83 ஐ-ஐ மடகாஸ்கர் தீவில் காணப்படும் ஐ-ஐ (Aye-Aye, Daubentonia madagascariensis) என்னும் விலங்கு, பாலூட்டி இனத்தைச் சேர்ந்த விநோதமான லெமூர் ஆகும். ஐ-ஐ க்கள், பாலுாட்டிகள் வகுப்பில். முதன்மைப் பாலுாட்டிகளின் வரிசையான பிரைமேட் டுகளில் டாபெண்ட்டோனிடே குடும்பத்தில் வகைப் படுத்தப்பட்டுள்ளன. 80-80 மடகாஸ்கரின் வட மேற்கு, கிழக்குப்பகுதிகளிலுள்ள காடுகளிலும், புதர்களிலும் தனியாகவோ. இணை மூங்கில் யுடனோ வாழ்கிறது. இரவில் நடமாடிப் பகலில் மரப்பொந்துகளிலும் மூங்கில் புதர்களிலும் தூங்கி ஓய்வெடுக்கிறது. உடையது. ஐ-ஐ, அணிலைப் போன்ற தோற்றமுடையது. வட்டமான பெரிய கண்களும் செங்குத்தான பெரிய காதுமடல்களும் உள்ளன. மெலிந்த உடலில் அடர்த்தியான மயிர்களுடைய வால் உள்ளது. உடல் கரும்பழுப்புநிற அல்லது கருநிற மயிரால் மூடப்பட்டுள்ளது. முகத்திலும் தொண்டைப் பகுதியிலும் உள்ள மயிர் வெளிர் மஞ்சள் நிறம் இவ்விலங்கின் விரல்கள் நீள கால் மானவை: குறிப்பாக முன்கால்களின் நடுவிரல்கள் மிக நீளமானவை. பெருவிரல்கள் ஏனைய விரல் களுக்கு எதிர்ப்புறமாக அமைந்துள்ளன. பெருவிரல் நகங்கள் தட்டையானவை: மற்ற விரல்களில் கூர்மை யான நகங்கள் காணப்படுகின்றன. பற்கள். கொறிக்கும் விலங்குகளின் பற்களைப் போலக் என்ற பல் வரிசை கூர்மையானவை; அமைப்புடையது. க 1-0-1-3 1-0-1-3 இருட்டிய பின்னர் இவ்விலங்குகள் ஓய்விடத்தை விட்டு வெளியில் வந்து உணவு தேடுகின்றன. கால்களின் நீண்ட நடுவிரல்கள் மயிரைக் கோதிக்கொள்வதற்கும் உணவைப் பற்றுவதற்கும் முன் பெரிதும் பயன்படுகின்றன. து இந்த விரலால் மரக்கிளைகளை மெதுவாகத் தட்டுகிறது; அவ்வாறு தட்டும்போது காதுகளைக் கிளையோடு ஒட்டிய வாறு வைத்துக்கொண்டு கிளையின் உட்புறம் பூச்சி அல்லது வண்டுகளின் இளவுயிரிகளால் உண்டாக்கப் பட்ட உட்புழைகள் உள்ளதை ஒலியின் மூலம் அறிகிறது. தட்டும்போது வேறுபட்ட ஒலியைக் கொண்டு பூச்சி இளவுயிரிகள் இருப்பதைக் கண்டு கொண்ட பின்பு அதன் கூர்மையான பற்களின் உதவியால் மரப்பட்டையைத் துளைத்து முன்காலின் நடுவிரலால் துழாவிப் பூச்சியைப் பிடித்து உண்ணும். வண்டுகளின் இளவுயிரிகளும் மூங்கில் கூழும் இதன் முக்கிய உணவு என்றாலும் மாங்காய், தேங்காய், ஈச்சம்பழம், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றையும் உண்கிறது. பற்களின் உதவியால் மூங்கில் கழிகளைக் கடித்து நடுவிலுள்ள சோற்றுத்திசுவை நடுவிரலால் சுரண்டித் தின்னும். நடுவிரல் நீர் அருந்துவதற்கும் பயன்படுகிறது. இடையூறு நேரும்போது இவ்விலங்கு கைகளை வீசி அறைந்து எதிரிகளைத் தாக்குகிறது. இரண்டு ஐ-ஐ ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும்போது உலோகத் தகடுகளை உராய்வது போன்று ஒலி யெழுப்பும். இதன் இனச்சேர்க்கை, கருவளர் காலம், குடும்ப வாழ்க்கையில் ஆண் விலங்கின் பங்கு போன்ற வை பற்றிய விவரங்கள் புலனாகவில்லை. ஐ-ஐ காய்ந்த இலைகள், குச்சிகளைக் கொண்டு மரப் பொந்து அல்லது கிளைகளுக்கிடையிலுள்ள கவையில் 60செ.மீ. அளவுள்ள ஒரு வட்டமான கூடு கட்டுகிறது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ஒரு குட்டியை மட்டும் ஈனுகிறது. பெண் மடகாஸ்கர் தீவில் ஐ-ஐ எண்ணிக்கை மிகக் குறைந்து இந்த இனமே அழிவுறும் நிலையிலுள்ளது. ஜே.ஜே. பெட்டர் என்பார் உலகவனவிலங்கு நிதியமைப்பு அனைத்துலகஇயற்கை- இயற்கைவளப் பாதுகாப்பு ஒன்றியம் ஆகிய அமைப்புகளின் துணை
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/501
Appearance