526 ஒட்டு மீன்
526 ஒட்டு மீன் ஒட்டு மீன் 12-27 இணை வரை தாள் படலங்கள் (lamellae) உள் ளன. ஒவ்வோர் இணைத் தாள் படலமும் ஒரு முள்ளால் இணைக்கப்பட்டிருக்கும். அம்முள் முள் ளெலும்பிலிருந்து தோன்றியுள்ள ஒரு முள்ளுடன் அடியில் இணைந்திருக்கும். இந்த இணையான முள்கள் வலம், இடம் என்று இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு முள்ளும் கீழ்நோக்கி வளைந்து இரு வரிசைகளில் குறுக்காகத் தாள் லங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கும். பட இந்த மீன் கடலில் செல்லும் கலன்களைக் கூடத் தன் ஒட்டுறுப்பால் நிறுத்தும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. இம்மீனை, ஒட்டிக்கொண் டுள்ள பொருளிலிருந்து பிரித்தெடுப்பது சற்றுக் கடி னம். அதை முன் பக்கமாகச் சிறிதுநகர்த்தி எடுத்தால் தான் ஒட்டிய நிலையிலிருந்து விடுவிக்க முடியும். எனவே இவ்வாறு ஒட்டிக் கொள்ளும் தன்மையைக் கொண்ட இந்த மீனை, ஆஸ்திரேலியா அருகில் உள்ள பெரும் பவளத் திட்டுப் பகுதி வாழ் தொன் மக்கள் கடல் ஆமைகளைப் பிடிப்பதற்குப் பயன் படுத்துகின்றனர். அவர்கள் இம்மீனின் வால் பகுதிக்கு மேல் கயிற்றைக் கட்டிக் கண்களுக்குத் தெரியும் தொலைவில் சென்று கொண்டிருக்கும் ஆமைகளைப் பிடிப்பதற்காக இந்த மீனைக் கடலில் விடுவர். அது ஆமையின் வயிற்றுப் பகுதியில் தன் ஒட்டுறுப்பால் இறுக்கமாகப் பற்றிக் கொண்டவுடன் கயிற்றை இழுத்து ஆமைகளைப் பிடிப்பர். இவ்வாறே சுறா மீன்களைப் பிடிப்பதற்கும், பெரிய கடல் விலங்கு களைப் பிடிப்பதற்கும் இந்த மீனை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த மீனின் ஒட்டுறுப்புக்குரிய ஒட்டிக்கொள் ளும் திறன்,நீராற்றலால் இயக்கப்படும் பொறி நுட்பத்தின் மூலம் ஏற்படுகின்றது என்று போனல் என்பார் கண்டறிந்துள்ளார். இப்பொறி நுட்பத்திற் காக இவ்வொட்டுறுப்பில் பல சிறு வாய்க்கால்கள் உள்ளன. அவற்றில் ஒரு நீர்மம் ஓடிக்கொண் டிருக்கும்; அந்நீர்ம ஓட்டத்தைச் சீர் செய்யும் வகை யில் ஆங்காங்கே திறப்பிதழ்கள் (valves) இருக்கும். மேலும் இவ்வொட்டுறுப்பில் பேரிக்காய் போன்ற வடிவமைப்புடைய நகரும் தன்மையுடன் கூடிய எலும்பும், அவ்வுறுப்பின் பின்முனையில் ஒரு சிறிய அடைப்பானும், முன்முனையில் நகரும் தன்மை கொண்ட ஓர் எலும்பும் உள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து சீரான அசைவை உண்டாக்குகின்றன என்று ஆய்வுகளினால் கண்டறிந்துள்ளார். அவர் கருத்துப்படி தாள் படலங்களும், அவற்றுடன் இணைந்துள்ள திசுக்களும் உணர்விகளைக் (receptors) கொண்டுள்ளன. இவ்வுணர்விகள் நீரின் தன்மை யையும் எதிர் வரும் நீரோட்டத்தின் தன்மையையும் அறியப்பயன்படுகின்றன. நன்கு நீந்தும் திறமையற்ற இம்மீன்கள் கடலில் விரைவாக நீந்திச் செல்லும் சுறா, திமிங்கலம் போன்றவற்றின் அடிப்பகுதியில் வாய்ப்பகுதிக்குச் சற்றுப் பின் உள்ள ஒட்டுறுப்பினால் ஒட்டிக்கொள் ளும். இவ்வாறு ஓட்டிக் கொள்வதால் அந்த விருந் தோம்பிக்கும் (host) பிற விலங்குகளுக்கும் அம்மீன் ஒட்டியிருப்பது தெரிவதில்லை. எனவே இந்த ஒட்டு மீனுக்கு நல்ல பாதுகாப்புக்கிடைக்கிறது. தேவையான