500 ஐசோபெரினாய்டு
500 ஐசோபெரினாய்டு டால் எண்ணெய்த் (tall oil) துணைப்பொருளைக் குறைந்த அழுத்தத்தில் பின்னக் காய்ச்சி வடிப்ப தாலும் ரோசின் அமிலங்களும், கொழுப்பு அமிலங் களும் பெறப்படுகின்றன. பூச்சியின ஹார்மோன்கள் போன்று அரிதாகக் கிடைக்ககூடிய பொருள்களை நிறச்சாரல்பிரிகை (chromatography) மூலம் பிரித் தெடுக்கலாம். வெப்பத்தால் பாதிப்படையும் பூக் களின் இதழ்களிலிருந்து பெறப்படும் நறுமணத் தைலங்கள் என்ஃபுளுரேஜ் (enf eurage) எனப்படும் சிக்கலான முறையில் பெறப்படுகின்றன. இதில் தூய் மையாக்கப்பட்ட கொழுப்புத் தூளுடன் பூக்களின் இதழ்கள் சேர்த்து நன்றாகக் கலக்கி வைக்கப்படும். இதனால் பூக்களிலுள்ள மணத்தைலங்கள் கொழு ப்பில் கரையும். பின்னர் ஆல்காஹாலுடன் சேர்ந்து கழுவும் போது அவை ஆல்கஹால் கரைந்து காய்ச்சி வடிப்பதால் தனித்தனியே பிரித்தெடுக்கப் படுகின்றன. காண்க, ஆவியாகும் தைலங்கள். மற்ற கரிமச் படுத்தப்படும் பயன் ஐசோபெரினாய்டுகளைக் கண்டறியும் ஆய்வில் சேர்மங்களைக் கண்ட றியப் முறைகள் பயன்படுகின்றன. இதன் மூலம் அணுக்களின் எண்ணிக்கை, எந்தெந்தத்தனிமங் கள் அணுக்களைப் பிணைத்துள்ளன. எத்தகைய பிணைத்துள்ளன. பிணைப்புகள் அணுக்களைப் மூலக்கூறின் முப்பரிமாண அமைப்பு கியவற்றை அறியலாம். இதற்குச் சேர்மங்களைத் தூய்மைப்படுத் தல், கண்டறிதல். அணுக்களைக் கண்டறிதல் ஆகியவற்றிற்கான செய்தல் வேண்டும். ஆ அமைப்பைக் ஆய்வுகளைச் மாறாக தூய்மையாக்கல். ஐசோபெரினாய்டுகளை அவற் றின் இயற்பியல் பண்புகளான உருகுநிலை, கொதி நிலை. கரைதிறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி பல்வேறு முறைகளில் தூய்மையாக்கலாம். இம்முறை களில் அவற்றின் வேதிப் பண்புகள் சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம். சான்றாக, காய்ச்சி வடித்தல் அல்லது பதங்கமாதல் ஆகிய முறைகளில் டெர்ப்பின்களைத் தூய்மையாக்கும்போது வெப்பத் தால் பாதிப்படையும் பொருள் பொருள் தூய்மையடைவ தற்குப் பதிலாகச் சிதைவடைகின்றன. இயற்பியல் பண்புகளை அடிப்படையாகக் கொண்ட தூய்மையாக்கும் முறைகளினால் ஒத்த இயற்பியல் பண்புகளையுடைய சேர்மங்கள் யடைவதில்லை. சில சமயங்களில் இத்தகைய கலவைகளை வேதி முறைப்படி புதிய கலவையாக மாற்றினால் அக்கலவை எளிதில் பிரிகையடைவதாக உள்ளன. இவ்வாறு பிரிகையடைந்த கூறுகளை அதன் மூலச் சேர்மங்களாக மாற்ற இயலும். பொதுவாகத் திண்மச் சேர்மங்களைப் படிகமாக்கல் முறையில் தூய்மைப்படுத்தலாம். எளிதில் ஆவியாகும் சேர்மங்கள் (திண்ம அல்லது நீர்ம) காய்ச்சி வடித்தலி னால் பிரித்தெடுக்கப்படுகின்றன. சிறிதளவே வேற்றுப் பொருள்கள் கலந்துள்ள எளிதில் ஆவியாகாத திண்ம சீராகப் பிரிகை நீர்மங்களை நிறச்சாரல் பிரிகை மூலம் பிரித்தெடுக்க லாம். சிறிதளவே வேற்றுப் பொருள் கலந்திருந்த போதும் வேதி கண்டறியும் முறைகளில் மிகவும் சிக்கலான பிரச்சினைகளை உண்டாக்கி விடும். எனவே சேர்மங்கள் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மிகத் தூய்மையான சேர்மங்களைப் பெற. தொடர்ச்சியான பிரித்தெடுக்கும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். பகுப்பாய்வு. ஐசோபெரினாய்டு தனிம ஆய்வுகளில் பெரும்பாலானவை எளியவை: ஏனெனில் இவை ஹைட்ரோகார்பன்களாக உள்ளன. அளவறி பகுப் பாய்வில், கார்பன்-ஹைட்ரஜன்களை அளவறியும் முறையை 19 ஆம் நூற்றாண்டிலேயே அறிவியலார் அறிந்திருந்தனர். இதில் இணைந்திருக்கும் மற்றொரு தனிமம் ஆக்சிஜன் ஆகும். இது பண்பறி பகுப்பாய்வு களில் இடையீடு உறுவதில்லையாயினும் இதை நேரடி ஆய்வு மூலம் கண்டறிவது கடினமாகும். அமைப்பை அறிதல். ஐசோபெரினாய்டுகளின் அமைப்பை அறிவதில் பல மோனோடெர்ப்பினாய்டுகளை சிக்கல்கள் உள்ளன. முதன் முதலில் கண்டுபிடித்தபோது அவற்றின் அமைப்புகளைக் கண்டறிய வேதிவினைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு முறைகளே பெரும்பாலும் பயன் படுத்தப்பட்டன. நவீன ஆய்வுமுறைகளில் பெரும்பா வானவை மூலக்கூறு அமைப்பிற்கும் இயற்பியல் பண்புகளுக்கும் உள்ள தொடர்பைச் சார்ந்து அமைந் துள்ளன. புறஊதா, கட்புலன், அகச்சிவப்புக் கதிர் வீச்சு ஆய்வுகள் மூலக்கூறில் அமைந்திருக்கும் ணுக்களையும், அவற்றின் அமைப்பையும் அறிய உதவுகின்றன. மேலும் எக்ஸ் கதிர் ஆய்வுகள், நிறை நிரலியல் நுட்பங்கள். ஒளிச் சுழற்சித் திறனறிதல் ஆகிய முறைகளும் இச்சேர்மங்களின் அமைப்பை நிறுவுதற்குத் துணையாக இருக்கின்றன. உள்ளன; மோனோடெர்ப்பீன். இவை எளிதில் ஆவியாகக் கூடிய, நீரை விட அடர்வு குறைவான எண்ணெய் ஆகும். இவற்றின் கொதிநிலை 150° - 185°C வரை யுள்ளது. சாதாரணமாக இவற்றைக் குறைந்த அழுத் தத்தில் பின்னக் காய்ச்சி வடித்தோ படிகப் பெறு தீயை மீளாக்கம் செய்தோ தூய்மையாக்கலாம். வளையமில்லா மோனோ டெர்ப்பீன் ஹைட்ரோ கார்பன்கள் குறைந்த எண்ணிக்கையில் ஆனால் இவற்றின் ஆக்சிஜனேற்றப் பெறுதிகள் இயற்கையில் விரவி உள்ளன; மேலும் குறிப்பிடத் தக்கவையாகவும் உள்ளன. இதன் ஆக்சிஜனேற்றப் பெறுதிகளில் சிட்ரநெல்லால் எனப்படும். டெர்ப்பீன் ஆல்கஹால், அதையொத்த ஆல்டிஹைடு (சிட்ரநெல் லால்), ஜெராணியால் ஆகியன குறிப்பிடத்தக்கவை. சிட்ரநெல்லாலின் இரு வகைகளும் சிட்ரநெல்லாத் தைலத்திலும், எலுமிச்சைப்புல் எண்ணெயிலும் ஜெரானியால் ஜெரானியம் எண்ணெயிலும் உள்ளன.