ஒட்டைச்சிவிங்கி 537
பிட்டத்துக்குமிடையில் தசை வளர்ச்சி இல்லை. ஒக்காப்பிகளில் மட்டுமே விரலிடைச்சுரப்பிகள் காணப்படுகின்றன; தோலில் வேறு சுரப்பிகள் இல்லை. பெண் விலங்குகளில் 2-4 முலைக்காம்புகள் உள்ளன. 32 பற்கள், 0/30/1 3/3 3/3 என்ற வாய் பாடில் அமைந்துள்ளன. ஒக்காப்பிகளில் பித்தநீர்ப்பை இல்லை. எல்லாவற்றிற்கும் குடல்வால் உண்டு. இரண்டு உள்குடும்பங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பினம் உள்ளது. உலகில் வாழும் விலங்கினங்களில் ஓட்டைச்சிவிங்கிகளே மிக உயரமானவை. ஒட்டைச்சிவிங்கி 537 ஒக்காப்பி அல்லது காட்டு ஒட்டைச்சிவிங்கி ஒக்காப்பியா ஜான்ஸ்ட்டோனி (okapia johnstoni) ஒக்காப்பினே உள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ஒரு சிறப்பினம். உடல் நீளம் 2.10மீ, உயரம் 1.5-7 மீ.. எடை 250 கி.கி., கழுத்து ஓரளவு நீள மானது. முதுகு முன்னிருந்து பின்னோக்கி ஓரளவு சரிவாக இருக்கும். ஆண் ஒக்காப்பியில் இரண்டு கொம்புகள் உள்ளன. பெண் விலங்கிற்குக் கொம்புகள் இல்லை. கொம்புகளின் முனைகள் தோலால் மூடப் பட்டிருப்பதில்லை அல்லது அங்கு காணப்படும் சிறிய ஓட்டைச்சிவிங்கி