502 ஐசோபெரினாய்டு
502 ஐசோபெரினாய்டு X- CH3 H3 C OH .C. -OH H3 C CH3 H3c -டெர்ப்பீனியால் C -OH CH3 டெர்ப்பீன் தன்மை எளிதில் காற்றால் ஆக்சிஜனேற்றம் அடைந்து ரேசின் போன்ற மெல்லிய படலமாகும் தன்மை கரைப்பான் தன்மை இவற்றைப் பொறுத்தது. பிற டெர்ப்பீன்களை விட இதன் வேதி வினைகள் தெளிவாக ஆராயப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் கரிம வேதியியலில் அமைப்பு மாற்றங்களை அறியப் பயன்படுகின்றன. -பைனினுடன் அமிலங்களைச் சேர்த்துப் பல் வேறு சூழ்நிலைகளில் வினைப்படுத்தும் போது டெர்ப் பீனின்கள், -டெர்பீனியால், டெர்ப்பின், டெர்ப் பினோலின், போர்னியால் ஃபென்ஸைல் ஆல்கஹால் கேம்ஃபீன் ஹைட்ரோ கார்பன் போன்ற பொருள் கள் உண்டாகின்றன. செஸ்க்விடெர்ப்பீன். இவை மோனோ டெர்ப் பீன்களை விடக் குறைவாக ஆவியாகும் தன்மை யைப் பெற்றிருப்பதால் இயற்கை மூலங்களிலிருந்து நீராவியால் காய்ச்சி வடித்தோ பிரித்தெடுத்தலின் மூலமாகவோ இவற்றைப் பெறலாம். காற்றில்லாச் சூழ்நிலையில் பின்னக் காய்ச்சி வடித்தோ, நிறச் சாரல் பிரிகையாலோ இவற்றைத் தூய்மையாக்க லாம். செஸ்க்வி டெர்ப்பீன்கள் மோனோ டெர்ப்பீன் களைவிடச் சிக்கல்மிகுந்த அமைப்பைக்கொண்டவை. இவற்றில் ஆக்சிஜனேற்றப் பெறுதிகளும் உள்ளன. CH3 - ருவளைய செஸ்க்வி டெர்ப்பீன்களில் இருவகை யான ஐசோப்ரின் மூலக்கூறு அமைப்புகள் அமைந் திருக்கின்றன; அவை கெடாவின்,யூடாலின் என் பனவாகும்; இவற்றில் அமைந்திருக்கும் கார்பன் கட்டை, செஸ்க்வி டெர்ப்பீன்களைக் கந்தகம் அல்லது செலீனியத்துடன் சேர்த்து ஹைட்ரஜன் நீக்கம் செய்து அவற்றையொத்த நாஃப்தலினிக் ஹைட்ரோ கார்பன்களைப் பெறுவதால் அறியலாம். டை டெர்ப்பீன். ஃபைட்டால் என்னும் ஆக்சிஜ னேற்றம் பெற்ற வளையமில்லா டெர்ப்பீன் குளோ ரோஃபில் மூலக்கூறின் மூலமாக இருக்கின்றன. குளோரோஃபில்லுடன் காரக் கரைசலைச் சேர்த் தால் ஃபைட்டால் கிடைக்கிறது. வைட்டமின் Aஇல் உள்ளது போலவே ஐசோப்ரின் மூலக்கூறுகள் ஃபைட் டாலிலும் காணப்படுகின்றன. CH3CH CH, (CH,CHCHI,CH,), CHC,=CHCH CH CH CH, ஃபைட்டால் CH, அபீட்டிக் அமிலம் என்னும் ட்ரைகார்பாக்சிலிக் அமிலம் ரோசினிஸ் பெரும்பான்மையாக இருக்கிறது. பைன் குடும்ப மரங்களிலிருந்து கிடைக்கும் ஒலியோ ரெசின்களை மக்பென்ட்டைனைப் பிரித்தெடுத்தபின் எஞ்சியிருக்கும் ஆவியாகாத பகுதி ரோசின் எனப்படு கிறது. வார்னிஷ் மற்றும் மேற்பூச்சுகள் தயாரிப்பில் ரோசின் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. இதன் சோடியம் உப்புக் காகிதத் தொழிலிலும், செயற்கை ரப்பர் தயாரிப்பில் பால்மமாக்கியாகவும், மஞ்சள் கலவைச் சோப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது கரிம அமிலங்களிலேயே மிகவும் விலை குறைவானது ஆகும். ட்ரைடெர்ப்பீன். வளையமில் ட்ரைடெர்ப்பீன் களில் ஸ்குவாலின் சிலவகை ஷார்க் இன மீன்களின் ஈரல் எண்ணெயில் பெரும்பான்மையாக உள்ளது. மேலும் இது பிற மீன்களின் ஈரல் எண்ணெயிலும் . CH₂ CH₂ OH OH C(CH3)2 CH2 CH₂ CH, CH; CH, CH, போர்னியால் ஃபென்ஹைல் ஆல்கஹால் காம்ஃபீன்