ஒத்ததிர்வு அயனியாக்க நிறமாலையியல் 555
மின்தடையின் அளவைச் சார்ந்திருக்கும். பக்க இசை வுச் சுற்று படம் 3இலும் அதிர்வெண்ணைப் பொறுத்து மின்னோட்டம் மாற்றம் பெறுவது படம் 4 இலும் காட்டப்பட்டுள்ளன. இதில் மின்சுற்று ஒத்திசைவு அதிர்வெண்ணில் பெருமத்தடையை அளித்து மின் னோட்டத்தைத் தடை செய்கிறது. எனவே, இதன் செயற்பாங்கு தொடரிணைப்பு முறைக்கு முற்றிலும் மாறுபட்டது. தேவையற்ற குறியீடுகளை ஒதுக்க இச் சுற்று பயன்படுகிறது. ஒத்ததிர்வு கட்ட ஒத்ததிர்வு (phase resonance), வீச்சு ஒத்ததிர்வு (amplitude resonance), இயல் ஒத்ததிர்வு என மூவகைப்படும். ஒரு சுற்றில் நுழை யும் சைன் வடிவ (sinusoidal) மின்னோட்டத்திற்கும், சுற்றின் இரு முனைகளுக்கிடையே தோன்றும் சைன் வடிவ மின்னழுத்தத்திற்கும் இடைப்பட்ட கட்டம் (phase) எந்த அதிர்வெண்ணில் சுழியாகிறதோ அதைக் கட்ட ஒத்ததிர்வு எனலாம். ஒரு சைன் வடிவ மின்னோட்டம் அல்லது மின் னழுத்தம் இசைவுச் சுற்றில் மின்னூட்டப் பெரும அலைவை எந்த அதிர்வெண்ணில் தோற்றுவிக் கிறதோ அதை வீச்சு ஒத்ததிர்வு என்று கூறலாம். வெளி விசைக் கிளர்ச்சி இல்லாதபோது இசைவுச் சுற்றின் அதிர்வு, இயல் ஒத்ததிர்வு எனப்படும். சம ஆற்றல் இழப்பு மிகக் குறைவாக உள்ள சுற்று களில் இம்மூவகைச் சுற்றுகளின் அதிர்வெண்கள் மானவை. எனவே அவற்றைப் பிரித்தறியத் தேவை ல்லை. வெற்றிடக் குழாய், டிரான்சிஸ்டர் ஆசியவற்றுடன் LCR சுற்றைத் தக்கமுறையில் இணைத்து அவற்றை இசைவுச் சுற்று யியற்றிகளாகச் (resonant circuit oscillators), செயல்பட வைக்கலாம். மின்னணுவியல் பெரும்பங்கு பெறும் இவ்வலை இயற்றிகள் மீயொலிகள் (ultra- sonic waves) தோற்றுவிக்கவும் பயன்படுகின்றன. அலை வானொலி ஏற்பிகளிலும், பரப்பிகளிலும் இசை வுச் சுற்றுகள் (tuning circuits) மூலம் ஒரு குறியீடு பிரித்தெடுக்கப்படுகிறது. இசைவுச்சுற்று ஒரு குறிப் பிட்ட அதிர்வெண் அல்லது மிகக் குறுகிய அதிர்வெண் பட்டைக்கு மட்டுமே ஒத்துணர்வு உடையதாக இருக்கிறது. எனவே குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட மின்னோட்டம் மட்டும் சுற்றின் மூலம் அனுமதிக்கப்படும். பல உலகின் பகுதிகளிலும் உள்ள ஒலிபரப்பு நிலையங்கள் பல குறியீடுகளை ஒலிபரப்புகின்றன. ஒவ்வொரு நிலையமும் அதற்கென ஒதுக்கப்பட்ட அதிர்வெண்ணுக்குப் பரப்பியை இசைவு செய்யும். ஏற்பி கேட்போரின் விருப்பத்திற்கேற்ற நிலையத் திற்கு சைவு செய்யப்பட வேண்டும்; அதாவது தேவையான வானொலி நிலையத்திற்கெனக் குறிப் பிடப்பட்ட அதிர்வெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண் ஒத்ததிர்வு அயனியாக்க நிறமாலையியல் 555 டும். இதற்குத் தொடர் இசைவுச் சுற்றுகள் பயன் படுகின்றன. சுற்றின் தேவையான அதிர்வெண்ணுக்கு ஒத்துணர்வு செய்ய மாறுமின்னேற்பி (variable capa- citor) பயன்படுகிறது. இதன் மின்தேக்கு திறனை மாற்றுவதன் மூலம் தேவையான ஒத்ததிர்வெண் ணைப் பெறலாம். செய்தித் தொடர்பில் தேவையான அதிர்வெண் ணைக் கடத்துவதிலும், தேவையற்ற அதிர்வெண் ணைத் தடுப்பதிலும் ஒத்ததிர்வு முக்கிய இடம் பெறுகிறது. ஒத்ததிர்வுத் தத்துவத்தைப் பயன்படுத்தி, தொலைபேசியின் இரட்டைக் கம்பிகள் மூலம் ஒரே நேரத்தில் பல செய்திகளை அனுப்ப இயலும். ஒவ் வொரு செய்தியும் ஒரு தனி ஊர்தி அதிர்வெண்ணால் (carrier frequency) பண்பேற்றம் (modulation) பெற்று, ஏற்பு முனையில் ஒத்ததிர்வு வடிப்பான்கள் (resonant fulters) மூலம் பிரித்தறியப்படும். மூ.நா.சீனிவாசன் ஒத்ததிர்வு அயனியாக்க நிறமாலையியல் அலை நீளத்தை மாற்றக்கூடிய ஒளி மூலங்களைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட அணு அல்லது மூலக் கூறிலிருந்து எலெக்ட்ரான்களை வெளியேற்றி அவற் றின் அணுவையும் மூலக்கூறு நிறமாலைகளையும் ஆராயும் முறை ஒத்ததிர்வு அயனியாக்க நிறமாலை யியல் எனப்படுகிறது. லேசரை அடிப்படையாகக் கொண்ட ஒத்ததிர்வு அயனியாக்க நிறமாலையியல் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் விகித எண்ணி (proportional counter) போன்ற அயனி யாக்கத் துலக்கிகள் பயன்படுகின்றன. அவற்றால் ஒற்றை அணுக்களைக்கூடக் கண்டுபிடித்து விட முடியும். இயற்பியல், வேதியியல், கடலியல், சுற்றுச் சூழல் அறிவியல் போன்ற துறைகளில் ஒத்ததிர்வு அயனியாக்கம். நிறமாலைக் கருவிகளும் ஒற்றை அணுத்துலக்கிகளும் பலவிதமான பணிகளில் ஈடு படுத்தப்படுகின்றன. என்ற ஓர் அணு அல்லது மூலக்கூறின் மேல் என்ற கோண அதிர்வெண்ணுள்ள ஃபோட்டான்கள் அடங் கிய ஒளி படுவதாக வைத்துக்கொண்டால், அந்தப் ஃபோட்டான்கள் ஒவ்வொன்றும் hw/2π ஆற்றல் கொண்டிருக்கும். ஓர் அணுவின் ஆற்றல் நிலைக்கும் அதன் ஏதாவது ஒரு கிளர்வுற்ற நிலைக்கும் இடையிலுள்ள ஆற்றல் வேறுபாடு hw/2r என்ற அளவுக்குச் சரியாகச் சமமாக இருக்கும்போது அந்த அணு ஒரு ஃபோட்டானை உட்கவர முடியும். சிறும் படம் 1 இல் A என்ற ஒரு குறிப்பிட்ட அணுவைக் கிளர்வூட்டும் அளவிலான அதிர்வெண்ணுள்ள ஒளி