உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 எஃகு வலிவூட்டிகளின்‌ வடிவமைப்பு

20 எஃகு வலிவூட்டிகளின் வடிவமைப்பு குறுக்குவெட்டுப் பரப்பிலிருந்து வளைவுந்த மறுபரவல் கம்பியின் வலிமை -30" -15% 0% 15% 30% 250 215.10 260 மி.மீ 300 மி.மீ 300 மி.மீ 300 மி.மீ. 415 125 மி.மீ 155 மி.மீ 130 மி.மீ 210 மி.மீ 235 மி.மீ. 500 105 மி.மீ 130 மி.மீ 150 மி.மீ 175 மி.மீ 195 மி.மீ. றுக்கும் பயன்படுத்தப்படும் வலிவூட்டிகளிலிருந்து 15 மி.மீக்குக் குறையாமலும் அக்கம்பியின் விட்ட அளவுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். கற்காரைக் கட்டுறுப்புகள் தீங்கு விளைவிக்கும் கரிமப் பொருள்கள் கலந்துள்ள மண்ணோடு ஒட்டியிருக்கு மானால் அல்லது கேடு ஏற்படுத்தும் அமிலம், புகை, உப்புக்காற்று, கந்தகப்புகை முதலியவற்றால் தாக்கப் படுமானால் மேலே குறிப்பிட்டுள்ள கற்காரை ஓரத் திண்ணத்திலும் 15 மி.மீ - 50 மி.மீ. வரை கூடு தலாக இருக்கவேண்டும். கடல்நீரில் முற்றிலும் மூழ்கியிருக்கும் கற்காரைக் கட்டுறுப்புக்களுக்கு மேலே குறிப்பிட்ட கற்காரை ஓரத்திண்ணத்திலும் 40 மி.மீ. கூடுதலாக ஓரத் திண்ணம் அமைக்க வேண்டும். கடல் அலைகளாலும், ஓதங்களாலும் விட்டுவிட்டு நனைக்கப்படும் கட்டுறுப்பு களுக்கு மேலே குறிப்பிட்ட ஓரத்திண்ணத்திலும் 50மி.மீ. கூடுதலாக ஓரத்திண்ணம் அமைத்திட வேண்டும். கலவை M 25 மற்றும் அதற்கும் மேல்வலிமை கொண்ட கற்காரைக் கலவைகளுக்கு மேலே குறிப் பிட்ட கூடுதல் ஓரத்திண்ணம் பாதியளவாகக் குறைக்கப்படலாம். எந்த ஒரு கற்காரைக் கட்டுறுப்பிலும் ஒட்டு மொத்தக் கற்காரை ஓரத்திண்ணம் 75மி. மீக்கு மேலிருக்கக்கூடாது. கற்காரைக் கட்டமைப்புகளுக்கு வேண்டிய வலிவூட்டிகள் அளவு இழுவிசை வலிவூட்டிகள். விட்டங்களில் பயன் படுத்தவேண்டிய வலிவூட்டியின் சிறும பரப்பு, 0.85 bd/fy க்குக் குறைவாக இருக்கக் கூடாது. இவ்வாறே வலிவூட்டியின் பெரும் அளவு 0. 04 க்கும் கூடுதலாக இருக்கக் கூடாது. அமுக்க விசை வலிவூட்டிகள். அமுக்குவிசை வலி வூட்டியின் பெரும அளவு பரப்பு 0.04 bD க்கும் கூடுதலாக இருக்கக்கூடாது. அமுக்க வலிவூட்டிகள் சிறப்பாகப் பயன்பட இவற்றுடன் பிடிப்புக் கம்பி களையும் அமைக்க வேண்டும். பக்கப்பகுதி வலிவூட்டிகள். ஒரு விட்டத்தின் அகடு (web) 750 மி.மீக்கு மேலிருந்தால் அந்த அகட்டின் பக்கப்பகுதிகளில் குறுக்குவெட்டுப் பரப்பில் 0.1%க்கு குறையாமல் வலிவூட்டிகளை அமைத்திடவேண்டும். வ்வாறு அமைத்திடும்போது இரு கம்பிகளுக் கிடையே உள்ள உயர டைவெளி 300 மி.மீ. அல்லது அவ்விட்டத்தின் அகலம் இவற்றில் எது குறைவோ அதற்கு மிகாமல் இருக்க வேண்டும். வலி துணிப்பு விசை மற்றும் முறுக்குவிசைக்கான குறுக்கு வலிவூட்டிகள். விட்டங்களில் அமைத்துள்ள குறுக்கு வலிவூட்டிகள் இழுவிசை மற்றும் அமுக்கம் ஆகிய வற்றைத் தாங்க ஓரங்களில் வைத்துள்ள வூட்டிகளைச் சுற்றி எடுத்துச் செல்லவேண்டும். T வடிவ மற்றும் வடிவ விட்டங்களில் குறுக்கு வலி வூட்டிகள்,பலகங்களின் வெளி ஓரங்களில் அமைந் துள்ள நெடுக்கை வலிவூட்டிகளைச் சுற்றிச்செல்லு மாறு அமைத்திட வேண்டும். துணிப்பு வலிவூட்டிகள். வலிவூட்டியின் சிறும அளவு: துணிப்பு விசையினைத் தாங்கிட அமைக்கும் பிடிப்புக் கம்பிகளின் அளவு Asv 0.4b sv/fy தரப்படி இருக்க வேண்டும். Asv = உயரப்பிடிப்புக் கம்பிக் கால்களின் குறுக்குப்பரப்பளவு; Sv பிடிப்புக் ஒன்றிற்கொன்றிற்கு கம்பிகள் உயரப் உள்ள வலி ை டைவெளி; b = விட்டத்தின் அகலம்; fy வூட்டியின் தாங்குதிறன் தகைவு. எனினும் மேற்படி விட்டம் (lintel) போன்ற சிறு கட்டுறுப்புகளுக்கும், மேலும் துணிப்புத் தகைவு துணிப்பு வலிமையில் பாதிக்கும் குறைவாக இருக்கின்ற கட்டுறுப்புகளுக்கும் மேலே குறிப்பிட்ட சிறும அளவு பொருந்தாது. துணிப்பு விசையினைத் தாங்கப் பயன்படும் பிடிப்புக் கம்பிகளுக்கிடையே உள்ள பெரும் டைவெளி 0.75d க்கு மிகாமலும் 450 மி.மீக்கு மிகாமலும் அமையவேண்டும். முறுக்க வலிவூட்டிகளின் பரவல். கற்காரைக் கட்டுறுப்புகளை முறுக்குத் திருப்புமையைத் தாங்கிட வடிவமைக்கும்போது, முறுக்க வலிவூட்டிகளைப் பின்வருமாறு அமைத்திட வேண்டும்: முறுக்கத்திற் கான குறுக்கு வலிவூட்டிகளைச்(transverse reinforce- ment) செவ்வக வடிவில் கட்டுறுப்பின் அச்சக்குச் செங்குத்தான திசையில் பொருத்தவேண்டும். இத் தகைய குறுக்குக் கம்பிகளுக்கிடையே உள்ள இடைவெளித்தூரம் X1, (x,+y) அல்லது 300 மி.மீ. 4