய் (tristenga disease), சொறிநோய், திட்டுநோய் (canker), பிசின் வடிதல் (gummosis), நுனிக்கருகல் நோய் முதலியன குறிப்பிடத்தக்கவை. -உ. அஞ்சனம் அழகியபிள்ளை எலெக்ட்ரான் இது அண்டத்திலுள்ள அனைத்துப் பருப்பொருள் களிலும் (matter) அடங்கியுள்ள அடிப்படைத் துகளா கும். இதுவே முதன்முதலாகக் கண்டறியப்பட்ட அடிப்படைத் துகள். 1895 இல் ஜெ.ஜெ. தாம்சனால் கண்டறியப்பட்ட எதிர்முனைக் கதிர்கள் இத்துகள் களால் ஆனவையே என மெய்ப்பிக்கப்பட்டது. எலெக்ட்ரான் இலேசான பொருண்மையும் சிறிய அளவு மின்னூட்டமும் கொண்டு பேரளவு உயர்