உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 ஐசோடோப்‌

486 ஐசோடோப் அமீன்களை, ஆல்டிஹைடு அல்லது அமிலத்துடன் வளையமாக்கலுக்கு குறுக்க வினை நிகழ்த்திப் பின் உட்படுத்தி ஐசோகுயினலின்களைப் பெறுவதாகும். பொமரான்ஸ் - பிரிட்ஸ் தொகுப்பு. இம்முறையில் முதலில்பெந்கால்டிஹடுடன் அமினோ அசெட்டாலை வினைபுரியச் செய்து ஆல்டிமைடு பெறப்படுகிறது. பின் ஆல்டிமைடை வீரியமிக்க அமிலத்தின் உதவி யால் வளையமாக்கலுக்குட்படுத்த ஐசோகுயினலின் கிடைக்கிறது. இந்த வளையமாக்கல் வினை ஓர் எலெக்ட்ரான் கவர் பதிலீட்டு (ele:trophilic substit- ution) வினையாகும். எனவேதான் எலெக்ட்ரான் வழங்கும் தொகுதிகளை அரோமாட்டிக் வளையத்தில் பெற்றுள்ள பென்சால்டிஹைடுகள் சிறப்பாக இவ் வினைகளை நிகழ்த்துகின்றன. இந்த முறையில் பென்சீன் வளையத்தில் பதிலிகள் உள்ள ஐசோகுயி னலின்களைப் பெற முடியும். பிஷ்லர் - நேபிரால்ஸ்கி தொகுப்பு. ஃபீனைல் எத்தில் மினை கார்பாக்சிலிக் அமிலம் அல்லது அமில குளோரைடுடன் வினைப்படுத்தினால் கிடைக்கும் அமைடை வளையமாக்கலுக்கு உட்படுத்த, ஒரு நீர் மூலக்கூறு நீங்கி 3, 4 - டை ஹைட்ரோ ஐசோகுயினலின் தோன்றுகிறது. இதனை ஹைட்ரஜன் நீக்கம் செய் வதால் ஐசோகுயினலின் பெறுதி கிடைக்கிறது. யான பிக்டேட் காம்ஸ் திருத்திய முறை. ஹைட்ரோஐசோ குயினலின்களைப் பெற்றுப்பின் அவற்றைஹைட்ரஜன் நீக்கம் செய்வதற்குப் பதிலாக, அம்முறையில் முழுமை அரோமாட்டிக் ஐசோகுயினலினை நேரடி யாகவே பெறமுடிகிறது. ஹைட்ராக்சிஃபீனைல் எத்தி லமினின் அமைடு வளையமாக்கலுக்கு உட்படுத்தப் படும்போது முதலில் நீர் நீக்கம் நிகழ்ந்து அடைபடா அமைடு தோன்றுவதாகவும், பின்பு இந்த அமைடு வளையமாக்கலுக்குட்பட்டு ஐசோகுனலினைத் தருவ தாகவும் கருதப்படுகிறது. தி. இளம்பூரணன் H, CCH, CH (OC,H,), CHO C, HgO வீரிய H,SO 100°C NH CH, NH, CH,COCI P₂O டெட்ரலீன் Pd-C 0000 CH, 190°C CH, ஐசோடோப் ல் 1 ஒரே அணு எண்ணும் வெவ்வேறு நிறை எண்களும் கொண்ட தனிம அணுக்கள் ஐசோடோப்புகள் எனப் படுகின்றன. அணு எண் என்பது அணுக்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையாகும். நிறை எண் என்பது அதிலுள்ள புரோட்டான்கள் நியூட்ரான்கள் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை. ஐசோடோப்புக் களின் அணுக்கருக்களில் புரோட்டான்களின் எண் ணிக்கை சமமாகவும், நியூட்ரான்களின் எண்ணிக்கை வேறுபட்டும் இருக்கும். அவற்றுக்கு 1918ஆம் ஆண்டில் ஃபிரடரிக் சாடி என்பார் ஐசோடோப்கள் எனப் பெயரிட்டார்: இதற்கு ஒரேயிடத்திலுள்ளவை எனப் பொருள், தனிமங்களின் காலமுறை அட்டவணையில் ஐசோடோப்கள் ஒரே நிலையில் அமைவதால் இந்தப் பெயரிடப்பட்டது. இவ்வாறு ஐசோடோப்கள் என்ற சொல்லானது ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் அணுக் களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இனங்கள் உள்ளன என்று குறிப்பிடுவதாகும். ஒரு குறிப்பிட்ட அணு எண்ணும் நிறை எண்ணும் உள்ள அணு இனம் நியூக்ளைடு என்ற சொல்லால் குறிப்பிடப்படும். இருப்பினும் அதைக் குறிப்பிட ஐசோடோப் என்ற சொல்லையும் பயன்படுத்துவதுண்டு. இதுவரை தெரிய வந்துள்ள வந்துள்ள தனிமங்கள் எல்லாவற்றுக்கும் குறைந்தது மூன்று நியூக்ளைடுகளாவது உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில நிலை யானவை. மற்றவை கதிரியக்கமுள்ளவை. நிலையாக உள்ள அல்லது நீண்ட அரை வாழ்நாள் உள்ள நியூக் ளைடுகளின் தன்மைகள் மட்டுமே விரிவாக ஆராயப் பட்டிருக்கின்றன. இவற்றின் இருப்பு அளவும், சார்பு