உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 எலெக்ட்ரான்‌ தற்சுழற்சி

370 எலெக்ட்ரான் தற்சுழற்சி S.G Su G G Ca H H Ca A S.G படம். 5. டெட்ரோடில் கட்டுப்படுத்தும் கிரிடுக்குக் குறைந்த எதிர்மின்னழுத்தமும், திரை கிரிடுக்குச்சற்று உயர்வான நேர்மின்னழுத்தமும் கொடுக்கப்படுவதால் எலெக்ட்ரான்கள் நேர்மின்வாயை நோக்கி முடுக்கப் படுகின்றன. பென்டோடு. டெட்ரோடில் தோன்றும் இரண் டாம் நிலை எலெக்ட்ரான்களைத் தவிர்க்க நேர் மின்வாய்க்கும் திரை கிரிடுக்கும் இடையில் மேலும் ஒரு கிரிடு தடுக்கும் கிரிடு (suppressor grid) படம். 6 இல் காட்டியுள்ளபடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரான் குழாயில் ஐந்து மின்வாய் இருப்பதால் இது பென்டோடு எனப்படுகிறது. இதில் கட்டுப் படுத்தும் கிரிடுக்கு எதிர்மின்னழுத்தமும், திரை கிரிடுக்கு நேர்மின்னழுத்தமும் கொடுக்கப்படும். தடுக்கும் கிரிடுக்கு எதிர்மின்வாய்க்கு அளிக்கும் அதே எதிர்மின்னழுத்தமும் கொடுக்கப்படுகின்றது. திரை கிரிடுக்கு நேர்மின்னழுத்தம் கொடுப்பதால் எதிர்மின்வாயினால் உமிழப்படும் எலெக்ட்ரான்கள் நேர்மின் வாயை நோக்கி முடுக்கப்படுகின்றன. ஆனால் திரைகிரிடுக்கு அடுத்து தடுக்கும் கிரிடு இருப்பதால் இந்த எலெக்ட்ரான்களின் வேகம் குறைக்கப்படுகின்றது. இத்தடுக்கும் கிரிடு நேர்மின் வாயினால் உமிழப்படும் இரண்டாம் நிலை எலெக்ட் ரான்களைத் தடுத்து மீண்டும் நேர்மின்வாயை நோக்கி முடுக்குகிறது. எனவே டெட்ரோடில் ஏற் பட்ட குறை தவிர்க்கப்படுகிறது. இத்தகைய எலெக்ட்ரான் குழாய்கள் ரேடியோ அலைகளைத் தோற்றுவிக்கவும், வலிமை குன்றிய ரேடியோ அதிர்வெண்களைப் பெருக்கவும், டையோடு படம் 6. மாறுதிசை மின்டோட்டத்தினை மாறாத்திசை மின்னோட்டமாக மாற்றவும் பயன்படுகின்றன. எலெக்ட்ரான் தற்சுழற்சி ஜா.சுதாகர் புவி சூரியனைச் சுற்றி வருவதுடன், ஓர் அச்சில் தனக்குத்தானே சுழன்று கொண்டிருப்பதுபோல் அணுவிலுள்ள எலெக்ட்ரான் அணுக்கருவைச் சுற்றி ஒரு பாதையில் சுற்றி வருவதுடன், அதற்கே உரிய ஓர் அச்சில் தனக்குத்தானே சுழன்று கொண்டும் இருக்கிறது. இது எலெக்ட்ரான் தற்சுழற்சி எனப்படு கிறது. கிளர்வூட்டப்பட்ட நிலையில் ஒரு தனிமத்தின் அணுக்கள் நிறமாலை வரிகளைத் தோற்றுவிக்கின்றன. தோற்றுவிக்கப்பட்ட நிறமாலை வரிகள் அந்தத் தனி மத்திற்கே உரிய தனித்தன்மை உடையன. நிறமாலை வரிகளின் தோற்றத்தை அணுக்களில் உள்ள எலெக்ட் ரான் நிலை மற்றும் இயக்கத்தைக் கொண்டு கொள்கை அளவில் விளக்க முடிந்தது. நிறமாலை வரிகளின் நுண்ணமைப்பு (fine structure) முரணிய சீமன் விளைவு (anomalous zeeman effect) இரட்டை வரி நிறமாலை அமைப்புகள் கதிர் நிறமாலைகளின் சில கோட்பாடுகள் போன்ற சிக்கலான நிறமாலை நிகழ்வுகளை விளக்குவதற்காக 1925 ஆம் ஆண்டில் ஊலன்பெக் மற்றும் கவுட்ஸ்மிட் என்போர் எலெக்ட் ரான் தற்சுழற்சி என்னும் கருத்தை வெளியிட்டனர்.