410 எறும்புண்ணி
410 எறும்புண்ணி முன்கால்களின் முதல் விரல் சிறியது; மற்ற விரல் களை விடச் சற்று மேல்புறமாக அமைந்துள்ளது. இரண்டாம் மூன்றாம் விரல்கள் வலுவானவை. அவை கூர்நகங்களைப் பெற்றுள்ளன. நான்காம் விரலின் அடிப்பகுதியில் தோல்தடிப்பு ஒன்று காணப்படுகிறது. சிறியதாகையால் ஐந்தாம் விரல் மிகவும் வெளியே தரிவதில்லை. பின்கால்களிலும் விரல்கள் உள்ளன. பெண் விலங்கிற்கு இரண்டு பால் காம்புகள் உள்ளன. பெரெறும்புண்ணி தன் களால் கறையான், அது ஐந்து வலுவான முன்கால் எறும்புப்புற்றை உடைத்து நீண்ட முகவாயைப் புற்றுக்குள் நுழைக்கும். பசைத் தன்மையுடைய இதன் நாக்கு 60 செ.மீ. நீளமுள்ளது. கறையான்களு நம் எறும்புகளும் நாவில் ஒட்டிக்கொள்கின்றன. மிகப்பெரிய உமிழ் நீர்ச் சுரப்பிகள் நாக்கின் அடிப்பகுதியில் அமைந் துள்ளன. வை மார்பெலும்பு வரை நீண்டுள்ளன. நாக்கில் ஒட்டிக்கொள்ளும் கறையான்களும் எறும்பு களும் உமிழ் நீருடன் விழுங்கப்பட்டு இரைப்பைக்குள் செலுத்தப்படுகின்றன. அவை இரப்பையின் தசைப் பற்றுள்ள கடினமான உட்சுவரால் நசுக்கப்பட்டு அரைக்கப்படுகின்றன. இரைப்பையில் காணப்படும் மணல், சிறுகற்கள் ஆகியவை உணவை நன்கு அரைப் பதற்கு உதவியாக உள்ளன. பேரெறும்புண்ணி ஒரு நாளைக்கு ஏறக்குறைய 30, 000 கறையான்களையும் எறும்புகளையும் பிடித்துத் தின்னும். கறையான்கள் எறும்புகளைத் தவிரப் புழுக்கள், பூச்சிகளின் இள வுயிரிகள், பழங்கள் ஆகியவற்றையும் உண்ணும். இலைகளில் ஒட்டியுள்ள மழைநீரையும் பனித்துளியை யும் நாக்கால் நக்கி உட்கொள்ளும். தரையில் பள்ளம் தோண்டியோ மரத்தின் அடிப்பகுதியிலோ தலையை முன்கால்களுக்கிடையில் இடுக்கிக் கொண்டு வாலைச் சுருட்டியவாறு படுத்துறங்கும். மெல்லிய ஒலி ஏற் பட்டாலும் விழித்துக் கொள்ளும். விலங்குக் காட்சி யகங்களில் வளர்க்கப்படும்போது இவை இருபத்தைந்து ஆண்டுகள் வரை வாழ்கின்றன. இறைச்சி, முட்டை, பால், பழங்கள் ஆகியவற்றை உண்ணும். வசந்த காலத்திலும் குளிர் காலத்திலும் இனப்பெருக்கம் செய்யும், கருவளர்காலம் ஆறு மாதங்கள். ஓர் ஈற்றில் ஒரு குட்டிதான் பிறக்கிறது. பெண் விலங்கு நின்றபடிக் குட்டியை ஈனும். பிறக்கும்போதே குட்டி 1700 கிராம் எடையிருக்கும். பிறந்து சில காலம் வரை தாயின் முதுகின்மேல் அமர்ந்தவாறு இருக்கும். தாயைப் போலவே குட்டியின் முதுகிலும் வெள்ளி நிறப்பட்டை இருக்கும். இரண்டு வயதில் குட்டி முழு வளர்ச்சியடையும். பின்பு தாயின் உதவியின்றித் தனித்து வாழும். டாமண்டுவா அல்லது கழுத்துப்பட்டி எறும்புண்ணி. பேரெறும்புண்ணியைப் போலவே இது தரையிலும் மரத்திலும் வாழ்கிறது. காட்டு ஓரங்களிலும் புல் வெளிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. உடல் நீளம் 50-60 செ.மீ. வாலின் நீளம் 50-55 செ.மீ. எடை 3-5 கி.கி. உடல்நிறம் வெளிர் மஞ்சளிலிருந்து பழுப்புநிறம் வரை வேறுபடுகிறது. உடல் புள்ளி களற்றோ செம்பழுப்பு நிறப்புள்ளிகளுடனோ காணப் படுகிறது. உடலில் காணப்படும், தடித்த குட்டையான மயிர்கள் நெளிநெளியாக உள்ளன. வாலில் செதில்கள் கண்களும் உள்ளன. காதுகள் சற்றே பெரியவை. வாயும் சிறியவை. முகவாய் குட்டையானது. முன் கால்களும் பின்கால்களும் வலிவானவை. முன்காலின் மூன்றாம் விரல் மற்ற விரல்களை விட நீளமானது. இதில் 5 செ.மீ. நீளமுள்ள கூர் நகம் உள்ளது. டாமண்டுவா பெண் விலங்கிற்கு இரண்டு பால் காம்புகள் உள்ளன. இதன் நடை ஒரு நொண்டி நடப்பதைப் போன்று பார்ப்பதற்கு விநோதமாக இருக்கும். துன்புறுத்தப் பட்டால் பின்கால்களின் உதவியுடன் தரையில் அமர்ந்து முன்கால்களை அகல விரித்துக் கொண்டு எதிரியைக் கூர்நகங்களால் இறுக்கிப்பிடித்து நெரிக்கும். இடையூறு அதிகமானால் மல்லாந்து படுத்துக் கொண்டு தற்காப்புக்காகக் கால்களையும் பயன்படுத்துகிறது. அப்போது ஒரு வகையான துர் நாற்றத்தை வெளிப்படுத்துகிறது. வாலை ஊன்றிக் கொண்டு மெதுவாக மரக்கிளைகளில் ஏறுகிறது. மரங்களிலுள்ள கறையான் புற்றுகளைச் சிதைத்து நாக்கால் துழாவி எறும்புகளையும் கறையான் களையும் பிடித்துத் தின்னும். தாய் உணவுண்ணும் போது குட்டியை மரக்கிளைகளில் விட்டுவிடுகிறது. குட்டிகள் வெளிர் மஞ்சள் அல்லது கரும்பழுப்பு நிற மானவை. டாமண்டுவாவை விலங்குக் காட்சிய கங்களில் வளர்ப்பது கடினம். ஆனால் அதற்குக்