454 ஏவூர்தி உந்து எரிபொருள்
454 ஏவூர்தி உந்து எரிபொருள் தீப்பற்றும் கலவை எனலாம். எ.கா. ஹைட்ரசீனு டன் 90% ஹைட்ரஜன் பெர்ஆக்சைடு, ஹைட்ரசீனு டன் செம்புகை நைட்ரிக் அமிலம், அனிலினுடன் செம்புகை நைட்ரிக் அமிலம், சீரற்ற டைமீதைல் ஹைடிரசீனுடன் நைட்ரஜன். உடன் தீப்பற்றாக் கலவை. கேசோலினுடன் நீர்ம ஆக்சிஜனோ, அம்மோனியாவுடன் நீர்ம ஆக்சி ஜனோ கலந்தால் அவை உடனே தீப்பற்றிக் கொள் வதில்லை. இக்கலவையை எரியூட்ட கனல் நுட்ப எரியூட்டிகளோ மின்பொறிக்கருவிகளோ, முன்ன தாகவே எரியூட்டப்பட்ட எரிபொருட் கலவையோ வினை ஊக்கியோ பயன்படுத்தப்படும். திண்ம-நீர் ம உந்து எரிப்பொருள்களின் ஒப்பீடு. திண்ம எரிபொருள்களின் ஒப்புவிசை எண் நீர்ம எரி பொருள்களின் எண்ணைவிடக் குறைவு. திண்ம எரிபொருள் தயாரிப்பில் பல்வேறு நிலை கள் இருப்பதால், நீர்ம எரிபொருள் தயாரிப்பை விடச் சற்றுத் தீமையானது. திண்ம எரிபொருள் உள்ள ஏவூர்திப் பொறியை இயக்கியபின், கட்டுப் படுத்த முடியாது. ஆனால் நீர்ம எரிபொருள்களின் அளவை ஒருவழித்திறப்பான்களால் (valves) கட்டுப் படுத்தி, ஏவூர்தியின் பயணத்தை ஒழுங்கு செய்ய இயலும். இத்தகைய சிறப்புகள் கொண்டிருந்தாலும் நீர்ம உந்து எரிபொருள்களுக்குக் குறைகளும் உள்ளன. பொதுவாக நீர்ம எரிபொருள்கள், திண்ம எரி பொருள்களைவிட அடர்த்திக் குறைந்தவை. நீர்ம எரிபொருள், ஆக்சிஜனேற்றிகள் ஏவூர்திக்குள்ளேயே தனித்தனி அறைக்குள் நிறைத்து வைக்கப்படுவதால். எரிபொருள் தொட்டிகள் ஒருவழித்திறப்பான்கள். சுழலிகள், எக்கி, செலுத்துக் குழாய்கள், உட் செலுத்திகள் போன்ற பல கருவிகள் ஏவூர்தியின் எடையைப் பெருக்கிப் பயனைக் குறைத்து விடுகின் றன. மேலும் நீர்ம எரிபொருள் கோவையின் அமைப்பு, திண்ம எரிபொருள் பொறியமைப்பை விடச் சிக்கலானது. நீர்ம எரிபொருள்களைக் கிடங்கில் பாதுகாப் பதும் கடினம். அவற்றின் ஆவி பொதுவாக நச்சுத் 3. 2 5 10 4 6 படம் 6. கலப்புநிலை ஏவூர்திப்பொறி 1. நீர்ம ஆக்சிஜனேற்றத் தொட்டி 2.எக்கி பாய்மக் கட்டுப்பாடு 4. கனற்சி துறை 5. திண்ம எரிபொருள் 6. கூம்புக்குழல்