ஒண்முகிற்படலம் 549
யாகும். இவற்றையே கோள் ஒண்முகிற்படலம் என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஒண்முகிற் படலங்ளைத் தொலைநோக்கியால் பார்க்கும்போது, கோள்கள் விண்மீன்களைப்போல ஒளிப்புள்ளிகளாகத் தோன்றாமல் தனிப்பட்ட பரிமாணங்களில் சிறிய பசுமைநிறத் தட்டு போலத் தோன்றும். இதுபோன்ற தொரு தோற்றத்தை இவ்வகை ஒண்முகிற்படலங் களும் ஏற்படுத்துவதால், இவை கோள் ஒண்முகிற் படலங்கள் எனப்படுகின்றன. கோள் ஒண்முகிற் படலங்கள் வரையறுக்கக்கூடிய எல்லைகளைப் பெற்றிருக்கின்றன. பிற ஒண்முகிற்படலங்களுடன் ஒப்பிடும்போது இவை அளவில் மிகவும் சிறியன வாகும். ஆன அண்டத்திலேயே பல ஆயிரக்கணக்கான கோள் ஒண்முகிற்படலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. புவிக்கு மிக அண்மையில் உள்ள கோள் ஒண்முகிற்படலம் NGC 7293 ஆகும். து 85 ஒளி ஆண்டுத் தொலை வில் உள்ளது. தூய வளிமங்களால் இந்த ஒண்முகிற்படலத்தின் வளையவிட்டம் 33 ஒளியாண்டு ஆகும். இதன் வளிமக் கூடு விரிவடைந்து வருகின்றது என்றும், அதனால் வளையம் மேலும் மேலும் மெல்லியதாகி இறுதியில் மறைந்து போகலாம் என்றும் எண்ணப்படுகிறது. இதன் காரணமாக வளர்ச்சிப் படிகளின் இறுதி நிலையில் உள்ள விண் மீன் வெளித்தள்ளும் பொருள்களால் ஆனதொரு கூடாக இந்த ஒண்முகிற்படலங்கள் இருக்கலாம் என்று கருதுகின்றனர். கோள் ஒண்முகிற்படலங்கள் வட்டத் தகடாகவோ வளையமாகவோ காட்சியளிப் பதன் காரணம், அவற்றுள் புதையுண்டிருப்பதைப் போலத் தோன்றும் விண்மீன்களால் அவை ஒளிர்வதே யாகும். சைக்னஸ்வில் உள்ள வலை ஓண்முகிற்படலம் (network nebula), NGC 443 போன்றவை கதிர்வீச்சு ஒண்முகிற்படலங்கள் (radio nebulae) எனப்படுகின் றன. தளர்வுறு, மாறு ஒளிர் மற்றும் கோள் ஒண் முகிற்படலங்களின் ஒளிர்தலுக்கு அவற்றில் உள்ள விண்மீன்களே காரணம். ஆனால் கதிர்வீச்சு ஒண் முற்படலங்கள், சுற்றியுள்ள உடுக்கணங்களின் டை ஊடகத்துடன் (interstellar medium ) மோதல் களை ஏற்படுத்துவதால் ஒளிர்தலைப் பெறுகின்றன. தனால் வெப்ப இயக்கமற்ற கதிர்வீச்சு அதிர் வெண்ணில் கதிரியக்கம் (non-thermal frequency radiation) நடைபெறுகின்றது. radio இடபம் (taurus) விண்மீன்குழுவில் உள்ள நண்டு வடிவ ஒண்முகிற்படலம் ஒரு மீஒளிர்மீன் ஆகும். இது வலிமையான கதிர்வீச்சு அலை மூலமாக விளங்கு கின்றது. இது மின்னூட்டமுள்ள சிலவகை அடிப் படைத் துகள்கள் வலிமையான காந்தப்புலத்தில் முடுக்கப்பட்டிருப்பதால் கதிர்வீச்சு அலைகளை உமிழக்கூடியதாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஒண் முகிற்படலம் 549 இன்று வான் இயற்பியலில் முக்கியமானதோர் ஆய்வுக் கருவாக இது விளங்குகின்றது. ஏனெனில் இதன் வளர்சிதை மாற்றங்கள் விண்மீனின் பிறப்பு வெடிப்பு பற்றிய உண்மைகளைத் தெளிவுபடுத்தும் என்று நம்பப்படுகிறது. ஒண்முகிற்படல ஆய்வுகள். ஒளி உமிழ் ஒண்முகிற் படலங்கள் பெரும்பாலும் ஹைட்ரஜனின் Ha என்ற செந்நிற வரிகளை உமிழ்கின்றன. இதனால் செந் நிறஒளி உணர்திறன் மிக்க ஒளிப்படத் தட்டுகளைப் பயன்படுத்தி குறுகிய ஒளிப்பட்டையை ஏற்கின்ற ஒளி வடிப்பான்களைக் கொண்டு ஒண்முகிற் படலங் கள் ஒளிர்தலை அறிகின்றனர். இவற்றைக் கதிர் வீச்சுத் தொலை நோக்கிகள் மூலம் கண்டறியலாம். உள்ளன போன்ற ஒண்முகிற்படலங்களின் வெப்பக் கதிரியக்கங்கள் பெரும்பாலும் உயர் அதிர்வெண்ணில் மட்டுமே (எ.கா. ஓரியன், இலாகூன், மெசியர்-8 ஒண்முகிற்படலங்கள்). ஆனால் வெப்ப இயக்கமற்ற கதிரியக்கங்கள் பெரும்பாலும் தாழ்ந்த அதிர்வெண்ணுடையனவாகும். (எ.கா. நண்டு வடிவ ஒண்முகிற்படலம்). வெவ்வேறு ஒண்முகிற்படலங் களின் ஒளிர்தலுக்கு வெவ்வேறு மூலங்கள் காரண மாக இருக்கவேண்டும் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது. ஓர் ஒண்முகிற்படலத்தின் ஒளி மூலம் பற்றி அறிய வேண்டுமானால் அதன் நிறமாலையின் கதிர்வீச்சு அலைப்பகுதியை அளவிட்டறிதல் போது மானதாகும். ஒண்முகிற்படலத்தின் நிறமாலையில் காணப்படும் சிலவரிகளுக்கு ஹைட்ரஜன் மூலக்கூறு காரணமாகும். நிறமாலையை நுட்பமாக ஆய்ந்து ஒண்முகிற் படவத்தில் உள்ள தனிமங்களின் இயைபு கண்டறியப் பட்டுள்ளது. ஒண்முகிற்படலங்களில் கார்பன், நைட்ரஜன், புளூரின், கந்தகம், குளோரின், ஆர்கான் போன்ற தனிமங்களின் அயனிகளும் மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், கால்சியம், இரும்பு போன்ற உலோகங்களும் உள்ளன. ஒண்முகிற் படலத்தின் நிறமாலைகளில் வேறொரு சிறப்பும் காணப்படுகின்றது. ஆய்வுக் கூடங்களில் அறியப் பட்டுள்ள தனிமங்களின் நிறமாலைகளில் பிறவற்றில் காணப்படாத வேறு சில வன்மையான வரிகளும் காணப்பட்டமை முதலில் ஒரு புதிராகவே தோன்றி யது. சூரியனின் நிறமாலையில் காணப்படும் கெட்டியான வரிகளுக்குக் காரணம் ஹீலியம் என்று முதலில் கருதியது போல இந்நிற நிரல் வரிகளுக்கு நெபுலியம் (nebulium) என்ற கற்பனைத் தனிமம் இருக்க வேண்டும் என்று கருதினர். ஆனால் பின்னர் ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது போல நெபுலியம் கண்டுபிடிக்கப்படவில்லை. காரணமாக 1927 இல் போவன் என்பார் நெபுலியத்தின் நிற நிரல் எனக் கற்பனை செய்யப்பட்ட வரிகள்,